அன்புத் தோழர்களே/தோழியர்களே
வணக்கம்.
நம் கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் 25-10-2016 அன்று CTO வளாகத்தில் உள்ள நம் சங்க கட்டிடத்தில் காலை 1000 மணிக்கு சிறப்பாக துவங்கியது.
ஐந்தாவது தமிழ் மாநில மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவர் தோழர் B அருணாசலம் அவர்கள் தலைமை தாங்கினார்
தமிழ் மாநில AIBSNLPWA தலைவர் தோழர் V ராமராவ் அவர்களும், தமிழ்மாநில செயலாளர் தோழர் K .முத்தியாலு அவர்களும் ,
கடலூர் மாவட்ட துணைத்தலைவர் தோழர் K.V வெங்கடராமன் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
சமீபத்தில் நாம் அவணியெல்லாம் பார்த்து வியக்கும் வண்ணம் வெகு விமரிசையாக நடத்திய ஐந்தாவது தமிழ் மாநில மாநாட்டின் வரவு செலவு கணக்கினை பொருளாளர் தோழர் K சிவகுமார் சமர்ப்பித்தார். அதனை சபை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. மாநாட்டு செலவு போக கையிருப்புத் தொகையான ரூ.2,13,252/- ( ரூபாய் இரண்டு லட்சத்து பதிமூன்று ஆயிரத்து இரு நூற்று ஐம்பத்திரெண்டு ) ஐ மாவட்ட பொருளாளர் தோழர் .பாலசுப்ரமணியன் அவர்களிடம் பலத்த கரகோஷங்களிடையே ஒப்புவித்தார். சிறப்பான பணிபுரிந்து ,சிக்கனத்தைக் கையாண்டு பெருந்தொகையை சேமித்து அதை மாவட்டத்திற்கு வழங்கிய தோழர் சிவகுமாரை அனைவரும் பாராட்டினர் .
தோழர்கள் இராமாராவ் மற்றும் முத்தியாலு அவர்கள் 78.2% IDA பெறுவதில் நாம் நடத்திக்காட்டிய போராட்டங்கள் , 60:40 பார்முலாவை தகர்த்தெறிந்து ஒரு புத்துலகை படைத்ததில் நம் பங்களிப்பு , நம் எதிர்கால திட்டங்கள் , ஒற்றுமையின் அவசியம் குறித்து பேசினார்கள்.
திருப்பூர் தோழர் T .பெரியசாமி அவர்கள் 01-05-2000 அன்று ஓய்வுபெற்று PRO RATA அடிப்படையில் ஓய்வூதியம் பெற்று வந்தார்கள். சமீபத்திய கோர்ட் தீர்ப்பின் படி அவர் முழு ஓய்வூதியம் பெற தகுதி உள்ளவர். நம் மாநில செயலர் பெரு முயற்சியால் 01-01-2006 முதல் முழு ஓய்வூதிய நிலுவைத்தொகையாக ரூ 1,08,000/- பெற்றுள்ளார். அவர் மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதலாக பெறுவார் . கூட்டத்திற்கு வந்து தன் நன்றியறிதலை மிக நெகிழ்ச்சியாகக் கூறி மாநில சங்கத்திற்கு ரூ 4500/- நன்கொடை வழங்கினார். அவருக்கு நன்றி.
தோழர் ஜோதிராஜ் அவர்கள் விருப்ப ஒய்வு பெற்றாலும் ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் இருந்தது.மீண்டும் நம் மாநில செயலரின் விடா முயற்சியால் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு ஆகியுள்ளது, அதற்கான PPO அவரிடம் வழங்கக்கப்பட்டுள்ளது . மாநில சங்கத்திற்கு நம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநில மாநாட்டின் பொது மாஜிக் ஷோ நடத்தி நம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய சூப்பர் செல்வம் அவர்களுக்கு பாராட்டு பத்திரம் நம் மாநிலத் தலைவர்களால் வழங்கப்பட்டது. நம் சங்க மாநாடு, பொதுக்கூட்டம் எங்கு நடந்தாலும் அங்கு தன மாஜிக் ஷோ வினை நடத்தி பார்ப்போரை பரவசப்படுத்துவதாக கூறியுள்ளார். அகவை 75 ஆனாலும் 25 நிகர் சாயல் கொண்ட அந்த இளைய முதியவரை பாராட்டுகிறோம்.
ஓய்வூதியர் தினம், பொதுக்குழு கூட்டம் மற்றும் வரவேற்புக்குழு பாராட்டு கூட்டம் என முப்பெரும் விழா வரும் டிசம்பர் மாதம் 10-ம் தேதி தாமஸ் ஹாலில் கொண்டாடப்பட உள்ளது. விழாவிற்கு தோழர்கள் DG மற்றும் முத்தியாலு அவர்களை அழைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 100 உறுப்பினர்களுக்கு மேலாக கலந்து கொண்டு கொண்டு சிறப்பித்த தோழர்களுக்கு நன்றி பாராட்டப்பட்டது .
கூட்டத்தின் முடிவில் மதிய உணவு பரிமாறப்பட்டது .
நன்றி தோழர்களே ! மீண்டும் மீண்டும் கூடிடுவோம் !! சங்கப்புகழ் பாடிடுவோம்!!!
விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு
No comments:
Post a Comment