Monday, 12 September 2016


அன்புத் தோழர்களே/தோழியர்களே 
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
BSNL ஓய்வூதியர்கள் இறுதி வெற்றி பெற்று விட்டார்கள். 78.2 சதவீத பலன்களை ஓய்வூதியர்களுக்கும் அளிக்க அரசு  இணங்கி விட்டது. அனைத்து சங்க அமைப்புகளுக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு .ஆனால் தாம் மட்டுமே இந்த வெற்றியினை பெற்றுத்தந்ததாகவும் மற்றவர்களுக்கு இதில் பங்கில்லை என்றும் ஏளனம் செய்யக்கூடாது.  கடந்த  மூன்று ஆண்டுகள் நாம் மிகக் கடுமையாக இந்த வெற்றியை அடைய பாடுபட்டோம், உழைத்தோம் என்பதை மிக்க அடக்கத்துடன் சொல்லிக்கொள்ள விழைகிறோம். நாம் யாருடனும் வாய்ச்சண்டைக்குத் தயாரில்லை ஆனால் யாரேனும் நம்மைக் சீண்டினால் தக்க பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் . இப்போது பணி யிலுள்ளோர் எந்த சங்கத்துடனும் 
கூட்டு வைத்திருக்க வில்லை. நாம் எந்த சங்கத்தையும் சாராதவர்கள்.

நாம் பெற வேண்டிய பலன்களை  பெறுவதற்குரிய  செயல்களைச்  செய்ய BSNL அலுவலகங்கள் சற்று சுணக்கம் காட்டுவார்களோ என அச்சப்படுகிறோம் . அவசரமாக செய்ய வேண்டிய இப்பணிகளுக்காக சிறப்பு குழுக்களை ஒவ்வொரு SSAவிலும் அமைக்கப்பட வேண்டும். இந்த வேலையை நம் மாவட்ட சங்கம் உன்னிப்பாக கவனிக்க  வேண்டும். தேவைப்பட்டால் ஓய்வுபெற்ற அனுபவமுள்ள ஓய்வூதியர்கள் தங்கள் சேவையை வழங்க தாமாகவே முன்வரவேண்டும். DOT  பகுதியும் இதற்கான அதிகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.   DOT  பகுதி  78.2 சதவீத பென்சன் ஊதிய மாற்றத்தை செய்ய வேண்டுமென்று பணிக்கப்பட்டிருக்கலாம். 100 சத ஓய்வூதியத்தினை மத்திய அரசே வழங்க ஒப்புக்கொண்டுள்ளதால் , BSNL நிர்வாகம் sanction செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை
இதற்கான விதிகள் மாற்றப்பட்ட வேண்டும். எல்லாம் டிஜிட்டல் மயம் என்ற இக்கால கட்டத்தில்BSNL  லிருந்து DOT க்கு FILES  மாற்றப்படுவதில் எந்த வித சிக்கலும் இருக்கக்கூடாது .அதிகப்படியான பணிப்பளுவை ஏற்பதற்கு தகுந்தவாறு CCA  அலுவலகங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் ஏழாவது சம்பள கமிஷன் உத்தரவுகளையும் நிறைவேற்ற வேண்டும். சிறப்புத்தன்மை உள்ளவர்களை ஈடுபடுத்த வேண்டும் தேவைப்பட்டால் இடவசதியுள்ள கட்டிடத்திற்கு CCA  அலுவலகத்தை மாற்ற வேண்டும்BSNL ஒதுக்கியுள்ள இடங்களை மட்டும் DOT  நம்பியிருக்குக்கக்கூடாது 

01-01-2007 க்குப்பிறகு ஒய்வு பெற்றவர்கள் ,  நிலுவைத்தொகைகளையும் ,ஓய்வூதிய பலன்களையும் அவர்கள் ஒய்வு பெற்ற நாளிலிருந்தே பெறசெய்ய வேண்டும் என்பதே நமது அடுத்த இலக்காக இருக்க வேண்டும்.

60:40 உடன்பாட்டினை CABINET  நீக்கியதுதான் மிக முக்கிய அம்சமாகும் இனிமேல் நமது எதிர்கால ஓய்வூதிய மாற்றங்களுக்கு BSNL நிர்வாகத்தின் இலாப/நஷ்டம் குறித்து கவலைகொள்ள தேவையில்லை. அதுமட்டுமல்ல மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றங்கள் வரும்போதெல்லாம்  நமக்கும் அது போல ஓய்வூதிய மாற்றங்கள் கிடைக்க வழிவகை செய்யும் ஒரு நிரந்தர வகைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.  PRC என்பது பணிபுரியும் நிவாகிகளுக்கு மட்டுமே ஊதிய மாற்றம் செய்யும். நாம் BSNL  அனைத்து ஓய்வூதியர்களின் பிரதிநிதியாக உள்ளோம். ஒய்வு பெற்ற நிர்வாகிகளின் நலன்களையும்,  எண்ணிக்கையில் அதிகமாக உள்ள  நிர்வாகிகள் அல்லாத மற்ற ஓய்வூதியர்கள் நலன்களையும் புறந்தள்ள நம்மால் முடியாது .நம்மக்குள்ள ஒரே குறிக்கோள் : தொலைத்தொடர்பு ஓய்வூதியர்கள் நலன் மட்டுமே.
வளர்க்க நம் ஓய்வூதியர் அமைப்பு 

பொதுச்செயலர் 
AIBSNLPWA 

No comments:

Post a Comment