அருமை தோழர்களே!/ தோழியர்களே!!
அனைவருக்கும் வணக்கம்.
நேற்று மாவட்ட செயலரும். தோழர் RT யும் தபால் பகுதி உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டார்கள். அப்போது அங்கு கணக்கு அதிகாரியாக பணியாற்றும் தோழியர் திருமதி சசிகலா அவர்கள் 78.2% நிலுவைத்தொகை பெறாதவர்கள் பைல்களை தமது இல்லத்திற்கே எடுத்துச் சென்று சுமார் 3 நாட்கள் இரவென்றும் பகலென்றும் பாராமல் கடுமையாக உழைத்து கோவை ராமநாதபுரம்,குறிச்சி,வெள்ளலூர்,மற்றும் சிங்காநல்லூர் போன்ற தபால் அலுவலகத்திலிருந்து சுமார் 150 ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத்தொகையினை அவர்களின் கணக்கில் சேர்த்துள்ளார். தோழியர் சசிகலாவிற்கு அனைத்து ஓய்வூதியர்கள் சார்பாக நெஞ்சு நிறை நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
மறைந்த தோழர் பஷீர் அஹமது அவர்களின் Pension Book காணாமல் போய் , சுமார் 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தது. அது தற்சமயம் கண்டெடுக்கப்பட்டு அவரது மனைவியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்போல தோழியர் பத்மினி அவர்களின் குடும்ப ஓய்வூதியம் அவரது கணவரின் பெயருக்கு மாற்றம் செய்ய
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .வங்கிகளிலேயே பாரத ஸ்டேட் வங்கியின் காரியங்கள் தான் மிகவும் மந்தம்.மற்றும் கால தாமதம். CPPC யை தொடர்பு கொண்டால் சரியான தகவல் பெற முடிய வில்லை.கால தாமதத்தை தவிர்க்க , மாநில சங்கத்தோடு பேசி முயற்சி எடுக்கப்படும். தோழர்களே கிட்டத்தட்ட ஓரளவு 78.2% நிலுவைத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

நம் சங்கத்தின் நீதி மன்ற (போராட்டங்களுக்கு) , வழக்குகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டி உள்ளதால் மீண்டும் உங்கள் எல்லோரையும் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால், நிலுவைத்தொகை பெற்றவர்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுகிறோம்.நாம் அளிக்கும் நன்கொடை நம் எதிர்கால நன்மைகளுக்காக என அறியவும்.
மதியம் உயர் கணக்கதிகாரி திருமதி உமா கணேசன் அவர்களையும், கணக்கதிகாரி திருமதி தேன்மொழி அவர்களையும் சந்தித்தோம்.கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள அதாலத் கேஸ்களில் 2 கேஸ்கள் பைசல் செய்யப்பட்டதாக கூறினார்கள். மகிழ்ச்சி Extra Increment மீதான முடிவை மேல் மட்டத்தில் இருந்து மீண்டும் கேட்டு பிறகு முடிவு செய்வதாகக் கூறினார்கள். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் நமக்கு சாதகமாக இருக்கிறது. நன்றி.மெடிக்கல் அலவன்ஸ் (ரசீது இல்லாமல்) விவரங்கள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டு Payment Order காக காத்திருக்கிறது.
தோழர்களே நேற்றைய செய்திப்படி Extra Increment case மிக மிக குறைந்த கால அவகாசத்தில் நீதி மன்றத்தில் நம்பர் ஆகி ஆகஸ்ட் 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்து CCA போட்டுள்ள உத்தரவினை நிறுத்தி வைக்க கட்டளை இட்டுள்ளது.இது நம் சங்கத்தின் தனிப்பட்ட முயற்சி.அதிகமான நிதிச்சுமை, நம் தலைவர்களின் கடுமையான முயற்சி, விடாது நீதி கேட்டு நம் போராட்டம் இவைகளே இவ்வெற்றிக்குக் காரணம் Stay order வந்திருந்தாலும், DOT மட்டத்தில் பேசி ஒரு சாதகமான முடிவு கண்டு பாதிக்கப்பட்டுள்ள சுமார் 600 ஓய்வூதியர்கள் இன்னல் களைய நாம் முயல வேண்டும். நாம் எப்படி 78.2% பெற்றோமோ, எப்படி மெடிக்கல் அலவன்ஸ் பெற்றோமோ
எப்படி 2006க்கு முன்னால் ஒய்வு பெற்றவர்களுக்கும் கடைசி மாத சமபத்தில் பாதியை ஓய்வூதியமாக பெற்றோமோ,அதேபோன்று இந்த extra increment case லேயும் நிச்சயம் வெற்றி கொள்வோம். அதற்குண்டான சாமுத்ரிகா லக்ஷணங்கள் நம் தலைவர்களிடம் நிறையவே உள்ளது.பாதிக்கப்பட்டுள்ள ஓய்வூதியர்கள் கலக்கம் கொள்ள வேண்டாம். வெற்றி ஈண்டு தரும் நம் சங்கத்திற்கு நாம் செய்ய வேண்டிய பிரதி உபகாரமெல்லாம் சங்கத்தின் பெருமையை மற்ற தோழர்களிடம் எடுத்துக்கூறி அவர்களையும் நம் சங்க உறுப்பினராக்குவதுதா ன். நம் சங்கத்தின் நிதிச்சுமை சற்று குறைய நன்கொடை அளிப்பது நம் கடமையாகும்.75 வயது நிரம்பிய நம் மாநில துணைசசெயலர் தோழர் RT உடுமலைப்பேட்டை பகுதியில் அணைத்து தோழர்களிடமிருந்து நன்கொடை வசூல் செய்வது,புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, ஓய்வூதிய கணக்குகளை துல்லியமாக கணக்கிடுவது போன்ற அன்னாரின் கண் துஞ்சா பணிமுடித்தல் போன்ற செயல்கள் நம்மை வெகுவாக உத்வேகப்பபடுத்துகின்றன.
நம் கோவை மாவட்டத்தைப் பொறுத்த வரை கூட்டு முயற்சி, அனைவரின் ஒத்துழைப்பு, காலம் நேரம் பாராமல் உழைக்கும் தோழர்களின் அர்ப்பணிப்பு இவை அனைத்துமே நம் வெற்றிகளுக்கு முக்கிய காரணம்.ஒருவராக இருந்து,ஆறாக மாறி பின் 25 ஐ த்தொட்டு அதுவே 3, 4 ஆண்டுகளில் 620 அங்கத்தினர்களுடன் நாளும் வளர்ந்து வீறு நடை போட காரணமாக இருந்த, இருக்கின்ற அத்துணை கர்த்தாக்களையும் நெஞ்சார நினைக்கிறோம் ,உளமார பாராட்டுகிறோம்.
கடல் கடந்து பயணித்திருந்தாலும் நம் தோழர்கள் /தோழியர்கள் சங்க நினைவுகளிலேயே மூழ்கி இருக்கிறார்கள் என்பதற்கு ஓர் சிறு சான்று கோவையில் பணியாற்றி ஒய்வு பெற்ற தோழியர் வத்சலா அவர்கள் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். நம் சங்க நினைவுகள் எப்போதும் அவர் உள்ளத்தில் நிழலாட ,78.2% நிலுவைத்தொகைகான உத்தரவு வந்தவுடன் கோவை பொங்கலூர் -ல் இருக்கும் தன் கணவரிடம் உடனடியாக நன்கொடை ரூ 1000/- அளித்திட கேட்டுக்கொண்டுள்ளார் அவரது கணவரும் தன் பல வேலைகளுக்கிடையே நேற்று சங்க அலுவலகம் வந்து நன்கொடை அளித்து சென்றுள்ளார்.அத்தம்பதியருக்கு நெஞ்சு நிறை நன்றியினை உரித்தாக்குகிறோம்.
மீண்டும் சந்திப்போம்.
LONG LIVE AIBSNLPWA
வாழ்த்துக்களுடன்
B.அருணாசலம்
மாவட்ட செயலர்.
No comments:
Post a Comment