Friday, 7 October 2016




                      BSNL நேரடி நியமன ஊழியர்..., ஓய்வூதியத் திட்டம்



நமது BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு...,
வயது முதிர்வு, ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தக்கோரி...,
நீண்ட நாட்களாக..., நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை
வலியுறுத்தி வந்தது.

தற்போது..., அந்த திட்டத்தை அமுல்படுத்த
தொலைத் தொடர்பு துறை 29-09-2016 அன்று ஒப்புதல்
அளித்துள்ளது.

அகவிலைப் படியுடன் கூடிய அடிப்படைச் சம்பளத்தில்
3% சதம் BSNL நிறுவனம் மாதந்தோறும் 
பங்களிப்பு செய்யும்.

இந்த நிதியைக் கையாளுவதற்காக தனி அமைப்பு 
ஒன்று உருவாக்கப்படும்.

BSNL வாரியம் ஒப்புதல் அளிக்கும் தேதியில்
இருந்து.., இது அமுல்படுத்தப்படும். ஜனவரி 2017-ல் இருந்து
நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அமைப்புகளிடம் இருந்தும்
BSNL ஒப்புதல் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போதைய சம்பள நிலவரப்படி குறைந்தபட்ச 
ஓய்வூதிய பங்களிப்பு மாதம் ரூ. 900/- என்ற 
அளவில் இருக்கும்.
Thanks to TVL Web.

No comments:

Post a Comment