தோழர்களே
மாநாட்டில் கலந்துகொள்ள வெளியூர்களிலிருந்து வரும் தோழர்கள் நேரே மாநாடு நடைபெறும் வாசவி மஹால் -க்கு வரவும். அங்கு உங்களுக்கு தங்கும் இடம் குறித்த விபரங்கள் கொடுக்கப்படும். தங்குமிடங்கள் அனைத்தும் மாநாட்டு அரங்கிற்கு மிக அருகாமையில் நடந்து செல்லும் தொலைவுகளில் உள்ளன.
தமிழ் மாநில மாநாட்டுப்பணிகள் முழு வீச்சில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்ட செயலர்களுக்கு கூரியர் மூலமாக அனுப்பப்பட்டு விட்டன. வரவேற்புக்குழு தலைவர் டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி அவர்களிடம் வரவேற்புக்குழு உறுப்பினர்கள் நேற்று நேரில் சென்று அளித்தனர். டாக்டர் அவர்களும் மாநாட்டிற்கு வந்து வரவேற்பு உரை நிகழ்த்த உள்ளார். மேலும் இதய நோய் மருத்துவ நிபுணர் ஆன அவர் 07-08-2018 செவ்வாய் மாலை 4-00 மணி முதல் 4-30 மணி வரை " நம் இதயத்தை பாதுகாப்பது எப்படி ?"
என்பது குறித்த செயல்முறை விளக்கம் பவர் பாயிண்ட் மூலம் அளிக்க உள்ளார். அனைவரும் அதனைக்கண்டு பயனுற வேண்டுகிறோம்மாநாட்டில் கலந்துகொள்ள வெளியூர்களிலிருந்து வரும் தோழர்கள் நேரே மாநாடு நடைபெறும் வாசவி மஹால் -க்கு வரவும். அங்கு உங்களுக்கு தங்கும் இடம் குறித்த விபரங்கள் கொடுக்கப்படும். தங்குமிடங்கள் அனைத்தும் மாநாட்டு அரங்கிற்கு மிக அருகாமையில் நடந்து செல்லும் தொலைவுகளில் உள்ளன.
No comments:
Post a Comment