Sunday, 14 August 2016





தோழர்களே/தோழியர்களே 
வணக்கம்.


01-10-2000 க்குப்பின் 30-06-2001 க்கு இடைப்பட்ட காலத்தில் பணி  ஓய்வு பெற்றவர்கள் 2001 ஜூலை மாதம் அல்லது அதற்கு பின் ஓய்வு பெற்றவர்கள் வாங்கும் ஓய்வூதியத்தை வீட மிக மிக குறைவாகவே பெற்று வருகின்றனர். இது மாதா மாதம் அவர்களுக்கு தொடர்ந்து ஏற்படும்  இழப்பாகும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் 237 பென்ஷனர்கள்தான் என DOT கூறியதை நாம் ஏற்க மறுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4230 பென்சனர்கள் என்று நாம் எடுத்துரைத்ததை DOT யும் ஏற்றுக்கொண்டது. 


இழப்பிற்கு காரணம் கடைசி 10 மாத பணி யில் பெற்ற ஊதியத்தில் சில மாதங்கள் CDA விகிதத்திலும், சிலமாதங்கள் IDA விகிதத்திலும் பெற்றதனால் சராசரி கணக்கிடுகையில் பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது AIBSNLPWA இந்த case ஐ மிகத்  தீவிரமாக எடுத்துக்கொண்டு 16-07-2012 அன்று நம் பொதுச்செயலர் எல்லா விவரங்களுடன் நீண்டதொரு கடிதம் தொலைத்தொடர்பு செயலருக்கு எழுதியதன் அடிப்படையில் file மீண்டும் திறந்து ஆராயப்பட்டது.  


ஏற்கனவே இது போன்ற பென்ஷன் அனாமலி சமயங்களில் கையாண்ட இரு உதாரணங்களை நாம் எடுத்துக் காட்டினோம். DOT அதனை ஏற்றுக்கொண்டாலும் DOP & PW  அதனை ஏற்க மறுத்துவிட்டது. எனவே நம் CWC மீட்டிங்கில் தீர்மானிக்கப்பட்டதின் பிராகாரம் 31-05-2014 அன்று புதுடில்லி முதன்மை அமர்வு CAT நீதிமன்றத்தில் case file செய்தோம் .DOT , BSNL , DOP &PW , DoE  & DPE  ஆகிய ஐந்து இலாக்காக்கள் respondents ஆக்கப்பட்டன DOT 15-04-2015 அன்று தன்  பதிலை பதிவு செய்தது. BSNL 11-02-2015 ல் தனது  பதிலை பதிவு செய்தது DOP&PW தானாகவே ஒருநிலைப்பாட்டினை எடுத்து எந்த வித formula விலும் சேராத ஒரு தீர்மானத்தினை கூறியது. ஆனால் அது பென்ஷன் இழப்பீடை நிவர்த்தி செய்யாது என்ற காரணத்தினால் நாம் அதை ஏற்க மறுத்துவிட்டோம் . எனவே இந்த பென்ஷன் அனாமலி case இறுதி சுற்றுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே 76 ஆண்டுகளை கடந்தவர்கள் , மேலும் 13 சதவீத பென்ஷனர்கள் இப்போது நம்மிடையே இல்லை எனும் செய்தி நம் நெஞ்சங்களை உலுக்குகிறது. நிர்வாகமும் ,  நீதி மன்ற அமைப்பும்  ஒன்றாக கைகோர்த்து இந்த தீரா பிரச்சினைக்கு  தீர்ப்பளித்தால் நலமாக இருக்கும்.


நன்றி P S R 







No comments:

Post a Comment