Friday, 4 August 2017


அருமைத்தோழர்களே ,
வணக்கம். மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில், மனந்திறந்து ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில்  பேருவகை கொள்கிறேன். 
78.2 சத நிலுவைத் தொகை பெருவாரியாக தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளில் போடப்பட்டு விட்டன. தபால் இலாகா கண்காணிப்பாளர் , பாரத ஸ்டேட் வங்கி , பெங்களூர் ரிஜினல் அலுவலக உயர் அதிகாரிகளை பல முறை தொடர்பு கொண்டு கனரா வங்கி மற்றும் கார்ப்பொரேஷன் வங்கி தனக்குள்ள ஓய்வூதியர்கள் சேமிப்பு கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு விட்டன. மாவட்ட செயலரின் இந்த அயரா பணிக்கு உறுதுணையாக இருந்து பல் வேறு விதங்களில் உதவி நல்கிய தோழர்கள் அன்புரோஸ், ஆர்டி , ஜெகதீஸ்வரன் மற்றும் பலருக்கு ஆழ்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறோம். 
நம் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சலிக்காமல்,அலுக்காமல் கால நேரம் பாராமல் பதிலளித்து , சரியான தகவல்களை எடுத்துக் கூறி அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்த தோழர் சிவக்குமார் போன்றவர்களுக்கு நன்றி!, நன்றி!! இன்னும் சில தோழர்கள் விடு பட்டிருக்கலாம். அவர்கள் அத்துணை பேர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.
நிலுவைத்தொகை சிலருக்கு கிடைக்க வில்லை. தபால் நிலையத்திலிருந்து வங்கி மாற்றம், தவறான PPO எண் , வங்கி கணக்கில் சில குறைபாடுகள் ஆகிய பல்வேறு காரணங்களால் நிலுவைத்தொகை கைக்கு வந்து சேர வில்லை. சுமார் 150 தோழர்கள் extra increment காரணத்தால் அவர்களின் கோப்புகள் DOT யிலிருந்து நமக்கு அனுப்பப்பட்டு pending ல் வைக்கப்பட்டுள்ளது.கணக்கு அதிகாரியை சந்தித்து நம்முடைய நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி பிடித்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தோழர்களே 78.2 சத நிலுவைத்தொகை இதுகாறும் பெறாதவர்கள் தங்களுடைய Order copy ,PPO no , LPS no ,  ,வங்கி மற்றும் கிளை பெயர்,கணக்கு எண்    ஆகிய விபரங்களை உடனே மாவட்ட சங்கத்திற்கு அளிக்கவும்.இவைகளை ஒன்று திரட்டி சென்னை   CCA அலுவலகத்தில் எடுத்துக்கூறி விரைவில் தொகை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
அதைப்போல E 1, E 2 நிலுவைத்தொகை பெற்றவர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் (revision ) அடைந்திட DOT CELL -ஐ அணுகுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.( உ-ம் ) தோழர்கள் உதயகுமார், பாலசுப்ரமணியம், சங்கர் போன்றோர்  இதைப்போன்று வேறு யாராகிலும் இருப்பின் உடன் தகவல் கொடுக்கவும்.
மருத்துவ பில்கள் அனுப்பப்பட்டுள்ளன. கிடைக்காதவர்கள் தங்கள் application தேதி குறித்த தகவல்களை தரவும்.
ரசீது இல்லாமல் மருத்துவ படி சம்பந்தமாக கோவை மாவட்ட நிர்வாகம் எல்லா Data களை ஒன்று திரட்டி உள்ளது.இம்மாதம் 20 தேதி வாக்கில் பணம் அனுப்புவதாக கூறியுள்ளனர். இன்னும் சிலர் Medical Allowance Without Voucher பெற தேவையான தகவல்களை முழுவதுமாக கொடுக்க வில்லை.அப்படிப்பட்டவர்களை நிர்வாகம் அழைத்து ஆவண செய்வதாக கூறியுள்ளார்கள்.திரு சாத்தப்பன் AAO ,திருமதி தேன்மொழி , Medical Section AO போன்றவர்கள் நமக்கு வேண்டிய உதவிகள் புரிகின்றனர்.அவர்களுக்கு நன்றி. ஒய்வு பெற்ற நம் தோழர்கள்  பணியில் இருந்தபோது கொடுக்கப்பட்ட ID அட்டைகளை திரும்ப கொடுத்து பனி ஒய்வு பெற்றுவிட்டதற்கான ID அட்டைகளாக மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நம் சங்கத்தின் அமைப்பு தினம் இம்மாதம் வருகிறது. 10-08-2017 அன்று இம்மாதம் பிறந்தவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கிறது. அனைத்திந்திய சங்கத்தின் வேண்டுகோளின் படி நிலுவைத்தொகை நன்கொடை மேல் மட்டங்களுக்கு அனுப்பப்பட   வேண்டும். நம் மாவட்டத்தில் சுமார் 240 பேர்களுக்கு மேல் நிலுவைத்தொகை பெற்று விட்டனர். ஆனால் நாம் பெற்றுள்ள நன்கொடை தொகை அளித்தவர்கள் 80 பேர்களை தாண்டவில்லை.எனவே தாமாகவே முன்வந்து நன்கொடையினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Extra Increment  case , 01-01-2007 முதல் 78.2% நிலுவைத்தொகை பெறுதல் , பென்ஷன் அனாமலி போன்ற கோரிக்கைகளை வென்றெடுக்க சட்ட ரீதியாக சந்திக்க இருக்கிறோம்.இதற்கு மிகுந்த செலவுகள் ஆகும். இதனை ஈடு கட்ட நம் மாவட்டமும் துணை நிற்க வேண்டும்.தமிழ் மாநிலம் தொகை அனுப்பும்போது நம் மாவட்ட தொகையும் கணிசமான அளவில் இருக்க வேண்டும்.
பதவி வேறுபாடுகள், சங்க வேறுபாடுகள் அரசியல் வேறுபாடுகள் இல்லாமல் நம் சங்கம் நம் ஓய்வூதியர் நலன் ஒன்றே குறியாக செயல்பட்டு வருகிறது.இக்கூற்றினை அனைவரும் மனதார ஒப்புக்கொள்வர்  பணியில் இருந்த போது நம்மிடையே சில பல வேறுபாடுகள் இருந்திருக்கலாம். அவைகள் தற்சமயம் தேவையில்லை. எல்லோரும் ஒரே அணியில் திரண்டு நிற்கிறோம்,தோளோடு தோள் சேர்த்து அயராது சங்கப்பணி ஆற்றி வருகிறோம்.இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களில் சுமார் 200 பேர்கள் நம் சங்கத்தில் ஆயுள் கால உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 
சற்று கூடுதலாக நாம் அனைவரும் முயற்சி எடுத்தால் ஒருவருக்கு ஒருவர் என்ற ரீதியில் ஒவ்வொருவரும் ஒரு புதிய உறுப்பினரை ஆயுள்கால உறுப்பினராக இணைக்க பாடு பட வேண்டும். நம் மாவட்ட கிளையின் உறுப்பினரின் எண்ணிக்கையை இவ்வருடத்திற்குள் 1000 ஆக மாற்ற முயல வேண்டும். நம்மால் முடியுமா என மலைக்க வேண்டாம். முயன்றால் வானம் கூட தொட்டுவிடும் உயரம்தான்.
தோழமை வாழ்த்துக்களுடன் 
B .அருணாச்சலம் ,
மாவட்ட செயலர்,
கோவை மாவட்டம்.

















































No comments:

Post a Comment