அன்புத் தோழர்கள்
அனைவருக்கும்.... 
 உங்கள்
அருணாச்சலத்தின்  அன்பு
வணக்கம். 
 இரண்டு
ஆண்டுகளுக்கு முன்னால் உங்களுடைய பேராதரவோடு புகழ்மிக்க கோவை மாநகரத்தின் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்க மாவட்ட
செயலாளராக பொறுப்பேற்கின்ற பெரிய பேறு கிடைத்தது..... 
 அதற்கு
நன்றி...
 அப்பொழுது
நமது சங்கத்தில்   400+ என  இருந்த
உறுப்பினர் எண்ணிக்கை, 
 உங்கள்
பேராதரவுடன், உங்கள் கூட்டு முயற்சியுடன் .. 
 உறுப்பினர்களின்
பிரச்சைனைகளின் தீர்வுகள் ,நம் சங்கத்தின் மேலும் சங்கத்தின் ஓய்வூதியம் நலம் சார்ந்த  நடவடிக்கைகள்
காரணமாக இன்றைய தினம் தொள்ளாயிரத்து(900+) அதிகமான  உறுப்பினர்கள்
கொண்ட பேரியக்கமாக நம் மாவடட சங்கம்  வளர்ந்துள்ளது
கண்டு நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றோம்
 இந்த
இரண்டாண்டு கால கட்டத்தில் நாம் இணைந்து பலவித நல்ல செயல்கள் செயலாற்றி வந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது மனது மிகவும் பெருமிதம் கொள்கிறது அல்லவா. 
 நாம்
இணைந்து நடத்திய தமிழ் மாநில மாநாடு சற்றேறக்குறைய 1800 க்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்த  மாபெரும்
மாநாடு எல்லோரும் பாராட்டும் வகையில் மிக சிறப்பாக நடைபெற்றது என்பது நாம் அறிந்த ஒன்று.
 சற்றேறக்குறைய
எட்டு செயற்குழுக்கள், பல பொதுக்குழுக்கள்  இரண்டு
மங்கையர் தின கொண்டாட்டம் எல்லாம் சிறப்பாக நடைபெற்றதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்புதான்  காரணம்.
 இந்த
பெரிய கூட்டங்களிலே நமது தலைவர்கள்  ராமன்குட்டி , தலைவர் கோபாலகிருஷ்ணன் . தலைவர் சுகுமாரன் .
 தலைவர் முத்தியாலு  தலைவர் ஆர் வி ஆகியோர் பங்கெடுத்தது நமக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.
 ஓய்வூதியர்களின்
பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக தல உயர் அதிகாரியிடம்
நல்ல முறையில் பேசி பலவித பிரச்சனை களை நாம் தீர்த்துள்ளோம்.
 இந்த
சமயங்களில் எல்லாம் என்னோடு தோளோடு தோள் நின்று உதவிட்ட  பல
நண்பர்கள்..... குறிப்பிடத்தக்கவர்கள் 
நம்முடைய பொருளாளர்
ஜெகதீசன் ,மாநில மாநாட்டிற்கு பேருதவி புரிந்த சிவகுமார் தோழர்  ரங்கநாதன்,
தோழர் அன்புரோஸ்  ,தோழர்
ஆர் டி என்று அன்புடன் அழைக்கப்படும் R. திருவேங்கடசாமி
 தலைவர்
குருசாமி, உப தலைவர் பழனிசாமி
,தோழர் ராமகிருஷ்ணன் தோழர் உதயகுமார் தோழர் மானூர் புகழேந்தி,.... 
 இந்த
வரிசை இன்னும் நீண்டு கொண்டே போகும் அத்துணை நண்பர்கள் அனைவரும் பேருதவி  புரிந்தார்கள்
 நம்முடைய
ஒவ்வொரு நிகழ்வு நடக்கும் பொழுதும் பல்லாயிரக்கணக்கில் பொருளுதவி தந்தவர்களுக்கு நாம் நன்றி சொல்லுவோம்.
 இப்பொழுது
நமது சங்க அலுவலகம் நடக்கும் கட்டிடத்திற்கு மிக மின் குறைந்த  வாடகையில்
அனுமதி அளித்த நம்முடைய முன்னாள் முதன்மை பொது மேலாளர் திரு ஷாஜகான்  அவர்களுக்கு
நன்றி சொல்வோம் .
இந்த கட்டிடத்தை
நமக்கு வாங்கித் தந்த..   
 ஒத்துழைத்த
அனைவருக்கும் மீண்டும் நன்றி சொல்வோம்.
 இந்த
கட்டிடத்தில் பல்லாயிரக்கணக்கான செலவுகளில் நாற்காலிகள் வாங்கிக் கொடுத்த  தோழர் ஆர் டி (RD) அவர்களுக்கு நன்றி சொல்வோம் அடுத்து திரைச்சீலைகள் தைத்து அமைத்துக்கொடுக்க தோழர் பாலன் அவர்களுக்கு நன்றி சொல்வோம்  இந்த கட்டிடத்திற்கு மெருகூட்டும் வகையிலே வண்ணப்பூச்சு அத்தனையும் மேற்பார்வையிட்டு நல்ல முறையில் செய்து கொடுத்ததோழர்  ரங்கநாதன்
அவர்களுக்கு நன்றி சொல்வோம்.
 மேலும்  KYP form  சற்றேறக்குறைய 800க்கும் மேற்பட்டு  நாம்
சமர்ப்பித்துள்ளோம். இந்த சமயங்களில் பல நண்பர்கள் நமது
அலுவலகத்திற்கு வந்து ஓய்வு பெற்ற நண்பர்களுக்கு அந்த
பாரம்களை பில் அப் பண்ணுவதில் பேருதவி புரிந்தார்கள். அவர்களுக்கு நன்றி சொல்வோம்.
 நமது
சங்க அலுவலகம் வார நாட்களில் எல்லாம் இயங்குகிறது.  இது
சமயம் தோழர்கள் வந்திருந்து பலருக்கும் உதவி செய்கிறார்கள் இந்த சமயங்களில் சிற்றுண்டி செலவு எல்லாமே தோழர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
 இப்படி
சிக்கனமாக இருந்ததால் இன்று சற்றேறக்குறைய 5 லட்சத்திற்கும் அதிகமாக நம்முடைய பொருளாதாரம் மேம்பட்டு இருக்கிறது .
இதற்கு ஒத்துழைத்த
அனைவருக்கும் நன்றி .
அதே போல்
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழக்கிழமை நம்முடைய உறுப்பினர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடர்ந்து மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது ஒரு சிறப்பான செயல்.
நம் மாவட்ட
வளர்ச்சியானது நம் அனைவரின் கூட்டு முயற்சியால் விளைந்தது என்றால் அது மிகை அல்ல. நான் ஏதாவது பெயரை விட்டிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். நம் கனவு, திட்டம்,முயற்சி எல்லாமே 1000+ தான் அதற்கான முயற்சியை இன்றே ,இப்பொழுதே துவங்குவோம்.
வெற்றிகரமாக
இரண்டு ஆண்டு முடிந்து, இன்று நம்முடைய புதிய செயலர் ஆர் டி  அவர்களிடம்
இந்த பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.
 புதிய
நிர்வாகிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் இந்த இரண்டாண்டு காலம் என்னோடு தோளோடு தோள் நின்று சிறப்பாய் நடத்துவதற்கு ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வது .. 
நன்றி !
 நன்றி!!
நன்றி !!! 
உங்கள் அருணாச்சலம்....

No comments:
Post a Comment