Thursday, 3 August 2017

திரு.K .மாணிக்கம் அவர்கள் டெலிகிராப் ஓவர்சீயர் ஆக பணியாற்றி 2007ல் பணி ஒய்வு பெற்றவர். அதிகமாக பேச இயலாதவர். தன்னுடைய ஓய்வூதியம் பெறுவதற்காக ஸ்டேட் வங்கி சென்றுள்ளார். ஆனால் அவரால் பாரங்களை பூர்த்தி செய்ய இயலாமல் பிறரிடம் சொல்லி உதவி கோரவும் இயலாமல் தவித்து நின்றிருந்த போது அங்கு தன் வங்கி வேலை விஷயமாக சென்றிருந்த  நம் மாவட்ட செயலர் தோழர் அருணாச்சலம் அவர்கள் அன்னாரின் ID கார்ட் மூலமாக அவர் BSNL ஓய்வூதியர் என்று அறிந்து அவருக்கு அனைத்து உதவிகளையும் புரிந்து ஓய்வூதியம் பெற கடமையாற்றினார். பிறகு நம் சங்கம் ஆற்றிவரும் பணிகளை , ஈன்றெடுத்த வெற்றிகளை எடுத்துக்கூறி சங்கத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்ள தோழர் K .மாணிக்கம் அவர்களும் இன்று 03-08-2017 அன்று ஆயுட்கால உறுப்பினராக இணைந்துள்ளார்.
அவருக்கு கோவை மாவட்ட AIBSNLPWA சங்கத்தின் சார்பாக பாராட்டி வருக! வருக !! என வரவேற்கிறோம்.

இவண் 
B .அருணாச்சலம் 
AIBSNLPWA கோவை மாவட்ட செயலர்.




No comments:

Post a Comment