III PRC
(1) மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் நம்மைப் போன்று ஒய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.
(2) ஓய்வூதியம் ஏதாவது ஒரு சில மத்திய அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனத்தில் இருந்தாலும், அவை அந்த நிறுவனத்தின் நிதி மூலமாகத்தான் கொடுக்கப்பட்ட வேண்டும் . நம்முடையதைப்போல அரசின் தொகுப்பு நிதியிலிருந்து அளிக்கப்படுவதில்லை .
(3) நமக்கு ஓய்வூதிய ரிவிஷனை PRC அறிவித்தால் , அது மற்ற அரசு சார்ந்த நிறுவனங்களை வெகுவாக பாதிக்கும்.
எனவேதான் நாம் BSNL ஓய்வூதியர்கள் ஓய்வூதிய நிர்ணயம் 7வது சம்பளக் கமிஷன் மூலம் IDA சம்பள விகிதத்தில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என கோருகிறோம். இதனை ஏற்றுக்கொள்ளாத சில ஓய்வூர்தியர் சங்கங்கள் மூன்றாவது சம்பள சீராய்வு குழுவிடம் இப்பணியை பணிக்க வேண்டும் என அரசை வற்புறுத்துகின்றன . ஆனால் அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை .அவர்கள் BSNL ஓய்வூதியர்களுக்கு பாதகம் செய்கிறார்கள்.
நாம் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை.. அவர்கள் மனம் குழம்பி போயிருப்பதனால்தான் அவர்கள் அந்த நிலைப்பாட்டினை எடுக்கின்றனர் .
நம் உறுதியான நிலைப்பாடு இதுதான் " BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தை , மத்திய அரசு ஊ தியர்கள் சம்பளங்கள் மாற்றியமைக்க அறிவிக்கப்பட்டுள்ள அதே fitment வகை முறைமையை (Formula ) நமக்கும் IDA சம்பள விகித அடிப்படையில் அளிக்கப்பட வேண்டும் " என்பதே. நம் கோரிக்கை ஏற்கப்பட்டால் ,இனி வரும் காலங்களில் அமைக்கப்படும் சம்பள கமிஷன்களின் சிபாரிசுகள் மூலம் நம் பென்ஷன்களும் மாற்றி IDA அடிப்படையில் அமைக்கப்படும் . நாம் பென்ஷன் ரிவிஷன் களுக்காக போராட வேண்டாம், கால விரயத்தைத் தவிர்க்கலாம். இதுவே ஒரு சரியான மற்றும் நிரந்தர தீர்வாக அமையும். இந்த மகத்துவத்தை மற்ற ஓய்வூதியர் சங்கங்களும் உணர்ந்து ஓரணியில் இணைந்தால் பொன்னுலகம் நமதே !!!
PSR
No comments:
Post a Comment