தமிழ்நாடு மாநில செயலாண்மையர் கூட்டம்.
AIBSNLPWA சங்கத்தின் செயலாண்மையர் (Secretariat meeting) கூட்டம் சென்னையில் 29-08-16 அன்று நடைபெற்றது. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற தமிழ் மாநில ஐந்தாம் மாநாடு குறித்து தீவிரமாக ஆராய்ந்தது . எல்லா வகையிலும் மிகச்சிறப்பாக நடந்தேறிய மாநாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த குழு , மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த சார்பாளர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. மாநாடு பற்றிய ஒரு சர்குலரை வெளியிட தீர்மானித்துள்ளது.
செப்டம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அனைத்து மத்திய சங்கங்களும் அறைகூவல் விடுத்து நடக்கவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிக்க தீர்மானித்துள்ளது. உழைப்பாளர்களையும் உழைக்கும் மக்களின் சட்டங்களையும் பாதுகாக்க நடைபெறும் ஒரு நாள் வேலை நிறுத்தமிது. லட்சக்கணக்கான உழைப்பாளர்களும் / தொழிலாளர்களும் இப்பணி நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக சென்னை பிளவர் பஜார் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் மற்றும் அதன்பின் நடக்கவுள்ள பொதுக்கூட்டடத்திலும் தலைவர்களும் ஓய்வூதியர்களும் திரளாக கலந்துகொண்டு வெற்றியடைய செய்ய வேண்டுகிறோம்.
18-09-16 அன்று பெங்களுருவில் 78.2% IDA வெற்றி மாநாடு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க பெரும்பாலான ஓய்வூதியர்களை அன்புடன் அழைக்கிறோம்.மாண்புமிகு மத்திய அமைச்சர் ஸ்ரீ அனந்தகுமார் அவர்களுக்கு தமிழ் மாநில சங்கத்தில் சார்பில் ஒரு நினைவு பரிசு வழங்க விழைகிறோம். அனைத்து மாவட்ட செயலர்களும் இந்த ஒருநாள் சிறப்பு மாநாட்டிற்கு மிக அதிகப்படியான எண்ணிக்கையில் ஓய்வூதியர்களை அந்தந்த மாவட்டங்களிலிருந்து அழைத்து வர வேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளனர் .
மாநாடு நடைபெறும் இடம் : ஷீஷ் மஹால் , பேலஸ் கிரவுண்ட் , பெங்களூரு கண்டோன்மெண்ட் இரயில் நிலையம் அருகில் பெங்களூரு
காலம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
No comments:
Post a Comment