Wednesday 19 May 2021

 

அருமை தோழர்களே!
 வணக்கம்
மாநில சங்கத்தின் வேண்டுகோளை  ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நம்முடைய கோவை SSA விலிருந்து பல தோழர்கள் நிதியை அனுப்பி உள்ளார்கள். அனுப்பியவர்கள் தகவலின் அடிப்படையில் இதுவரை 12000 ரூபாய் சென்றுள்ளது.  இன்னும் நம்முடைய தோழர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.  குறைந்தது கோவை பதிலிலிருந்து 70 to 80 ஆயிரம் ரூபாய் அனுப்பினல் நமக்குப் பெருமையாக இருக்கும் . இந்த கொரானா காலத்தில் யாரிடமும் நேரில் சென்று வசூலிக்க இயலாது. சீப் மினிஸ்டர் உடைய நிதியின் வங்கி கணக்கு இன்றைய பதிவில் கொடுத்துள்ளோம் குறைந்த அளவு நிதி கொடுக்க விரும்புவர்கள் தயவுசெய்து நம்முடைய மாவட்ட சங்க பொருளாளர் அவர்களை  அணுக வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் . 
நம்முடைய கோவை பகுதியில் பல நல்ல தோழர்களை நாம் இழந்திருக்கிறோம் நாம்  வேறு நோய் காரணமாகவும் பல தோழர்கள் நம்மிடம் இல்லை அரசு அறிவித்த முகக் கவசம் தனிமனித இடைவெளி போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கிடைக்கிற பொருளை பயன்படுத்தி நம்முடைய அன்றாட தேவைகளை   பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் அருமை தோழர்களே நம் அருகாமையில் இருக்கும் சாதாரண பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் கூட்டு சேர்ந்து உதவி புரியலாம் பணத்தாலும் பொருளாலும் உணவுப் பொருளாகும் செய்வது காலத்தின் கட்டாயம் . நாம் ஏதோ வகையில் கொடுத்து வைத்தவர்கள் பென்சன் தொகை வந்துகொண்டிருக்கிறது. இதை நினைவில் கொள்ள வேண்டும் இதற்கு காரணமான தலைவர்களை நாம் நினைவு கூர்வது நம் நன்றியை செலுத்துவதாக உள்ளது முதலமைச்சர் நிதி கொடுப்பது என்பது நம்முடைய சமுதாய கடமை. 
 நம்முடைய தோழியர் வள்ளி முருகேசன் அவர்கள் சிலருடன் ஒன்று சேர்ந்து தினம்தோறும் 50 நபர்களுக்கு உணவு சமைத்து கோவிலில் வைத்து கொடுக்கிறார்  நாமும் நம்மால் முடிந்த அன்னதானத்தை தேவையானவர்களுக்கு சென்று சேர்க்க வேண்டும் அந்தப் பணியில் நம்முடைய தோழர் தங்கவேலு Retd SDE மற்றும் Retd DGM  வாசுதேவன் போன்றவர்கள் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் இதுபோல சேவை செய்பவர்கள் பற்றிய விவரம் தேவை. நம்முடைய சூப்பர் செல்வம் ரோட்டரி கிளப் மூலமாக தன்னுடைய சர்ச் அமைப்பு மூலமாக பலருக்கு உதவி செய்துகொண்டு வருகிறார்.  இது போதாது. இந்த காலத்தை கடந்து மீண்டும் வசந்தம் வர ஒன்று சேர்ந்து வேண்டுகோள் விடுப்போம். 
தோழர்களே வீட்டிலேயே இருங்கள். கவனமாய் இருங்கள். நோய்  அணுகாமல் காத்திருங்கள். மாவட்ட சங்கம் நம் மூத்த தோழர்கள் உடைய ஆசீர்வாதத்தையும் இளையவர்கள் வாழ்த்தையும் எல்லோருக்கும் விருப்பு வெறுப்பின்றி நாம் செலுத்துவோம்.
 நன்றியுடன்
அருணாச்சலம்
மாநில உதவி  செயலர்
Tamilnadu Government Corona Relief Fund Bank Particulars



 

 


Thursday 13 May 2021

 


 

அருமை தோழர்களே!

BSNL ல் பணியாற்றும் ஓய்வு பெற்ற  அத்தனை பேர்களுடைய நலத்தையும் ஆரோக்கியத்தையும் நேசிக்கிற முகமாக இந்த பதிவை பதிவு செய்ய விரும்புகிறேன் .

இந்த காலகட்டத்தில் பலர் நம்மிடமிருந்து பிரிந்து சென்றுள்ளனர் தோழர் நடராஜன் தோழர் சண்முகம் தோழியர் கண்ணம்மாள் சாமியப்பன் சோழர்  ரமேஷ்தோழியர் லலிதாம்பிகை மற்றும் பலர் மாண்டு உள்ளனர்.  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலர் மீண்டு வந்துள்ளனர்.  மனதுக்கு மிகவும் கவலை தரக்கூடிய செய்தியாகும் இன்னும் பெயர் விட்டுப்போன பல நண்பர்கள் ஏன் கல்தூண் ராமச்சந்திரன், அவருடைய மனைவி,  உடுமலை சௌந்தரபாண்டியன் போன்றவர்களை  நாம் இழந்து நிற்கிறோம் நினைவுக்கு வராத அந்த நம்முடைய நண்பர்களுடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும். நம்முடைய உறுப்பினர்கள் தனக்கு ஓய்வான நேரத்தில் தங்களுடைய நண்பர்களைப் பற்றி மனதால் அசைபோட்டு அவர்கள் ஆத்மா சாந்தி பெற கூட்டு வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.  

நம்முடைய கோவை மாவட்ட சங்கத்தை பொறுத்தவரையில் பல ஜாம்பவான்களின் கடின உழைப்பால்  சங்கம் கட்டிக்  காக்கபட்டு இருக்கிறது.  மறைந்த சுப்பையன்,  தோழர்  ஐர்ஐஐ,   தோழர் வி வி எஸ் தோழர் U N S  சீனிவாசன் போன்றவர்கள் பணிசெய்த சங்கம் இது தற்போதைய  சீனியர் தோழர்கள்  அர்ஜுனன் சர்குணம் , கிருஷ்ணசாமி போன்றவர்கள், இன்று நாம் அனுபவிக்கின்ற    சலுகைகளுக்கு காரணமாக நின்று போராடியவர்கள்.

தோழியர் பகவதி,  தோழியர் சிவகாமசுந்தரி போன்ற மூத்த தோழர்கள்  தோழியர்கள் பணி மிகவும் பாராட்டுக்குரியது. அந்தக் கடினமான காலத்தில் சங்கத்தை வழி நடத்திய அவருடைய வழிகாட்டுதலை நாம் தற்போது எண்ணிப்பார்க்க வேண்டும்.  இந்த கொரோனா  காலத்தில் கூட தோழர் உமேஷ் தோழர் ரவி தோழர்   சங்கிலியன் தோழர் மோகன் போன்றவர்கள் இன்னும்  அலுவகத்தில் நமக்காக பணி செய்து கொண்டிருக்கிறார்கள் தோழர்களே நம்முடைய மாவட்ட சங்கம் பல முயற்சி எடுத்தோம்.  நிர்வாகத்துடன் கலந்துரையாடல் செய்ய முடியவில்லை.  பல பிரச்சனைகள்   தேங்கி உள்ளன. இந்த கொரோனா  காலத்தினால் ஆட்கள் பற்றாக்குறை என பதிலளிக்கிறார்கள்.

மாநிலச் சங்கம் பெரு முயற்சிக்குப் பிறகு உடல் ஊனமுற்றவர்கள் நம்  பென்ஷனர் உடைய வாரிசுகளுக்கு,  குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு PPO  வில் co authorisation செய்வதற்கு CCA  ஒத்துக்கொண்டு உள்ளனர் . முதலில் 5 பேர்கள்களுக்கு இவ்விதம் co authorisation ( உரிய அங்கீகாரம்)  வழங்கப்பட்டுள்ளது .. இது தவிர மாநிலத்தில் வேறு புதிய  உடல் ஊனமுற்றோர் வாரிசு சான்று பெற்றபின் அனுப்பினால்  அவற்றையும்  பரிசீலிப்பதாக நிர்வாகம் கூறியுள்ளது.  .மெடிக்கல் பில் மெடிக்கல் அலவன்ஸ் போன்றவற்றில் நிதி பற்றாக்குறையால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மற்றபடி கோவையில் தேங்கியுள்ள இரண்டு பிரச்சினைகள் மாநில மட்டத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் காலம் மாறி வசந்தம் பூத்து நாம் ஒவ்வொருவரும் நேரடியாக சந்தித்து ஒருவருக்கொருவர் பேசி கூட்டாக நிகழ்வுகளைநடத்த இறைவன் அருள் புரிய வேண்டும் . இந்த கொரோனா காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக கவனமாக அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை சரியாக மேற்கொண்டு நம்மை காப்பாற்றிக்கொள்வது மிகவும் அவசியம். இன்னும் ஒரு உறுப்பினரை கூட இழக்க நம்மால் முடியாது.  சங்கம் சார்ந்த மாற்று சங்கத்தில் இருந்தாலும் தொலைபேசித் துறையில் உள்ள அனைத்து ஓய்வுபெற்ற  மற்றும் பணியில் பணியாற்றும் நம் இளம் தோழர்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே நம்முடைய வேண்டுதல். ஒரு மகிழ்ச்சியான செய்தி பொள்ளாச்சி சூப்பர்வைசர் தோழர் இகே சுப்பிரமணியம் தன்னுடைய 90 வயது பூர்த்தியானதை வெளிப்படுத்தி மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை தந்துள்ளார் புதிய இளைஞர்களை இந்த வயதிலும் வாழ்த்தி உள்ளார்கள் இதுபோன்ற இன்னும் பல நல்ல செயல்கள் நடைபெற வேண்டும் .

நம்முடைய மாவட்ட செயலர் தோழர்  ஆர் டி அவர்கள் கொரானா பாதிப்பிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். அவர் நலம் பெற நாம் அனைவரும் மீண்டும் இறைவனை வேண்டுவோம். அனைவருக்கும் ஆசியும் வயதானவர்களுக்கு வணக்கத்தையும் நாம் ஒன்று சேர்ந்து தெரிவிப்போம். இந்தப் பதிவில் பல தோழர்கள் தோழியர்கள் சங்க செயல்பாட்டுக்கு உடலாலும் நியாலும் உதவியுள்ளனர். பலர் வெளியே தெரியாமல் சங்கம் வளர்ப்பதற்கு  காரணமாக இருந்துள்ளனர். அவர்களுடைய  பெயர்கள் விடுபட்டு இருந்தாலும், அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் நம்முடைய நன்றிகள்.

தோழமை வாழ்த்துகளுடன்

இப்படிக்கு
அருணாச்சலம்
மாநில உதவி செயலாளர்
கோவை.


 


Wednesday 12 May 2021

 நினைவேந்தல்.

அருமை தோழர்களே,

 AIBSNLPWA கோவை மாவட்டத்தில் மிகச்சிறந்த செயல்பாட்டாளர் தோழர் ராமகிருஷ்ணன் JTO  (Retd) இயற்கை எய்தி உள்ளார் அவரதுஇழப்பு நமது பகுதிக்கு குறிப்பாக  AIBSNLPWA  சங்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் குறிப்பாக எனக்கு வலது கரம் போல செயல்பட்ட அருமை நண்பர் இப்போது இல்லை.  அவரது செயல்பாடு அவரது கட்டுப்பாடு பிடிமானம் போன்றவை நமது சங்கத்தை உயர்த்த மிகவும் பக்கபலமாக இருந்தது. புயலாலும்  வெள்ளத்தாலும் நம்முடைய நாட்டில் பெரும் இழப்பு வந்தபோது  மாநிலச் சங்கம் மத்திய சங்கம் அறைகூவலை ஏற்று நிதியை திரட்டியதில் அவருடைய பங்கு மிக மிகப் பெரிது ஒவ்வொரு தோழரையும் அழைத்து அவர் தருவதாகச் சொன்ன பணத்தை வரவு வைத்து ஒட்டுமொத்தமாக சேர்த்து தேவைப்பட்ட போது அவரும், தோழர் பாரதி முத்துவும் & தோழர் சிவகுமார் முன்பணம் கொடுத்து கோவை மாவட்டத்தின்  டார்கெட்டை நிறைவு செய்துள்ளார்.  எந்த புதிய உறுப்பினர் சேர்ந்தாலும் அவர்களுடைய விவரங்களை தனியாக குறிப்பெடுத்து மெம்பர்ஷிப் லிஸ்ட் மெயின்டைன் செய்வார்.

நம்முடைய கடந்த மாநில மாநாட்டிற்கும் மற்றும் பூரியில் நடைபெற்ற அகில இந்திய      மாநாட்டுக்கும் பெரும் துணை நின்றார்.  சுமார் 35 உறுப்பினர்களை  அதுவும் வயதானவர்களை கூட்டி சென்று பூரியை சுற்றிக் காண்பித்து அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து ரயிலில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்த கடமை ஜெகதீஸ்வரன், அம்புரோஸ் போன்றவர்களுடள்  ராமகிருஷ்ணன் பங்கு மிக மிக சிறப்புக்குரியது .

ஒவ்வொரு மாத வியாழக்கிழமை நடைபெறும் நமது உறுப்பினர் பிறந்த நாள் விழாக்களை நடத்தும் அவரது பாங்கு பாராட்டுக்குரியது. நம்முடைய மாநாடுகளில் பேனர் தயாரிப்பது,  நோட்டீஸ் தயார்செய்வது, அரங்கை அலங்கரிப்பது போன்றவற்றில் அவருடைய கை வண்ணம் நிச்சயம் இருக்கும்.  குறிப்பாக சொல்வதானால் நம்முடைய சங்கத்திற்கு இதுபோன்று முன்னின்று நடத்துபவர்கள் இனி யார் என்ற கேள்வி நிச்சயம் மனதில் எழுகிறது . அகில இந்திய செய்திகள் வெளியிடுவதிலும் மாநிலச் சங்கத்திற்கு தாக்குதல் சொல்வதையும் மிகத்துடிப்புடள்  ஒவ்வொரு நாளும் சங்க அலுவலகம் வந்து அங்கு வரும் உறுப்பினர்  குறையை தீர்ப்பதிலும் அவர் கறார் பேர்வழி.

அவரை இழந்து வாடும் அவரது  குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கோவை மாவட்ட சங்க உறுப்பினர்கள் சார்பாக  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறோம் .

நன்றியுடன்,
 B.அருணாச்சலம்
மாநில உதவி செயலாளர்