மிகப்பெரிய வெற்றி
(அ ) BSNL ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் அளிக்கும் பொறுப்பு அரசினுடையதே என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
( ஆ ) DOT யில் ஒய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதியம் தரும் பொறுப்பு BSNL க்கே என்ற 2006 ஆம் ஆண்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டு ள்ளது. மிகப்பெரிய வெற்றியாகும்
(இ ) BSNL -லிருந்து அரசுக்கு செல்லும் வருவாயில் ஓய்வூதிய செலவு 60 சதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற 2006 ஆம் ஆண்டு உத்திரவு செல்லாக்காசாக்கப்பட்டுள்ள்ளது.
(ஈ ) சேவையிலுள்ள சங்கங்களுடன் போடப்பட்ட போராட்ட உடன்பாட்டில் 78.2% அகவிலைப்படி BSNL ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும் என்ற வாசகத்தை நீக்கி விட்டு தீர்மானத்தை அனுப்பும்படி உத்தரவிட்ட அதே DOT இப்போது 78.2% அகவிலை ப்படியினை நமக்கும் இணைக்க ஒப்புதலளித்துள்ளது .
( உ ) ஒவ்வொரு முறையும் BSNL ஓய்வூதிய உயர்வுகளுக்கு போராடித்தான் பெற வேண்டும் என்ற நிலை இனி வரும் காலங்ளில் தவிர்க்கப்படும்.
(எ ) இதன் மூலம் 1,80,000 ஓய்ஊதியர்கள் கூடுதல் ஓய்வூதியம் பெற்று பலனடைவார்கள்.
பணப்பலன் மட்டுமல்லாமல் பென்ஷன் கொள்கையில் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மிகப்பெரிய வெற்றியாக எல்லோராலும் போற்றப்படுகிறது , வரவேற்கப்படுகிறது .
இன்னும் நம் முன் உள்ள கடமைகள் ???
தோழமை வாழ்த்துக்களுடன்
பி.அருணாச்சலம்
தலைவர்,
தமிழ் மாநில மாநாடு வரவேற்பு குழு
94430 59011
ஆர்.திருவேங்கடேசாமி ,
கோவை மாவட்ட செயலாளர்
94871 64321
கே .சிவக்குமாரன்
பொருளாளர் , தமிழ் மாநில மாநாடு வரவேற்புக்குழு
94861 05119
No comments:
Post a Comment