Tuesday 16 August 2016



தோழர்களே /தோழியர்களே ,
வணக்கம்.
இம்மாதம் இம்மாநகரில் நடக்க இருக்கும் நம் மாநில மாநாடு சிறப்புற நடைபெற திட்டங்கள் தீட்டி ,தீர்மானங்கள் நிறைவேற்ற இன்று கோவை மாவட்ட செயற்குழு கூடி பேசி , விவாதித்தது .

மாநாட்டு நிர்வாகிகளுக்கு உதவுவதற்காக கீழ்காணும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

STAGE COMMITTEE                   :            தோழர் C.பழனிசாமி            94435 77344

FOOD COMMITTEE                     :            தோழர்  பிச்சமுத்து               94861 05602

RECEPTION COMMITTEE          :            தோழியர் சிவகாம சுந்தரி 94439 98034

ACCOMMODATION COMMITTEE :         தோழர் பூபாலன்                      94420 75199

DELEGATES REGN. COMMITTEE   :      தோழர் பாலசுப்ரமணியன்   94893 47700
                                                                    தோழியர்   ஜோதிமணி 
                                                                    தோழர் V .இராஜகோபால்    94420 80644

PRESS & MEDIA COMMITTEE         :     தோழர் R .பெருமாள்              94880 26476

ஒவ்வொரு குழுவிலும் 5 அல்லது 6 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் . இதன் முழு விபரங்கள் மாநாட்டு அரங்கினில் காணக்கிடைக்கும். மேலும் ஒவ்வொரு SSA களுக்கும்  போஸ்டர்கள் அனுப்பும்போது எல்லா விபரங்களும் அனுப்பப்படும் .

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

 (1) மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களை சிறப்பாக வரவேற்பது, உபசரிப்பது, தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுப்பது , கோவை மாநகரை சுற்றிப் பார்க்க  தகுந்த பயண ஏற்பாடுகள் செய்து கொடுப்பது ஆகிய பணிகளை செவ்வனே முடிக்க ஆறு பேர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது . இக்குழுவில்  தோழர்கள் குருசாமி, சேகரன், ஆறுமுகம், தாமோதரன் , இராமலிங்கம் மற்றும் சங்கரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். 

(2) சிறப்பு விருந்தினர்களை முன்னிலைப்படுத்தி கோவை மாவட்ட சார்பாளர்களும், பார்வையாளர்களும் அவர்களுக்கு உற்ற துணை புரிந்து மாநாட்டினை சிறப்பாக  நடத்திட உதவுவது .

(3) POSTER , CUTOUTS ஆகியவை தயாரிக்க ஏற்பாடு செய்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு WRITE-UP , அரங்கத்திற்கு வந்து சேர வேண்டிய TOPOGRAPHY PLAN  தொடக்க விழா பற்றிய போஸ்டர்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

 (4) சார்பாளர்கள்/பார்வையாளர்களுக்கு  ஒரு அன்பு வேண்டுகோள் :  மாநாடு நடக்கும் இடத்தை புனிதமாகவும், சுத்தமாகவும்,எந்தவித பிரச்சினைகள் இல்லாமலும் இவ்வெற்றி மாநாட்டினை நடத்திட உங்கள் ஒத்துழைப்பினை வேண்டுகிறோம்.
 மாவட்ட செயலர்கள் இந்த விஷயத்தில் சற்று கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ள விழைகிறோம்.

(5) மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திலிருந்து வரக்கூடிய சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை உடனடியாக வரவேற்புக்குழுவிற்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்கள் பகுதியில் உள்ள வணிக மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சலைகள் ஆகியவை சார்ந்த விளம்பர செய்திகள் , போஸ்டர்கள் பாணர்கள் ஆகியவைகளை பார்ஸல் செய்தால் மாநாடு சிறக்க வழி வகுக்கும்.

(6) இம்மாநாட்டினில் மாநாட்டு மலர் வெளியிடப்படவில்லை. எனவே தமிழகம் முழுவதிலிருந்தும் இருந்து விளம்பரங்கள் , பதாகைகள்  நோட்டீ ஸ்கள்  மற்றும் பானர்கள் வெகுவாக வரவேற்கப்படுகின்றன .

தோழமை வாழ்த்துக்களுடன் 
B .அருணாச்சலம் 
தலைவர் , வரவேற்பு குழு 
94430 59011.

R .திருவேங்கடசாமி,
மாவட்ட செயலாளர், வரவேற்பு குழு 
94871 64321

K .சிவகுமாரன் ,
பொருளாளர் , வரவேற்பு குழு,
94861 05119,

உறுப்பினர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் 
AIBSNLPWA  கோவை மாவட்டம்.


N.Mohan, Web Master

No comments:

Post a Comment