AIBSNLPWA COIMBATORE DIVISION
வணக்கம்.
13-07-2016 அன்று காலை 10-00 மணியளவில் கோவை மெயின் தொலைபேசி நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள " தாமஸ் கிளப்பில் " 78.2% வெற்றிவிழா மற்றும் எதிர் வரும் ஆகஸ்டு மாதம் நடக்க விருக்கும் தமிழ் மாநில மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்தும் பேச ஒரு சிறப்புக்கூட்டம், தமிழ் மாநில மற்றும் கோவை மாவட்ட உதவி தலைவர் தோழர் சி.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அது போழ்து பன்மொழி வித்தகர், அகில இந்திய அமைப்புச்செயலர், தமிழ் மாநில தலைவர் தோழர் கே .முத்தியாலு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
மாவட்டச் செயலர் தோழர் ஆர்.டி அவர்கள் வரவேற்புரை அளித்தார்
தமிழ் மாநில அமைப்புச் செயலரும் , மாவட்ட உதவி செயலரும் , மாநில மாநாட்டின் வரவேற்புக்குழுவின் தலைவருமான தோழர் பி.அருணாச்சலம் அவர்கள் மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான தொரு உரையாற்றினார் . தோழர்கள் அர்ஜுன் ,ஆறுமுகம் , வாசுதேவன் மற்றும் மூத்த தோழர் தங்கவேலு ஆகியோர் 78.2% வெற்றிவிழா மற்றும் மாநில மாநாட்டிற்கு நன்கொடை அளிப்பது பற்றி பேசினார்கள். திருப்பூர் தோழர் அர்ஜுன் ஒருவரே மாநில மாநாட்டு நன்கொடையாக ரூ 10,000/- அளித்தது நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது..
மாநிலத்தலைவர் தோழர் முத்தியாலு அவர்களின் முயற்சியால் கோவை CTX தோழியர் பொன்னா விஸ்வநாதன் , திருப்பூர் தோழர் ஜெயராஜ் கோவை STR தோழர் கோபாலகிருஷ்ண பிள்ளை ஆகியோர் தலா ரூபாய் 5000/- மாநாடு நன்கொடையாக அளித்தது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
" மாநாட்டின் முக்கியத்துவம் அனைவரின் உரைகளிலும் செவ்வனே வெளிப்பட்டது. . மாநாட்டிற்கான செலவு ரூ 10,00,000/- ( ரூபாய் பத்து லட்சம் ) ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது .78.2% உத்தரவு விரைவில் வெளியாக இருக்கிறது. ஆகவே தோழர்கள் மாநாட்டு நன்கொடையினை மகிழ்வுடன் அள்ளி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 78.2% குறித்த வெற்றி வெற்றி வெற்றி எனும் அறிக்கையை தோழர் ஆர்.டி படிக்க அரங்கத்தில் எழுந்த கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆயின.
தமிழ் மாநில தலைவர் தோழர் முத்தியாலு அவர்களின் பெரு முயற்சியால் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வசூலானது மிக்க மகிழ்ச்சியினை அளிக்கிறது. இந்த மாநில மாநாட்டினை மிகசிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக வரவேற்பு குழு விரிவு படுத்தப்பட்டுள்ளது.
தோழர்கள் சி.பழனிச்சாமி 2, ஏ.கோவிந்தராஜன், பூபாலகிருஷ்ணன் , உதயகுமார்,பாலன் இவர்களுடன் வரவேற்புக்குழுவின் நிதி ஆலோசகராக தோழர் எஸ் .ஆறுமுகம் உட்பட 20 தோழர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாநாட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்பது, உபசரிப்பது தங்குவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்வது போன்ற வேலைகளை திறம்பட செய்ய பல வழிகாட்டுதல் குழுக்கள் ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது . வந்திருந்த அனைத்து தோழர்களும் தங்கள் சேவைகளை தாராளமாக அளிக்க உறுதி பூண்டனர்.
பின்னர் தோழர் முத்தியாலு நம் சங்கத்தின் வளர்ச்சி, 78.2% பெற்றிட நாம் போராடிய போராட்டங்கள், தர்ணாக்கள் , நடக்க இருக்கும் மாநாட்டின் முக்கியத்துவம் , நிதி வசூலிப்பது குறித்த அணுகு முறைகள் ஆகியவை குறித்து சுமார் இரண்டு மணி நேரம் விரிவானதொரு உரையாற்றினார் .
2006 உத்தரவை எஸ்.என். மிஸ்ரா மூலம் நம் தலைமை மாற்றியதன் காரணமாக பென்ஷன் உறுதி படுத்தப்பட்டதோடு அடுத்த சம்பள கமிஷனில் ஊதிய உயர்வையும் உறுதி செய்தது என்று விளக்கமாக எடுத்துரைத்தார். நமது மாவட்ட செயலர் தோழர் ஆர்.டி ஒரே நாளில் 78.2% வெற்றி பற்றிய அறிக்கை தயார் செய்து அரங்கில் வாசித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது .
வரவேற்புக்குழு தலைவர் தோழர் பி.அருணாச்சலம் அனைத்து தோழர்களும் நன்கொடை அளிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
வசுல் குறித்த விபரங்களை வரவேற்புக்குழு பொருளாளர் தோழர் சிவக்குமார் தெரிவிக்க , 8 புதிய உறுப்பினர்கள் நம் சங்கக்கத்தில் சேர்ந்ததை மகிழ்ச்சியுடன் மாவட்ட பொருளாளர் தோழர் ஆர். பாலசுப்ரமணியன் தெரிவிக்க
மாவட்ட செயலர் தோழர் ஆர்.டி அவர்கள் நன்றி உரை அளிக்க , பசித்த வயிற்றுக்கு சுவையான உணவு வழங்கப்பட்டு மதியம் இரண்டரை மணிக்கு கூட்டம் இனிதே முடிவுற்றது.
உணவு இடைவேளைக்குப்பின் மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது அதில் மாநாடு வரவேற்பு குழு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது . உணவு , மாநாடு நடத்தப்படும் இடம், வசூல் முறைகள் அலங்காரம் பத்திரிகை விளம்பரம் , துண்டு பிரசுரம் , போக்குவரத்து மற்றும் மருத்துவ உதவி மையம் அமைப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
தோழர் சிவக்குமார் நன்றி நவில செயற்குழு கூட்டம் இனிதே முடிவுற்றது
தோழமை வாழ்த்துக்களுடன் ,
B.ARUNACHALAM,
President Reception Committee.
R.THIRUVENKATASAMY
Gen.Secy. Reception Committee
K.SIVAKUMAR
Treasurer, Reception Committee
No comments:
Post a Comment