Monday, 31 December 2018

Saturday, 29 December 2018

SAMPANN நேரடி காணொளி ஒளிபரப்பு
இன்று இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் ஓய்வூதியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பட்டுவாடாவை நேரடியாகவே அவரவர்கள் வங்கி கணக்கில் செலுத்தும் SAMPANN ( SYSTEM FOR ACCOUNTING AND MANAGEMENT OF PENSIONS) திட்டத்தினை வாரணாசியில் காணொளி கண்காட்சி மூலம் துவக்கி வைத்து பேசினார். அந்த காணொளியினை நேரடியாக நேரடி ஒளி/ஒலி பரப்பு சென்னை அண்ணாசாலை தொலைபேசி நிலாயத்தில் உள்ள "ஹால் ஆப் இன்ஸபிரேஷன் " ஹாலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த வாய்ப்பினை நம் சங்கம் அதன் தலைவர்கள் நல்ல முறையில் பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி வாரணாசியில் பிரதமரின் மற்ற அலுவல்கள் காரனாக துவங்க சற்று கால தாமதமானது.அந்த சமயத்தை பயன்படுத்தி PCCA மற்றும் CCA அவர்களுடன் கலந்தாலோசனை நடைபெற்றது. இந்த திட்டத்தின் சாதகங்களை தன் உரையில் எடுத்துரைத்தார் PCCA அவர்கள். 
நம்  சங்கத்தலைவர்கள் தோழர்கள் G.நடராஜன் , K.முத்தியாலு, T.S. விட்டோபன், V.ரத்னா , V. ராமராவ் , R. வெங்கடாசலம் , N.S. தீனதயாளன் , S. காளிதாஸ் , சென்னை தொலைபேசி மாநில M.முனுசாமி, S.தங்கராஜ் , M.கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள் .ஓய்வூதியர்களின் குறைகள் இந்த ஏற்பாட்டின் மூலம் விரைவில் தீர்க்கப்பட்டால்தான் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனக்கொள்ளலாம் . தபால் நிலையம் சேமிப்பு அக்கவுண்ட் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த திட்டம் விஸ்தரிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர்.
CCA திரு பிரதான் அவர்கள் பேசும்போது KYP  என்பது அத்தியாவசியமானதல்ல , KYP  விவரங்கள் இல்லாமலேயே ஓய்வூதியம் அவரவர் வங்கி /தபால் நிலைய அக்கவுண்டில் சேர்க்கப்படும். தபால் நிலைய கணக்குகளுக்கு SAMPANN ஐ விஸ்தரிக்க சற்று கால தாமதமாகும். தபால் நிலைய சேமிப்பு அக்கவுண்ட் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் பென்சனர்களை வங்கி க்கு மாறும்படி நாங்கள் கோரவில்லை ஆனால் அவர்களாகவே வங்கி யில் சேமிப்பு கணக்கு உண்டாக்கி அதன் வழியாக பென்ஷன் வாங்க முயற்சித்தால் நாங்கள் வரவேற்போம். ஓய்வூதியர்கள் குறைகளை களைய ஒவ்வொரு SSA தலைமையகத்திலும்  ஓய்வூதியர் குறைதீர்க்கும் மையம் ஏற்படுத்தப்படும். அம்மையங்களை பென்சனர்கள் அணுகி தங்கள் குறைகளை விரைவாக தீர்த்துக்கொள்ளலாம்.
பிறகு நேரடியாகவே காணொளி நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 100 தோழர்கள் இதனை கண்டு பயனுற்றார்கள் இத்திட்டத்தை செயல்படுத்த இன்னும் கால நிர்ணயம் செய்யப்படவில்லை.


Friday, 28 December 2018


அன்புத் தோழர்கள் அனைவருக்கும்.... 
 உங்கள் அருணாச்சலத்தின்  அன்பு வணக்கம். 
 இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் உங்களுடைய பேராதரவோடு புகழ்மிக்க கோவை மாநகரத்தின் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்க மாவட்ட செயலாளராக பொறுப்பேற்கின்ற பெரிய பேறு கிடைத்தது..... 
 அதற்கு நன்றி...

 அப்பொழுது நமது சங்கத்தில்   400+ என  இருந்த உறுப்பினர் எண்ணிக்கை, 
 உங்கள் பேராதரவுடன், உங்கள் கூட்டு முயற்சியுடன் .. 
 உறுப்பினர்களின் பிரச்சைனைகளின் தீர்வுகள் ,நம் சங்கத்தின் மேலும் சங்கத்தின் ஓய்வூதியம் நலம் சார்ந்த  நடவடிக்கைகள் காரணமாக இன்றைய தினம் தொள்ளாயிரத்து(900+) அதிகமான  உறுப்பினர்கள் கொண்ட பேரியக்கமாக நம் மாவடட சங்கம்  வளர்ந்துள்ளது கண்டு நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றோம்

 இந்த இரண்டாண்டு கால கட்டத்தில் நாம் இணைந்து பலவித நல்ல செயல்கள் செயலாற்றி வந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது மனது மிகவும் பெருமிதம் கொள்கிறது அல்லவா. 

 நாம் இணைந்து நடத்திய தமிழ் மாநில மாநாடு சற்றேறக்குறைய 1800 க்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்  மாபெரும் மாநாடு எல்லோரும் பாராட்டும் வகையில் மிக சிறப்பாக நடைபெற்றது என்பது நாம் அறிந்த ஒன்று.

 சற்றேறக்குறைய எட்டு செயற்குழுக்கள், பல பொதுக்குழுக்கள்  இரண்டு மங்கையர் தின கொண்டாட்டம் எல்லாம் சிறப்பாக நடைபெற்றதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்புதான்  காரணம்.
  
 இந்த பெரிய கூட்டங்களிலே நமது தலைவர்கள்  ராமன்குட்டி , தலைவர் கோபாலகிருஷ்ணன் . தலைவர் சுகுமாரன் .
 தலைவர் முத்தியாலு  தலைவர் ஆர் வி ஆகியோர் பங்கெடுத்தது நமக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

 ஓய்வூதியர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக தல உயர் அதிகாரியிடம் நல்ல முறையில் பேசி பலவித பிரச்சனை களை நாம் தீர்த்துள்ளோம்.

 இந்த சமயங்களில் எல்லாம் என்னோடு தோளோடு தோள் நின்று உதவிட்ட  பல நண்பர்கள்..... குறிப்பிடத்தக்கவர்கள்
நம்முடைய பொருளாளர் ஜெகதீசன் ,மாநில மாநாட்டிற்கு பேருதவி புரிந்த சிவகுமார் தோழர்  ரங்கநாதன், தோழர் அன்புரோஸ்  ,தோழர் ஆர் டி என்று அன்புடன் அழைக்கப்படும் R. திருவேங்கடசாமி  தலைவர் குருசாமி, உப தலைவர் பழனிசாமி ,தோழர் ராமகிருஷ்ணன் தோழர் உதயகுமார் தோழர் மானூர் புகழேந்தி,....
 இந்த வரிசை இன்னும் நீண்டு கொண்டே போகும் அத்துணை நண்பர்கள் அனைவரும் பேருதவி  புரிந்தார்கள்

 நம்முடைய ஒவ்வொரு நிகழ்வு நடக்கும் பொழுதும் பல்லாயிரக்கணக்கில் பொருளுதவி தந்தவர்களுக்கு நாம் நன்றி சொல்லுவோம்.

 இப்பொழுது நமது சங்க அலுவலகம் நடக்கும் கட்டிடத்திற்கு மிக மின் குறைந்த  வாடகையில் அனுமதி அளித்த நம்முடைய முன்னாள் முதன்மை பொது மேலாளர் திரு ஷாஜகான்  அவர்களுக்கு நன்றி சொல்வோம் .
இந்த கட்டிடத்தை நமக்கு வாங்கித் தந்த..  
 ஒத்துழைத்த அனைவருக்கும் மீண்டும் நன்றி சொல்வோம்.

 இந்த கட்டிடத்தில் பல்லாயிரக்கணக்கான செலவுகளில் நாற்காலிகள் வாங்கிக் கொடுத்த  தோழர் ஆர் டி (RD) அவர்களுக்கு நன்றி சொல்வோம் அடுத்து திரைச்சீலைகள் தைத்து அமைத்துக்கொடுக்க தோழர் பாலன் அவர்களுக்கு நன்றி சொல்வோம்  இந்த கட்டிடத்திற்கு மெருகூட்டும் வகையிலே வண்ணப்பூச்சு அத்தனையும் மேற்பார்வையிட்டு நல்ல முறையில் செய்து கொடுத்ததோழர்  ரங்கநாதன் அவர்களுக்கு நன்றி சொல்வோம்.
 மேலும்  KYP form  சற்றேறக்குறைய 800க்கும் மேற்பட்டு  நாம் சமர்ப்பித்துள்ளோம். இந்த சமயங்களில் பல நண்பர்கள் நமது அலுவலகத்திற்கு வந்து ஓய்வு பெற் நண்பர்களுக்கு அந்த பாரம்களை பில் அப் பண்ணுவதில் பேருதவி புரிந்தார்கள். அவர்களுக்கு நன்றி சொல்வோம்.
  ஓய்வூதியர்களின் மருத்துவ பில்கள் பணப் பட்டுவாடா வில் சுணக்கம்  வந்த பொழுது பெரும் முயற்சி எடுத்து பலவித சிக்கல்களை எல்லாம் நாம் தீர்த்துள்ளோம் அதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்
 அதேபோல் பேமிலி பென்ஷன் பிரச்சினைகள், ஒழுங்கு நடவடிக்கையால் பென்ஷனில் இருந்த  சில சில சிக்கல்கள் இவைகளை எல்லாம் மிக திறமையாக கையாண்டு அத்தனை பிரச்சினை களையும் தீர்த்து உள்ளோம் இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.

 நமது சங்க அலுவலகம் வார நாட்களில் எல்லாம் இயங்குகிறது இது சமயம் தோழர்கள் வந்திருந்து பலருக்கும் உதவி செய்கிறார்கள் இந்த சமயங்களில் சிற்றுண்டி செலவு எல்லாமே தோழர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

 இப்படி சிக்கனமாக இருந்ததால் இன்று சற்றேறக்குறைய 5 லட்சத்திற்கும் அதிகமாக நம்முடைய பொருளாதாரம் மேம்பட்டு இருக்கிறது .
இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி .
அதே போல் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழக்கிழமை நம்முடைய உறுப்பினர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடர்ந்து மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது ஒரு சிறப்பான செயல்.
 தோழர் வாமணனின்  மறைவுக்கு பிறகு சென்னையில்  இருந்து கோவை மாவட்டம் சார்ந்த சங்க செய்திகளை கோவை வலை ப்பூவில் மிக அருமையாய பதிந்த வரும் திரு மோகன் அவர்களின் சேவை மிகவும் போற்றுதலுக்குரியது.  கோவை மாவட்ட செய்திகளை , நிகழ்வுகளை உடனடியாக உலகறிய செய்யும் வலிமையான சாதனம் நம் கோவை மாவட்ட வலைத்தளம் அதனை சிறப்பாக இயக்கி செயல்படுத்தி மற்றும் தலைமை சங்க செய்திகளை நம்மிடையே உடனுக்குடன் பதிவிட்டு  வரும் தோழர் மோகனை வெகுவாக பாராட்டுகிறேன். இப்பணியை இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

நம் மாவட்ட வளர்ச்சியானது நம் அனைவரின் கூட்டு முயற்சியால் விளைந்தது என்றால் அது மிகை அல்ல. நான் ஏதாவது பெயரை விட்டிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். நம் கனவு, திட்டம்,முயற்சி எல்லாமே 1000+ தான் அதற்கான முயற்சியை இன்றே ,இப்பொழுதே துவங்குவோம்.

வெற்றிகரமாக இரண்டு ஆண்டு முடிந்து, இன்று நம்முடைய புதிய செயலர் ஆர் டி  அவர்களிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

 புதிய நிர்வாகிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் இந்த இரண்டாண்டு காலம் என்னோடு தோளோடு தோள் நின்று சிறப்பாய் நடத்துவதற்கு ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வது .. 
நன்றி !
 நன்றி!!
நன்றி !!! 
உங்கள் அருணாச்சலம்....


Thursday, 27 December 2018


Dear Comrades,
The Comprehensive Pension Management System (CPMS) is being inaugurated formally on 29-12-2018. CCAs are organizing some function in every Circle in the afternoon of 29, December 2018. Our leaders are called upon to attend the function, understand the system properly to enable them help the pensioners in future.
When a new system is introduced, there will be some teething trouble. We should point out the difficulties.
There is lot of complaint that even now many Post Offices are not crediting the enhanced IDA promptly. When CPMS is in operative, the CCAs will be crediting the pension and DA etc directly to the account of the pensioners. So, there may not be any delay in getting IDA, provided the CCA office is efficient.
Pensioners will receive their pension from the Bank or the Post Office as the case is now.
…P S Ramankutty...

CPMS TO BE LAUNCHED BY PM

According to the notification issued by Pr. CCA Mumbai, the Comprehensive Pension Management System will be launched by Honourable Prime Minister of India on 29-12-2018.
In this connection two documents released by Dept. of Telecom are given below. 

Wednesday, 26 December 2018

All are surprised to note the enviable growth of Coimbatore District AIBSNLPWA. The growth is uniform since two years or so. It seems to be a TEAM work. Yes Together Everyone Achieves More
The term definition for TEAM applies opt for Coimbatore. The District Unit has hired a hall well in the center of town. If Kovai rains or shines, at least three or four members assemble there. If any member or any of our colleague comes there with some grievance they try to redress it . If the grievance is big one, immediately they ring the District Secretary and hand over the case to him. That is all . The grievance would be wiped out soon and the concerned person would either join as our member or promises to join. In Coimbatore District Unit all are Life Members.
On 23-06-2017, the strength of the unit was 600. But on 24-12-2018 that is with n a span of 18 months, the total membership has reached a magical  number of  900 . All our Kovai comrades are working hard to achieve the Elite 1000. 
One day before 2018 Independence day That is on 14-08-2018 it stood at 800. One day before 2018 Christmas, that is on 24-12-2018 the total strength is 900. May we expect one day before 2019 Tamil New Year day that is on 13-04-2019 Coimbatore would attain the great grand total of 1000. 
All the best Coimbatore. If you work with great determination, the sky is at your reachable height. 
                            Congratulations in Advance!!!
The given below graph shows the growth in Memberships.IRREGULAR REDUCTION OF LPD AND PENSION
In 1990, the new cadre of Phone Mechanic was introduced. Gr. D officials, on qualifying in the departmental examination and completion of due training were promoted to the PM cadre. In Tamilnadu circle, for want of vacancies some of such officials could not be given the promotion. As decided in JCM DC they were temporarily posted as Linemen and promoted to PM later on. The pay drawn in LM post was taken while fixing their pay in PM cadre and subsequently in the pension also. But, recently the Pr. CCA of Tamilnadu circle arbitrarily reduced their Last Pay Drawn and Pension. CHQ has taken up the case. The letter from CHQ is attached hereunder.


Monday, 24 December 2018

Dear Comrades,
Our Coimbatore District AIBSNLPWA has attained a prestigious status of Elite 900. Still we are growing day by day by all your good support and cooperation. Our aim is to reach magic 1000 and we hope, it would be reached soon.
Happy Days are ahead of us  
With Fraternal Greetings to One and All.Sunday, 23 December 2018

Com M K Bagchi is one of the Members of 
Committee of BSNL / MTNL Pensioners Associations .
 He is the President of RTOWA MTNL Delhi.