1-1-2006க்கு முன் ஒய்வு பெற்ற அலுவலர்கள் , 33 ஆண்டுகள் சேவை செய்திருந்தால், , சேவை முடிவினில் பெற்றுவந்த 10 மாத சராசரி ஊதியத்தில் 50% (முழு ஓய்வூதியமாக) பெற்று வந்தனர். 33 ஆண்டுகளுக்கு குறைவாக சேவை புரிந்து ஒய்வு பெற்றவர்கள் , அவர்கள் சேவை புரிந்த காலத்திற்கேற்ப ஓய்வூதியம் குறைவாக நிர்ணயிக்கப்படும் .இதற்கு PRO-RATA ஓய்வூதியம் என்று பெயர்.
ஒரு அரசு ஊழியர் 10 வருடங்கள் சேவை செய்திருந்தாலே போதும் அவர் முழு ஓய்வூதியம் பெறக்கூடிய தகுதியை அடைகிறார் என 6வது சம்பளக் கமிஷன் தன் அறிக்கையில் கருத்து கூறியிருந்தது. அதன் படி
1-1-2006-க்குப்பின் ஒய்வு பெற்றவர்களுக்கு அளிக்க அரசு ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முடிவு BSNL ஓய்வூதியர்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது . ஆனால் 1-1-2006க்கு முன் ஒய்வு பெற்ற 33 வருடங்களுக்கு குறைவான சேவை புரிந்து ஒய்வு பெற்ற ஓய்வூதியர்கள் PRORATA அடிப்படையில் ஓய்வூதியம் குறைவாக பெற்று வந்த படியால் கோர்ட்டில் மனு செய்தனர். அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பாகி 1-1-2006 எனும் CUT OFF தேதி நீக்கப்பட்டது.இனிமேல் PRORATA பென்ஷன் என்பது கிடையாது.
எந்த ஒரு ஓய்வூதியரும் எந்த வருடம் ஒய்வு பெற்றிருந்தாலும் அவர் 10 வருடங்கள் தொடர்ந்து சேவை புரிந்திருந்தால் முழு ஓய்வூதியமான 50% பெற தகுதி உள்ளவராகிறார். ஆனால் நிலுவைத்தொகை 1-1-2006 லிருந்து வ ழங்கப்படும். இந்த நிலை BSNL /MTNL ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும் என DOT தனது 3-6-2016 கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 01-01-2006 க்குப்பின் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு, அவர்கள் கடைசி மாதத்தில் பெற்று வந்த சம்பளத்தில் 50 சதவீதம் பேசிக் பென்ஷனாக நிணயிக்கப்படுகிறது.
இனி 10 ஆண்டுகள் சேவை பூர்த்தி செய்து, ஒய்வு பெற்று, PRORATA வில் ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியர்களுக்கு முழு ஓய்வூதியம் நிர்ணயித்து, CCA பென்ஷனை மாற்றம் செய்யும் . இதற்கு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இந்த வேலைகள் முடிவுற சற்று காலம் ஆகலாம் .உங்கள் பிபிஓ புத்தகத்தில் உங்கள் முழு சேவை விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அது 33 ஆண்டுகளுக்கு குறைவாக இருப்பின் , விரைவான பைசலுக்கு CCA -க்கு விண்ணப்பிக்கலாம்.
P.S.R
No comments:
Post a Comment