அன்பு தோழர்களே/ தோழியர்களே
வணக்கம்..
நேற்று ( 03-09-2016 ) அன்று நடைபெற்ற சிறப்பு செயற்ககூட்டத்திற்கு நம் மாவட்ட தலைவர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார் .
சென்ற மாதம் 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற்ற மாநில மாநாடு சிறப்பாக நடைபெற பண உதவி, பொருள் உதவி மற்றும் உடல் உழைப்பு நல்கி மிக மிக நல்ல முறையில் அனைவரும் பாராட்டும் வகையில் மேன்மையாக மாநாடு அமைய பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 18 ஆம் தேதி பெங்களுருவில் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டிற்கு நம் கோவை தோழர்கள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். காலை 1000 மணியிலிருந்து மதியம் 0100 மணி வரை நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்தில் 78.2% IDA நாம் பெற பல்வேறு வகைகளில் உதவி செய்த மத்திய அமைச்சர் மாண்புமிகு
அனந்தகுமார் அவர்களுக்கு நம் நன்றியினை அளிக்கும் விதமாக நாம் பெருமளவில் சென்று கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்பிக்க வேண்டும்.
17-09-2016 இரவு தங்குவதற்கும், 18-09-2016 காலை refresh செய்து கொள்வதற்கும் தகுந்த வசதிகள் கல்யாண மஹாலில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன . 17th இரவு உணவு & 18th காலை சிற்றுண்டி செலவுகளை சார்பாளர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். 18th அன்று மதிய உணவு வழங்கும் பொறுப்பினை பெங்களூரு மாவட்ட சங்கம் ஏற்றுள்ளது .
மாநாட்டிற்கு செல்லும் தோழர்களுக்கு போக்கு வரத்து படியாக ஒவ்வொருவருக்கும் ரூபாய் 300/- கோவை மாவட்ட சங்கத்தின் சார்பாக வழங்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே பெங்களூரு சிறப்பு மாநாட்டிற்கு செல்லும் தோழர்கள் மாநில மாநாட்டு வரவேற்பு குழு பொருளாளர் தோழர் K சிவக்குமார் அவர்களிடமிருந்து பெங்களுருவில் பெற்றுக்கொள்ளலாம் .
வாருங்கள் தோழர்களே /தோழியர்களே !
கொங்கு தரணியிலிருந்து புறப்பட்டு செல்லும் நாம்
எங்கும் புகழ் பரப்பி வெற்றிக்கனியை ஈண்டு வருவோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர்.திருவேங்கடசாமி,
கோவை மாவட்ட செயலாளர்
94871 64321
No comments:
Post a Comment