Thursday, 21 July 2016

Siruvani Falls
Coimbatore Rly Station



Indira Gandhi Sanctuary


Maruthamalai
                                         AIBSNLPWA   
                    COIMBATORE DIVISION
அன்புடையீர் வணக்கம்
AIBSNLPWA வின் தமிழ்மாநில மாநாட்டிற்கு வருகை புரியவுள்ள நேசமிகு தலைவர்களையும் பாசமிகு தோழர்களையும் வருக! வருக!! என எங்கள் கோவை மாவட்ட கிளையின் சார்பாக இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்
ஏறத்தாழ 500 உறுப்பினர்களைக் கொண்ட எமது கிளை மற்ற மாவட்ட கிளைகளை விட எண்ணிக்கையில் குறைந்திருக்கலாம். ஆனால் எங்கள் தோழர்கள் 500 பேர்களும் ஆயுட்கால உறுப்பினர்கள் ( Life Members ) என்று தெரிவிப்பதில் பெருமிதமும், மட்டற்ற மகிழ்ச்சியும், மன நிறைவையும் கொள்கிரோம். மேலும் எங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரும்பாடு பட்டு வருகிறோம். விரைவில் 1000-ஐத் தொட்டுவிடுவோம்.
நீங்கள் தற்போது காலடி வைத்திருக்கும் கொங்கு நாட்டுத் தலைநகரம் கோவையின் மாண்புகள் எண்ணிலடங்கா .தொழில் வளர்ச்சிக்கும், கல்விப்பணிகளுக்கும், உலக இரண்டாவது சுவைமிகு சிறுவாணி நீருக்கும் , மிதமான தட்ப வெப்ப நிலைக்கும், தனி மனித மரியாதைக்கும் , விருந்தோம்பலுக்கு, இன்னும் எத்தனை எத்தனையோ பெருமைகளும் இக் கோவை மாநகரம் குறிப்பானது.. அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி மூத்த குடிமக்களின் சொர்க்கம் கோவை நகரம் ( Paradise for Senior Citizen ) என கோவை மாநகரம் அகில இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. அதனால்தான் நம் நாட்டின்  பல்வேறு பகுதிகளிலிருந்தும்  ஏன் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை மன நிறைவுடன் கழிக்க கோவை நோக்கி வருகின்றனர்.அவர்களையும் வரவேற்று வாழவைக்கிறோம் .
இத்தனை பெருமைகளைக் கொண்ட கோவையில் நாங்கள் வசிக்கிறோம் என்பதை பெரு மகிழ்ச்சியுடன்  கூறிக்கொண்டு , இவற்றில் பங்கு கொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கிறோம். வரும் நாட்களில் எங்களின் உபசரிப்புகளில் மிகுந்த மகிழ்ச்சி கொள்வீர்கள் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. இந்த வாய்ப்பினை செம்மையாக பயன்படுத்தி இம்மாநகரையும், மாவட்டத்தையும் ஒரு சுற்று வலம் வந்து மன நிறைவுடன் தங்கள் சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற பேரவாவுடன் கீழ்காணும் இடங்களை அறிமுகப்படுத்துகிறோம்.
பொழுது போக்கிற்காக ஜி.டி. நாயுடு மியூசியம்  நகரின் மத்தியில் அமைந்துள்ளது. கோவைக் குற்றாலம் , ஈஸா யோகா மையம், தியான லிங்கம் - சிறுவாணி ரோடு 35 கி.மீ தொலைவிலும், Black Thunder மேட்டுப்பாளையம் 40  கி.மீ   மலைகளின் அரசி என போற்றப்படும் ஊட்டி 102 கி.மீ தொலைவிலும், வால்பாறை ஆழியாறு (பொள்ளாச்சி வழி) 100 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளன
ஆன்மிக அன்பர்களுக்கு நகருக்குள் அருள்மிகு  கோணி அம்மன் கோவில், அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் கோவில் , அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில், தமிழ்க் கடவுளாம் முருகனின் ஏழாம்படை வீடாம் மருதமலை  15 கி.மீ , பேரூர்  அருள்மிகு  பட்டீஸ்வரர் கோவில்  ( சிறுவாணி ரூட்டு) 6கி.மீ .நகருக்கு வெளியே அருள்மிகு வன பத்ர காளியம்மன் கோவில் மேட்டுப்பாளையம் 40 கி.மீ அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோவில்
 ( சத்திய மங்கலம் ரூட்டு ) 70கி.மீ அருள்மிகு மாசாணி அம்மன் கோவில் ஆனைமலை ( பொள்ளாச்சி) 40 கி.மீ வன விலங்குகளின் சரணாலயம்
 ( இந்திரா காந்தி விலங்குகளின் சரணாலயம் ) டாப் ஸ்லிப் 100 கி.மீ தொலைவிலும் உள்ளன.
சுமார் 300 ஆண்டுகள் பழமையான மசூதி ஒப்பண்ணக்கார வீதி கோவை மத்தியில் உள்ளது. Divyodaya Hall Church, CSI சர்ச் ஒப்பிலிப்பாளையம் , கோவை நகரின் மத்தியில் அமைந்துள்ளது.
மாநாடு நிகழ்விடம்  ஸ்ரீ அய்யப்பன் பூஜா  சங்கம், சத்திய முர்த்தி ரோடு , ராம்நகர், கோவை.    இது கோவை வெளியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 நிமிட நடை பயண தூரத்தில் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து காந்திபுரம் நகரப்பேருந்து -- இறங்குமிடம் " காந்திபுரம் " 5 நிமிட நடை பயணத்தில் அடைந்து விடலாம்.
தங்குமிடம் " கமலம் துரைசாமி ஹால் " பேருந்து நிலையத்திலிருந்து 3 நிமிட நடை தூரத்தில் உள்ளது.
அருமை சார்பாளர்களே இந்த வெற்றி மாநாட்டிற்கு உங்கள் பகுதியிலிருந்து Banners, விளம்பர பலகைகள் , Sponsors ஏதாகிலும் கிடைக்குமானால் மிகப்பெரிய உதவியாக கருதுகிறோம் . மாநாட்டு மலர் வெளியிடப்படவில்லை தமிழகமெங்கும் இருந்து மாநாட்டு அரங்கில் விளம்பரங்கள் செய்யப்பட்டால் மிக்க பயன் அளிக்கும். இதை விளக்கி , நம் தோழர்கள் விளம்பரங்களை பெற்றுத்தருமாறு  விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி,  வணக்கம்
தொடர்புக்கு
B. ARUNAACHALAM,
President , Reception Committee,
94430 59011
R.THIRUVENKATASAMY
Secretary Reception Committee
94871 64321
K.SIVAKUMARAN
Treasurer, Reception committee
94861 05119


No comments:

Post a Comment