Monday, 8 August 2016

                                                                         

அருமைத் தோழர்களே வணக்கம்.

நம் பெரு முயற்சியால் பெறப்பட்ட 78.2% அகவிலைப்படி இணைப்பிற்கு ஓய்வூதியர்கள் மட்டுமல்ல சேவையில் உள்ளவர்களும் வரவேற்று நம்  சங்கத்திற்கு பாராட்டும் ,வாழ்த்துக்களும் தெரிவித்த,வண்ணமுள்ளனர்.
இக்கோரிக்கையை வென்றெடுக்க அயராது பாடுபட்ட நம் அகில இந்திய தலைவர்களுக்கு என்றென்றும் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக பெங்களூரூவில் கூடிய நம் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டு  "78.2% அகவிலைப்படி இணைப்பை பெற்றுத்தர எல்லாவித உதவிகளையும் செய்வேன் பெற்றபின் நடைபெறும் வெற்றி விழாவிலும் கலந்து கொண்டு உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்வேன் " என்று உறுதிபட பேசியதோடு,பல்வேறு அதிகாரிகளை சந்தித்து பேச ஏற்பாடுகள் செய்த மத்திய அமைச்சர் திரு.அனந்தகுமார் அவர்களுக்கும், பலமுறை சளைக்காமல் துவளாமல் அமைச்சரை சந்தித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளச் செய்து,கண்துஞ்சா பணிமுடித்த நம் அகில இந்திய தலைவர்கள்  தோழர்கள்  ஜி . நடராஜன் , டிஜி ,முத்தியாலு ,இராமாராவ்,கங்காதரராவ்,செங்கப்பா மறைந்த தோழர் சித்துசிங்  மற்றும் பலருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியறிதலை காணிக்கையாக்குகிறோம்.

மிகப்பெரிய வெற்றி !!! :  மீண்டும் நாளை சந்திப்போம்.

நன்றி  ---தமிழ் மாநிலத்தலைவர்   தோழர் க.முத்தியாலு  அவர்களின் சுற்றறிக்கை
தோழமையுள்ள
பி.அருணாச்சலம் 
தமிழ்மாநில மாநாடு வரவேற்புக்குழு தலைவர் ,
94430 59011
ஆர்.திருவேங்கடசாமி 
கோவை மாவட்ட செயலர்
94871 64321




No comments:

Post a Comment