Thursday 23 August 2018

கோவை மாவட்டத்தில் நாள்தோறும் உறுப்பினர் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருதலின் இரகசியத்தை அறிய முனைந்தேன் . எனக்குக் கிடைத்த தகவல்கள் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தின . பலர் முனைப்பாக ஈடுபடும் இச் செயலில் குறிப்பாக இருவரை இன்று தேர்ந்தெடுத்து அவர்தம் உழைப்பினை எடுத்துக்  கூற விழைகிறேன்.

முதலாமவர் எல்லோருக்கும் அன்புக்குரிய தோழர் இராமகிருஷ்ணன் , மாவட்ட உதவி செயலர். தினமும் காலை 10-00 மணிக்கே பையை மாட்டிக்கொண்டு சங்க அலுவலகம் வந்திடுவார். KYP படிவங்களை பெற்று, பிழை திருத்தி கட்டுக்கட்டாக கட்டி வைப்பார். புதிய உறுப்பினர்களை வரவேற்று , உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அவர் கையொப்பம் பெற்று அவரை வாழ்த்தி மகிழ்வார். உறுப்பினரல்லாதவர்கள் யாரேனும் கோரினால் கூட தடையேதும் கூறாமல் KYP  படிவங்களை பூர்த்தி செய்வார். அவர்களை நம் உறுப்பினர்களாக  ஆக்க முயற்சி செய்வார். அம்மட்டோ, மாலையில் வீடு திரும்பியதும், கணினியில் அவர்கள் விபரங்களை பதிந்திடுவார். ஆக்க பூர்வமான யோசனைகளை மாவட்ட தலைவர் மற்றும் செயலருக்கு அளித்திடுவார் . அத்தனையும் ஆற்றிவிட்டு மிகவும் சாமான்யனாக காட்சி அளிப்பார் . வாழ்க அவர் ஆற்றும் தொண்டு. 

அடுத்தவர் அனைவரின் பாசத்துக்குரிய தோழர் ஜெகதீஸ்வரன் . இவர் மாவட்ட பொருளாளர். எல்லோருக்கும் முன்பாக சங்க அலுவலகம் வந்து தோழர் இராமகிருஷ்ணன் போலவே அனைத்து பணிகளையும் செய்திடுவார். புதிய உறுப்பினர்கள் அளித்திடும் பண ஓலைகளை ( செக் ) உரிய நேரத்தில்  வங்கியில் சேர்த்திடுவார். இவர் தோழர்களிடம் காட்டும் பரிவு, தோழமை மற்றும் பாசத்திற்கு இணையாக வேறொன்றை சொல்ல இயலாது.
ஆக இவ்விரு நல் முத்துக்கள் தலைமையில் கோவை மாவட்டத்திலிருந்து தோழர்கள் பூரி யில் நடைபெறும் அனைத்திந்திய மாநாட்டிற்கு  பயணிக்க இருக்கிறார்கள். இங்கிவனை யான் பெறவே .... எனும் பாரதியின் வார்த்தைகள் நம் செவிகளில் ரீங்காரிக்கின்றன . 
வாழ்க கொங்கு மண்டல தொண்டுள்ளங்கள்.








No comments:

Post a Comment