Wednesday, 10 August 2016



அன்புத்தோழர்களே ,தோழியர்களே,
வணக்கம்.

நம் சங்கத் தலைவர்கள்  க முத்தியாலு, ராமராவ் ஆகியோர் சென்னையில் CCA  அவர்களையும் மற்ற அதிகாரிகளையும் சந்தித்தது 78.2% நிலுவைத் தொகையினை விரைவாக வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தார்கள் .  "CCA   அலுவலகம் ISO  சான்றிதழ் 2008-ம் ஆண்டு பெற்றுள்ளது. அதனை இப்போது புதுப்பிக்க வேண்டும்,அதற்கான வேலைகளை வெற்றிகரமாக முடித்து ISO   சான்றிதழை புதுப்பித்து விட்டடோம். இனி 78.2% வேலைகள் விரைந்து முடிக்கப்படும் என்று கூறினார்கள்."
சரி ISO பெற்றதனால்  நமக்கென்ன பயன் ?
BSNL  ஊழியர்கள்  ஓய்வு பெற்ற 10 வேலை நாட்களுக்குள் அவர்களின் பென்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவுறும்..
மேலும் நாம் அனுப்பும் கோரிக்கைகளுக்கு உடனடியாக பெறுகை  ஒப்பம் (Acknowledge)  வழங்கப்படும்., மேலும் குறிப்பிட்ட தினங்களுக்குள் அப்  பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

இப்போது மூன்று முக்கிய பணிகள் உடனடியாக முடிக்கப்பட்ட வேண்டும்.அவையாவன :-
(1) ஏழாவது சம்பளக்கமிசன்  பரிந்துரையின் பிரகாரம் DOT  ஓய்வுஊதியர்களுக்கு  பென்ஷன் தொகைகள்  மாற்றி அமைக்கப்படவேண்டும்.
(2) 10 ஆண்டுகள் சேவை செய்தவர்களுக்கும் முழு ஓய்வுஊதியம் வழங்கப்பட வேண்டும்.
(3) அத்துடன் 78.2% ஓய்வூதிய உயர்வும் வழங்குவதற்கான பணிகளையும் முடிக்க வேண்டும். என்றார்கள்.
நம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்ள , அத்துறையில் அனுபவப்பட்ட முன்னாள் அதிகாரிகள் இந்நாள் ஓய்வூதியர்கள் சமுகப்பணியாக மேற்கொள்ள தயாராக உள்ளார்கள் , விருப்பப்பட்டால் அவர்களின் சேவைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்  என்று நம் தலைவர்கள் கூறியதற்கு ,  மிக்க நன்றி . இப்போதைக்கு தேவைப்படாது. தேவை ஏற்படும்போது கேட்டு அவர்கள் பணிகளையும் பெற்றுக்கொள்வதாக நன்றியுடன் கூறியுள்ளனர்.
செயற்கரிய செய்வார் பெரியர் ........ எனும் வள்ளுவப்பெருந்தகை வாக்குக்கேற்ப செயற்கரிய செயல்களை நாம் செய்வதால்தான் எல்லோரும் பாராட்டுகின்றனர் . வாழ்த்துகின்றனர்.

தோழமை வாழ்த்துக்களுடன் 

பி.அருணாசலம்
தலைவர் ,தமிழ் மாநில மாநாடு வரவேற்பு குழு
94430 59011

ஆர். திருவேங்கடசாமி 
கோவை மாவட்ட செயலர்.
94871 64321

க.சிவகுமாரன் 
பொருளாளர் , தமிழ் மாநில மாநாடு வரவேற்பு குழு
94861 05119

நா .மோஹன் 
வெப்  மாஸ்டர்
94454 14984










No comments:

Post a Comment