Friday, 26 August 2016




என் அருமைத்தோழர்களே/தோழியர்களே ,
உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் சுகமாக நலமாக உங்கள் இல்லம் திரும்பியிருப்பீர்கள் என எண்ணுகிறேன். தமிழ் மாநில ஐந்தாம் மாநாட்டினை கோவையில் நடத்திட வேண்டுமென்று எங்களை பணித்த மாநில சங்கத்திற்கும் , அத்துடன் நில்லாமல் மாநாடு மிக சிறப்பாக நடைபெறவேண்டுமென்று நிதி உதவியும் செய்திட்ட மேன்மைமிகு தன்மைக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

மாவட்டத் தலைவர் தோழர் குருசாமி, வரவேற்பு குழு தலைவர் தோழர் பா .அருணாச்சலம், வரவேற்பு குழு பொருளாளர் தோழர் K .சிவகுமாரன் அவர்களுக்கும் மற்ற கமிட்டி, உப கமிட்டி உறுப்பினர்களுக்கும் கரம் குவித்து சிரம் தாழ்த்தி நன்றியறிதலை காணிக்கையாக்குகிறோம்.

மிக்க குறைந்த வாடகையில் தோழர் சிவகுமாரன் மற்றும் அருணாச்சலம் ஆகியோர் நகரின் மிக சிறப்பான , நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த மண்டபத்தை ஏற்பாடு செய்ததற்கும் , இந்த மண்டபத்தையும் அறைகளையும் ஒதுக்கித்த தந்த ஸ்ரீ அய்யப்ப பூஜா கமிட்டி உறுப்பினர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமை சங்கங்களை சார்ந்த தோழர்கள் R .பட்டாபிராமன் ( JCM  உறுப்பினர், NFTEBSNL ) பாலசுப்ரமணியன் (AIFA  ), K .ராகவேந்திரன் (GS AIPRPA ), போஸ்டர்கள் அடித்துக்கொடுத்த எல்கா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கும், மாநாடு சிறக்க இங்கிலாந்திலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பிய தோழியர் கல்யாணி ஹரிஹரன் அவர்களுக்கும், மாநாட்டு பயன்பாட்டிற்காக தேயிலைத்தூள் வழங்கிய தோழர் KG  ரங்கன் (தலைவர், NFTE  குன்னூர் கிளை) அவர்களுக்கும், நிதி உதவி அளித்த 
KG  ஆஸ்பத்திரி கோவை நிர்வாகத்திற்கும்  R-கோல்ட் ஸ்ரீவாட்சா குழுமம் மற்றும் GVG  குழும நிறுவனங்களின் MD திரு M .வேலுசாமி MSc ( மான்செஸ்டர்) JMD  திரு M.அமர்நாத் BSc  அவர்களுக்கும் எங்களது நெஞ்சு நிறைந்த நன்றிதனை உரித்தாக்குகிறோம்.

இம்மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற பெருமளவில் நிதி உதவி செய்துள்ள நம் உறுப்பினர்களுக்கும், கண் துஞ்சாது அயராது வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் விரைவாக பாங்காக கடமையாற்றிய நம் அனைத்து தோழர்களுக்கும்,ஒலி ,ஒளி அமைப்பாளர்களுக்கும், வீடியோ , நிழற்பட வல்லுனர்களும், நாவில் நடன மாட்டும் சுவையுடன் கூடிய உணவளித்த சமையற்கலை விற்பன்னர்களுக்கும் மற்றும் செய்த்திதொடர்பு ,மீடியா நண்பர்களுக்கும் செய்தித் தொடர்பு ஏற்பாடு செய்த தோழர் R  பெருமாள் அவர்களுக்கும் , அரங்க நிர்வாகத்தினருக்கும், பலவிதமான குடும்ப பொறுப்புகளிலிருந்து சிறிது காலம் விடுபட்டு , நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து மாநாட்டில் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பு செய்த அனைத்து சார்பாளர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும்  எங்கள் உள்ளம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒரு பெருந்தொகையினை நன்கொடையாக அளித்ததோடு நில்லாமல் இலவசமாக ஒரு சிறப்புமிகு மாஜிக் ஷோ நடத்திக்காட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நம் தோழர் சூப்பர் செல்வம் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

அரங்க நிர்வாகிகள் தோழர் C பழனிசாமி  மற்றும் A .கோவிந்தராஜ் நிதி ஆலோசகர் தோழர் S .ஆறுமுகம் ,சார்பாளர்கள் தங்க ஏற்பாடு, போக்குவரத்து கமிட்டியைச்சார்ந்த S .பூபாலகிருஷ்ணன் , S ,உதயகுமார் , உணவுக்குழு அன்புரோஸ் , ஜெயபாலன் பிச்சமுத்து , வரவேற்பு குழு தலைவியர் தோழியர் சிவகாம சுந்தரி , சார்பாளர்/பார்வையாளர் சார்பு கட்டணம் வசூல் செய்த தோழர் K .சிவகுமாரன் ,மாவட்ட நன்கொடை மட்டும் உறுப்பினர் பதிவு குழு தோழர் R .பாலசுப்ரமணியன் , P .பாலன் , கொடிமரம் தியாகிகள் ஸ்தூபி , தோரணம் ஏற்பாடு செய்த தோழர் R .அரங்கநாதன் , விளம்பர பதாகைகள் நிர்மாண வேலைகள் தோழர் இராமகிருஷ்ணன் , உதயகுமாரன் overall supervision செய்திட்ட தோழர் திருமலை குமாரசாமி ஆகியோருக்கு எங்கள் நன்றி .

மாநாட்டினை கோவையில் நடத்திட வேண்டும் என்று விவாதித்த முதல் நாள் கூட்டத்திலேயே மாநாட்டிற்கு தேவையான அரிசி , பழம் தேங்காய் என அனைத்தையும் இயற்கை சூழலில் விளைவித்ததை அளித்து உதவிய இயற்கை ஆர்வலர் தோழர் R .தனராஜ் அவர்களுக்கு எங்கள் மேலான நன்றி.

78.2 சதவீத IDA  பெற்றுத்தந்த நம் சங்கத்தின் வெற்றி மாநாடு சிறப்பாக நடந்தேறியது. இன்னும் பல வெற்றிக்கனிகளை பெற்று மகிழ நாம் ஒற்றுமையாக நம் சங்க கொடியின் கீழ் இணைவோம். இணையாமல் இருக்கும் மற்ற தோழர்களையும் இணைக்க பாடுபடுவோம்.

ஒன்றுபடுவோம், இணைந்திருப்போம் பாடுபடுவோம் வெற்றி பெறுவோம் .
        
                                                         நன்றி !   வணக்கம் !! 
இவண் 
R .திருவேங்கடசாமி 
வரவேற்புக்குழு பொது செயலர் 
கோவை மாவட்ட செயலர் 
94871 64321 


No comments:

Post a Comment