Thursday, 1 September 2016



                         அறிந்து கொள்ள ஒரு தகவல் 

கோரிக்கை  1

"ஓய்வூதியர் இயற்கை எய்துவிட்டால் , குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் எந்த வித தாமதமும் இருக்கக்கூடாது என்பதற்காகவே கணவன்/மனைவி ஆகியோர் இணைந்த கூட்டுக்கணக்கு (Joint Account With Spouse ) ஏற்படுத்தப்படுகிறது . ஆனால் சில சமயங்களில் இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் குடும்ப ஓய்வூதியம் பெற 4 அல்லது 5 மாதங்கள் ஆகிவிடுகின்றன .அதே சமயம் கூடுதல் ஓய்வூதியம் இந்த காலகட்டங்களில்  வழங்கப்பட்டிருந்தால் அவை உடனே பிடிக்கப்பட்டு விடுகின்றன ." என்று ஒரு கோரிக்கை எழுப்பப் பட்டது.

Department of Expenditure  வழிகாட்டு முறை : 

" DP & PW OM No 1/27/2011-P &PW (E ) /20-09-2013 -ல் கூறப்பட்டுள்ள நெறிமுறைகள் அனைத்து CPPC  ல் உள்ள பொது மேலாளர்கள் களுக்கு OM No CPAO /Tech /Simplification /2014-15/595-96  dtd 14-10-2014 ல் உள்ளபடி ஓய்வூதியரின் இறப்பு சான்றிதழ் பெற்ற உடனே ,அதிகப்படியான ஓய்வூதியம் அளிக்கப்பட்டிருந்தால் அவற்றை திரும்ப பிடித்துக்கொள்ளலாம் என்ற பொறுப்பேற்பு (Understanding ) மற்றும் குடும்ப ஓய்வூதியரின் வயது/பிறந்த தேதி சான்று ஆகியவைகளை பெற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குள் குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டுமென்று வங்கிகள் அறிவுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த இடைப்பட்ட காலத்தில் கையாளப்பட்டுள்ள பரிவர்த்தனைகள் குறித்த விபரங்கள் குடும்ப ஓய்வூதியரிடம் அறிவிக்கப்பட்ட வேண்டும்.

கோரிக்கை 2  

" கூடுதலாக அளிக்கப்பட ஓய்வூதியத்தை திரும்ப பிடித்துக்கொள்ள பொறுப்பேற்பு (Understanding ) அளித்த போதிலும் அதனை ஓய்வூதியம் வழங்கும் வங்கி CPPC க்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்தாத காரணத்தினால் , முதல் குடும்ப ஓய்வூதியம்  பெறுவதற்கு கால தாமதம் ஆகிறது"

நெறிமுறைகள் :

 உரிய நேரத்தில் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏற்ப  வங்கிகளின்  உள்கட்ட அமைப்பு முறைகளை சரி செய்ய வேண்டும்   என்று அனைத்து  வங்கிகளும் அறிவுத்தப்பட்டுள்ளன  



தொடரும் 




No comments:

Post a Comment