Thursday 13 May 2021

 

அருமை தோழர்களே!

BSNL ல் பணியாற்றும் ஓய்வு பெற்ற  அத்தனை பேர்களுடைய நலத்தையும் ஆரோக்கியத்தையும் நேசிக்கிற முகமாக இந்த பதிவை பதிவு செய்ய விரும்புகிறேன் .

இந்த காலகட்டத்தில் பலர் நம்மிடமிருந்து பிரிந்து சென்றுள்ளனர் தோழர் நடராஜன் தோழர் சண்முகம் தோழியர் கண்ணம்மாள் சாமியப்பன் சோழர்  ரமேஷ்தோழியர் லலிதாம்பிகை மற்றும் பலர் மாண்டு உள்ளனர்.  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலர் மீண்டு வந்துள்ளனர்.  மனதுக்கு மிகவும் கவலை தரக்கூடிய செய்தியாகும் இன்னும் பெயர் விட்டுப்போன பல நண்பர்கள் ஏன் கல்தூண் ராமச்சந்திரன், அவருடைய மனைவி,  உடுமலை சௌந்தரபாண்டியன் போன்றவர்களை  நாம் இழந்து நிற்கிறோம் நினைவுக்கு வராத அந்த நம்முடைய நண்பர்களுடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும். நம்முடைய உறுப்பினர்கள் தனக்கு ஓய்வான நேரத்தில் தங்களுடைய நண்பர்களைப் பற்றி மனதால் அசைபோட்டு அவர்கள் ஆத்மா சாந்தி பெற கூட்டு வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.  

நம்முடைய கோவை மாவட்ட சங்கத்தை பொறுத்தவரையில் பல ஜாம்பவான்களின் கடின உழைப்பால்  சங்கம் கட்டிக்  காக்கபட்டு இருக்கிறது.  மறைந்த சுப்பையன்,  தோழர்  ஐர்ஐஐ,   தோழர் வி வி எஸ் தோழர் U N S  சீனிவாசன் போன்றவர்கள் பணிசெய்த சங்கம் இது தற்போதைய  சீனியர் தோழர்கள்  அர்ஜுனன் சர்குணம் , கிருஷ்ணசாமி போன்றவர்கள், இன்று நாம் அனுபவிக்கின்ற    சலுகைகளுக்கு காரணமாக நின்று போராடியவர்கள்.

தோழியர் பகவதி,  தோழியர் சிவகாமசுந்தரி போன்ற மூத்த தோழர்கள்  தோழியர்கள் பணி மிகவும் பாராட்டுக்குரியது. அந்தக் கடினமான காலத்தில் சங்கத்தை வழி நடத்திய அவருடைய வழிகாட்டுதலை நாம் தற்போது எண்ணிப்பார்க்க வேண்டும்.  இந்த கொரோனா  காலத்தில் கூட தோழர் உமேஷ் தோழர் ரவி தோழர்   சங்கிலியன் தோழர் மோகன் போன்றவர்கள் இன்னும்  அலுவகத்தில் நமக்காக பணி செய்து கொண்டிருக்கிறார்கள் தோழர்களே நம்முடைய மாவட்ட சங்கம் பல முயற்சி எடுத்தோம்.  நிர்வாகத்துடன் கலந்துரையாடல் செய்ய முடியவில்லை.  பல பிரச்சனைகள்   தேங்கி உள்ளன. இந்த கொரோனா  காலத்தினால் ஆட்கள் பற்றாக்குறை என பதிலளிக்கிறார்கள்.

மாநிலச் சங்கம் பெரு முயற்சிக்குப் பிறகு உடல் ஊனமுற்றவர்கள் நம்  பென்ஷனர் உடைய வாரிசுகளுக்கு,  குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு PPO  வில் co authorisation செய்வதற்கு CCA  ஒத்துக்கொண்டு உள்ளனர் . முதலில் 5 பேர்கள்களுக்கு இவ்விதம் co authorisation ( உரிய அங்கீகாரம்)  வழங்கப்பட்டுள்ளது .. இது தவிர மாநிலத்தில் வேறு புதிய  உடல் ஊனமுற்றோர் வாரிசு சான்று பெற்றபின் அனுப்பினால்  அவற்றையும்  பரிசீலிப்பதாக நிர்வாகம் கூறியுள்ளது.  .மெடிக்கல் பில் மெடிக்கல் அலவன்ஸ் போன்றவற்றில் நிதி பற்றாக்குறையால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மற்றபடி கோவையில் தேங்கியுள்ள இரண்டு பிரச்சினைகள் மாநில மட்டத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் காலம் மாறி வசந்தம் பூத்து நாம் ஒவ்வொருவரும் நேரடியாக சந்தித்து ஒருவருக்கொருவர் பேசி கூட்டாக நிகழ்வுகளைநடத்த இறைவன் அருள் புரிய வேண்டும் . இந்த கொரோனா காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக கவனமாக அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை சரியாக மேற்கொண்டு நம்மை காப்பாற்றிக்கொள்வது மிகவும் அவசியம். இன்னும் ஒரு உறுப்பினரை கூட இழக்க நம்மால் முடியாது.  சங்கம் சார்ந்த மாற்று சங்கத்தில் இருந்தாலும் தொலைபேசித் துறையில் உள்ள அனைத்து ஓய்வுபெற்ற  மற்றும் பணியில் பணியாற்றும் நம் இளம் தோழர்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே நம்முடைய வேண்டுதல். ஒரு மகிழ்ச்சியான செய்தி பொள்ளாச்சி சூப்பர்வைசர் தோழர் இகே சுப்பிரமணியம் தன்னுடைய 90 வயது பூர்த்தியானதை வெளிப்படுத்தி மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை தந்துள்ளார் புதிய இளைஞர்களை இந்த வயதிலும் வாழ்த்தி உள்ளார்கள் இதுபோன்ற இன்னும் பல நல்ல செயல்கள் நடைபெற வேண்டும் .

நம்முடைய மாவட்ட செயலர் தோழர்  ஆர் டி அவர்கள் கொரானா பாதிப்பிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். அவர் நலம் பெற நாம் அனைவரும் மீண்டும் இறைவனை வேண்டுவோம். அனைவருக்கும் ஆசியும் வயதானவர்களுக்கு வணக்கத்தையும் நாம் ஒன்று சேர்ந்து தெரிவிப்போம். இந்தப் பதிவில் பல தோழர்கள் தோழியர்கள் சங்க செயல்பாட்டுக்கு உடலாலும் நியாலும் உதவியுள்ளனர். பலர் வெளியே தெரியாமல் சங்கம் வளர்ப்பதற்கு  காரணமாக இருந்துள்ளனர். அவர்களுடைய  பெயர்கள் விடுபட்டு இருந்தாலும், அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் நம்முடைய நன்றிகள்.

தோழமை வாழ்த்துகளுடன்

இப்படிக்கு
அருணாச்சலம்
மாநில உதவி செயலாளர்
கோவை.


 


No comments:

Post a Comment