அன்புத்தோழர்களே ,
அனைவருக்கும் வணக்கம்.
இம்மாதம் 15ஆம் தேதி நம் கோவை மாவட்ட மாநாடு, கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் ஓய்வூதியர் தினம் என்று மூன்று நிகழ்சிகள் ""முப்பெரும் விழாவாக""
கோவை SN அரங்கத்தில்
மிக சிறப்பாக நடைபெற உள்ளது. அவ்வமயம் நமது பொதுசெயலாளர் தோழர் கங்காதர ராவ் அவர்களும் நம் ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட தோழர் K. முத்தியாலு அ .இ. துணை பொதுசெயலாளர் , தோழர் ஏ .சுகுமாரன் அ .இ உதவி பொது செயலாளர், தோழர் ஆர். வெங்கடாசலம் , தமிழ் மாநில செயலாளர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேருரை ஆற்ற இருக்கிறார்கள் .
நாம் இப்போது மிக முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். நம் நீண்ட நாள் கோரிக்கையான நம் ஓய்வூதிய மாற்றத்தை பணியாளர்களின் சம்பள மாற்றத்திலிருந்து டீ -லிங்க் செய்ய வேண்டும் என்பதை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.இனி அடுத்தது ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரைப்படி 01-01-2017 முதல் அன்றைய நம் ஓய்வூதியம், + அன்றைய IDA (119.5% ) + Fitment 32% அடிப்படை ஓய்வூதியத்தில் பொருத்தப்பட்டு நிலுவைத்தொகையுடன் ஓய்வூதியம் பெறவேண்டும். இதுவே நியாயம். கொடுக்க வேண்டியது அரசின் தார்மிக கடமையாகும். ஆனால் இதை நாம் பெற சற்று கடுமையாக உழைக்க வேண்டும். நம்மிடையே ஒற்றுமை மிக அவசியம். உறுப்பினர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும்.
நாடு முழுவதும் நாம் வெற்றிகரமாக 22-11-2018 அன்று நடத்திய ஒரு நாள் உண்ணா நோண்பு போராட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.. மற்றசில ஓய்வூதியர்கள் சங்கம் நம்முடன் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளது.நாம் நிச்சயம் வெற்றி அடைவோம்.
எனவே அருமை தோழர்களே , எந்த சங்கத்தில் சேராமல் தனியாக இருக்கிற ஓய்வூதிய தோழர்களை அணுகி நம் சங்க கோட்பாடுகளை, செயல் முறைகளை, பெற்றிட்ட வெற்றிகளை எடுத்துக்கூறி அவர்களை நம் சங்கத்தில் சேர்த்திட முயல வேண்டும்.அவர்களை இந்த முப்பெரும் விழாவிற்கு அழைத்து வாருங்கள். மாற்று சங்கத்தில் உறுப்பினராக உள்ள தோழர்களையம் அழைத்து வாருங்கள். நம் தலைவர்களின் விளக்கத்தில் திருப்தி அடைவார்கள். நம்மிடம் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
78.2 சத IDA இணைப்பின் போது நாம் தமிழ் மாநில மாநாட்டினை கோவையில் மிக வெற்றிகரமாக நடத்தினோம். இப்போது ஏழாவது சம்பள குழு பரிந்துரைகளை நமக்கும் அமல் படுத்தக்கூடிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.எனவே நாம் நடத்த இருக்கிற முப்பெரும் விழா ஒரு இனிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பி விழா சிறக்க ஒத்துழைப்பு நல்குவோம்.
இத்துணை காலம் நல்ல ஒத்துழைப்பு நல்கிய உங்கள் எல்லோருக்கும் கோவை மாவட்ட சங்கம் நன்றியினை காணிக்கை ஆக்குகிறது. இது போன்ற ஒத்துழைப்பினை இனி வரும் காலங்களிலும் அளித்திட வேண்டுகிறோம்.
இன்று நம் மாவட்ட சங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 889. அத்துணை பேர்களும் ஆயுட்கால உறுப்பினர்கள் எனும் நற்பேற்றினை அடைந்துள்ளோம் .உறுப்பினர் சேர்க்கைக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி. உறுப்பினர் எண்ணிக்கை 1000 எனும் நீண்ட நாள் கனவு நினைவாக உங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம் வெற்றிப்புள்ளியை எட்டி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது தோழர்களே.
வாருங்கள் தோழர்களே சரித்திரம் படைத்திடுவோம். மீண்டும் நினைவூட்டுகிறோம் நாள் 15-12-2018, நேரம் காலை 09-30 மணி.
இடம் SN அரங்கம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
குருசாமி அருணாசலம் ஜெகதீஸ்வரன்
மாவட்ட தலைவர் மாவட்ட செயலர் மாவட்ட பொருளாளர்.

No comments:
Post a Comment