நினைவேந்தல்.
அருமை தோழர்களே,
AIBSNLPWA
கோவை மாவட்டத்தில் மிகச்சிறந்த செயல்பாட்டாளர் தோழர் ராமகிருஷ்ணன் JTO (Retd) இயற்கை எய்தி உள்ளார் அவரதுஇழப்பு நமது பகுதிக்கு குறிப்பாக AIBSNLPWA சங்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் குறிப்பாக எனக்கு வலது
கரம் போல செயல்பட்ட அருமை நண்பர் இப்போது இல்லை. அவரது செயல்பாடு அவரது கட்டுப்பாடு பிடிமானம் போன்றவை நமது சங்கத்தை உயர்த்த மிகவும் பக்கபலமாக இருந்தது. புயலாலும்
வெள்ளத்தாலும் நம்முடைய நாட்டில் பெரும் இழப்பு வந்தபோது
மாநிலச் சங்கம் மத்திய சங்கம் அறைகூவலை ஏற்று நிதியை திரட்டியதில் அவருடைய பங்கு மிக மிகப் பெரிது ஒவ்வொரு தோழரையும் அழைத்து அவர் தருவதாகச் சொன்ன பணத்தை வரவு வைத்து ஒட்டுமொத்தமாக சேர்த்து தேவைப்பட்ட போது அவரும், தோழர் பாரதி முத்துவும் & தோழர் சிவகுமார் முன்பணம் கொடுத்து கோவை மாவட்டத்தின் டார்கெட்டை நிறைவு செய்துள்ளார்.
எந்த புதிய உறுப்பினர் சேர்ந்தாலும் அவர்களுடைய விவரங்களை தனியாக குறிப்பெடுத்து மெம்பர்ஷிப் லிஸ்ட் மெயின்டைன் செய்வார்.
நம்முடைய கடந்த
மாநில மாநாட்டிற்கும்
மற்றும் பூரியில் நடைபெற்ற
அகில இந்திய மாநாட்டுக்கும் பெரும் துணை நின்றார்.
சுமார் 35 உறுப்பினர்களை அதுவும் வயதானவர்களை கூட்டி
சென்று பூரியை சுற்றிக் காண்பித்து அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து ரயிலில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்த
கடமை ஜெகதீஸ்வரன், அம்புரோஸ் போன்றவர்களுடள் ராமகிருஷ்ணன் பங்கு மிக மிக சிறப்புக்குரியது .
ஒவ்வொரு மாத வியாழக்கிழமை நடைபெறும் நமது உறுப்பினர் பிறந்த நாள் விழாக்களை நடத்தும் அவரது பாங்கு பாராட்டுக்குரியது. நம்முடைய மாநாடுகளில் பேனர் தயாரிப்பது,
நோட்டீஸ் தயார்செய்வது, அரங்கை அலங்கரிப்பது போன்றவற்றில் அவருடைய கை வண்ணம் நிச்சயம் இருக்கும்.
குறிப்பாக சொல்வதானால் நம்முடைய சங்கத்திற்கு இதுபோன்று முன்னின்று நடத்துபவர்கள் இனி யார் என்ற கேள்வி நிச்சயம் மனதில் எழுகிறது . அகில இந்திய செய்திகள் வெளியிடுவதிலும் மாநிலச் சங்கத்திற்கு தாக்குதல் சொல்வதையும் மிகத்துடிப்புடள் ஒவ்வொரு நாளும் சங்க அலுவலகம் வந்து அங்கு வரும் உறுப்பினர் குறையை தீர்ப்பதிலும் அவர் கறார் பேர்வழி.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கோவை மாவட்ட சங்க உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறோம்
.
B.அருணாச்சலம்
No comments:
Post a Comment