AIBSNLPWA ஓர் சாதனை அமைப்பு.
"அநீதியிழைக்கும் வேளை ஆர்த்தெழு" என புரட்சியாளர்லெனின் கூறினார்.ஆம் தோழர்களே..! 2007 ஆம் ஆண்டில் BSNLல் பணி புரியும் Executive தோழர்களுக்கு 1-1-2007 முதல் ஊதியமாற்றம் (Pay
revision)செய்திட ஒர் உத்திரவு வெளியானது. அந்த உத்திரவு ஓய்வுபெற்ற Executive
தோழர்களுக்கு மறுக்கப்பட்டது. டெல்லியின் கதவுகள் தட்டப்பட்டும் பலனில்லை. நமது DOT யோ" BSNLபொதுதுறையாக இருப்பதால்,ஊதிய மாற்றம் கிடையாது" என மறுத்துவிட்டது. அப்பொழுது நமது தலைவர்களிடையே ஓய்வு பெற்ற நமக்கு ஓர் உண்மை அமைப்பு வேண்டும் என முடிவு செய்தனர்.சென்னை தாம்பரத்தில் 20-08-2009 அன்று நமது அகில இந்திய அமைப்பைசுமார் 454 ஓய்வுபெற்ற தோழர்கள் கூடிஅமைத்தனர். அன்று பிறந்த இரக்கம் கொண்ட “தாயின்” பெயர் தான் இன்றைய AIBSNLPWA அமைப்பு.
ஆனால் இதற்கு முன்பும் சில அமைப்புகள் இருந்தன. அவை வாய்மூடி மெளனியாக ,வெற்றுக் கோஷமும்--வீண் ஜம்பமும் கொண்டிருந்தன. நமது AIBSNLPWA வைத்த முதல் கோரிக்கை, "2007க்கு முன் ஓய்வுபெற்றவர்களின் பென்சன் மாற்றம்.( Pre 2007retirees
pension revision ) தொலைநோக்கு பார்வையும்,ஆழ்ந்த அனுபவமும் கொண்ட நமது தலைவர்கள் மிகமிக கவனத்துடன் பென்சன் மாற்றத்திற்காக அல்லும்பகலும் செயல்பட்டனர்.
எண்ணிலடங்கா ஆர்ப்பாட்டம்,போராட்டம் அதற்கு ஆதரவு சேர்க்கும் உத்திரவு,சட்டநுணுக்கங்கள் எடுத்தியம்பி இலாகாவை நம் கோரிக்கையின் ஞாயத்தை உணர செய்தனர். அதன் விளைவு 15-03-2011ல் "பென்சன் மாற்றம்" உத்திரவு அரசால் வெளியிடப்பட்டது. நமது மூத்த ஒய்வுபெற்ற தோழர்கள் சுமார் 60,000க்கு மேற்பட்டோர் இரட்டைசம்பள உயர்வால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் அன்றைக்கிருந்த சில ஏனோதானோ அமைப்புகள் அக்கறையின்றி விதிப்படி(தலை) இயங்கினர்..இருந்தனர். இது கிடைக்காதென ஏளனம் பேசினர், எள்ளி நகையாடினர். ஆனால் ஓய்வூதியதாரர்கள் வென்றெடுத்த முதல் கோரிக்கைக்கு காரணம் நமது தாயான AIBSNLPWA என நாம் பெருமை கொள்வோம்.இன்றைக்கு நம்மை வழிநடத்தும் முதுபெரும் தலைவர்களின் முயற்சியே நமது அன்றைய முதல் வெற்றிக்கு,சாதனைக்கு காரணமானவர்கள்.
அந்த சாதனை சங்கத்தின் 6வது மாநில மாநாடுஆகஸ்ட் திங்கள் 2018ல் திருச்சியில் நடைபெற உள்ளது. 7வதுCPCவெளிவந்த நிலையில்,3வதுPRC அமுலாகும் சூழலில் நமது மாநாடு முக்கியம் ஆகின்றது. மீண்டும் 10ஆண்டுகளுக்குப் பின் நமது 2வது "பென்சன்மாற்றம்"ஏற்படுத்தும் வெற்றி மாநாடாக அமைய இருக்கிறது. கடந்த 5வது தமிழ்மாநில வெற்றி மாநாடு ஆகஸ்ட் 2016ல் 78.2% பலனை பெற்றதுடன்,60:40 சதியை உடைத்த மாநாடு கோவையில் நமது மாவட்ட செயலர். தோழர்.B அருணாச்சலம்சீரோடும் சிறப்போடும் நடத்தினார். இன்று அதேபோல் pension
revision பெறுவதற்கு திருச்சியில் 6வது மாநிலமாநாடு அமையவேண்டும்.
நமது சங்கம் பல சாதனைகளை ஈன்ற தாய் ஆகும். நம்மை காக்கும் அமைப்பான தாய் அமைப்பை காக்க நாம் புறப்படுவோம் திருச்சி நோக்கி...திரள்வோம் திருச்சியில்...திரும்புவோம் வெற்றியுடன்.. என கூடிடுவோம்....இது நமக்கு மட்டுமல்ல. நமது வருங்கால BSNLஓய்வூதியருக்கும் வாழ்க்கையை உயர்த்தும் ஒரு உன்னத மாநாடு........
ஒன்று கூடுவோம்..!
ஓரணியில் நிற்போம்..!!
உரிமையை பெறுவோம்..!!!
LONGLIVE
AIBSNLPWA
G. மனோகரன்.
கோவை.
No comments:
Post a Comment