Tuesday, 16 August 2016



தோழர்களே/தோழியர்களே ,
வணக்கம்.

நம் சங்க சாதனைகள் ஒரு சிலவற்றை இங்கு நாம் எண்ணிப்பார்ப்போம் 

நம் BSNL லிலிருந்து 2007க்கு முன் ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு மறுக்கப்பட்டது. அப்போதுதான் எல்லா சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சங்க, கேடர் வேறுபாடின்றி ஒன்றுபட்டு அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலம் காக்கும் சங்கத்தை 2009ல்  அமைத்தனர். 

2007க்கு முன் ஒய்வு பெற்ற ஓய்வூதியர்களும் ஓய்வூதிய உயர்வுக்கு தகுதியானவர்தான் என்று நாம் போராடி பெற்று தந்தோம் .இதன் மூலம் ஏறத்தாழ 60,000 ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதியம் இரட்டிப்பாகக் கண்டு மகிழ்ந்தனர்.

IDA சதவீத உயர்வு அறிவித்த அதே மாதத்திலேயே அகவிலைப்படி பெற்று வருகிறோம்.

ஓய்வூதிய பலனுக்கு Extra Increment கணக்கிடப்பட்டது 

சேவையில் உள்ளவர்களுக்கு இணையான மெடிக்கல் அலவன்ஸ் , 
பிராட் பேண்ட் கட்டண சலுகை , 
ஓய்வூதியர்களுக்கும் BSNL குடியிருப்புக்களை வழங்குதல் , 
01-01-2008 லிருந்து 31-08-2008 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு பழைய கம்முடேஷன் முறையிலேயே கணக்கிடுதல் ( இதன் மூலம் கூடுதல் தொகை பெறப்பட்டது) 
போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை நம் சங்கம் தீர்த்து வைத்துள்ளது.

பல ஆயிரக்கணக்கான தனி நபர் பிரச்சினைகளும் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டதன் காரணமாக BSNL ஓய்வூதியர்களின் நலம் காக்கும் மிகப்பெரிய சங்கமாக வளர்ந்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில்  ஐந்தாவது  தமிழ் மாநில மாநாடு கொங்கு நாட்டின் தலைநகரம் கோவையில் இம்மாதம் 23 மற்றும் 24 தேதிகளில் கூடுகிறது. வாருங்கள். நம் வெற்றிகளை கொண்டாடுவோம். எதிர்காலத்தை திட்டமிடுவோம் வீறு நடைபோட்டு வெற்றிதனை எய்துவோம் 


நமது அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச் சங்கத்தில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்து பலமான அமைப்பாக்குவோம். சங்கம் வளர்ப்போம் நாமும் பயனுறுவோம்.  
நன்றி : தோழர் க.முத்தியாலு ,
தமிழ் மாநில தலைவர்    சுற்றறிக்கை

No comments:

Post a Comment