அன்பு தோழர்களே/தோழியர்களே,
திருச்சியில் இம்மாதம் 7 & 8 தேதிகளில் நடந்து முடிந்த தமிழ் மாநில மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்தது. தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களின் மறைவால் இரண்டு நாட்கள் நடைபெற வேண்டிய மாநில மாநாடு ஒரே நாளில் முடித்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் எல்லா விஷயங்களும் பேசப்பட்டன.எல்லோர் பங்களிப்பும் சிறப்பாக இருந்தன. கோவை மாவட்டத்தைச்சார்ந்த தோழர்கள் C .பழனிச்சாமி மற்றும் B . அருணாச்சலம் ஆகியவர்கள் முறையே மாநில துணைத்தலைவர் மற்றும் மாநில உதவி செயலர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கோவை மாவட்டத்திலிருந்து 24 உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்கள் அத்துனை பேர்களுக்கும் நன்றி.
இன்னும் வர இருக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கிணையான ஓய்வூதியத்தை IDA அடிப்படையில் பெற்றிட வேண்டும். extra increment case நமக்கு சாதகமாக முடிய வேண்டும். 78.2 சத IDA நிலுவைத்தொகை 01-01-2007 லிருந்து பெறப்படவேண்டும். நம் உறுப்பினர் எண்ணிக்கையினை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். போன்ற நம் இலக்குகள் அடுத்த மாதம் பூரியில் நடைபெற உள்ள அனைத்திந்திய மாநாட்டில் திட்டங்கள் தீட்டப்படும் என்று நம்புகிறோம்.
தோழர்களே , அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் அனைத்து மக்களும் மிகவும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். ஊரெங்கும் நீர் இருந்தாலும் குடிக்க சொட்டு நீரில்லை. மின்சாரமில்லை , தொலைத்தொடர்பும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது. உணவுப்பொட்டலங்கள் ஹெலிகாப்டர் / விமானங்கள் மூலம் drop செய்யப்படுகின்றன. மிகவும் சாகித்யமுள்ள சபரிமலை , குருவாயூர் போன்ற ஆலயங்கள் பக்தர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்து சுமார் 9 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்ற காட்சிகள் தொலைக்காட்சியில் பார்க்கும்போது நம் நெஞ்சங்களை வேதனையில் துடிக்கின்றன.
820+ உறுப்பினர்களைக்கொண்ட நாம் இந்த நெருக்கடியான நேரத்தில் துயருற்ற மாந்தருக்கு கை கொடுப்பதுவும், அனுசரணையாக இருப்பதுவும் மனித நேயத்திற்கு மாண்பு அளிக்கும் செயல் . தோழர்களே நீங்களாகவே முன்வந்து நன்கொடைகளை அளிப்பீர்கள் என திண்ணமாக எண்ணுகிறேன் உறுப்பினரல்லாத நம் தோழர்களையும் சந்தித்து அவர்களிடமிருந்து நன்கொடை பெற்றுத்தருதல் மிக்க நலமாக இருக்கும். எனவே நம் தோழர்கள் நன்கொடைகளை தாராளமாக நம் மாவட்ட செயலர் தோழர். அருணாச்சலம் அல்லது மாவட்ட பொருளாளர் தோழர் ஜெகதீஸ்வரன் அல்லது தோழர் சிவக்குமார் போன்றவர்களிடம் அளித்து உரிய ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத் தொகை ஒன்றாக சேர்த்து நம் மாவட்ட சங்கம் மூலமாக கேரள AIBSNLPWA சங்கத்திற்கு அனுப்பி கேரள முதல்வர் இடர் நிவாரண நிதியில் சேர்ப்பிக்கப்படும்.
நம் தோழர்களில் சிலர் தாமாகவே முன்வந்து சுமார் ரூ 7000/- அளித்துள்ளது நம் கையிருப்பில் உள்ளது.
துன்பம் வரும்போது உடனிருப்போம். துயர் வருகையில் துயர் துடைப்போம். உதவி செய்யும் மாண்பினில் முன் நிற்போம் , மனித நேரத்தில் மாண்புறுவோம்.
வாழ்த்துக்களுடன்
அருணாச்சலம்
மாவட்ட செயலர்
AIBSNLPWA கோவை மாவட்டம்
பெருமழை , கொடிய வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் கேரளாவின் பரிதாபமான நிலை நம் நெஞ்சங்களை பதற செய்கிறது

No comments:
Post a Comment