Thursday, 26 July 2018


அருமைத்தோழர்களே ,
வணக்கம். மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி எய்துகிறேன். சற்று தாமதமாக சந்திப்பதற்கு சிந்தையில் வருத்தம் கொள்கிறேன்.
வரலாற்றுச் சிறப்புமிகு ஆர்ப்பாட்டம் ஜூன் மாதத்திலும் , மாபெரும் தர்ணா ஜூலை மாதத்திலும் நாடு தழுவிய அளவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம்.
நமது சங்கத்தின் தீர்மானம் மற்றும் காவல்துறை அனுப்பிய ரிப்போர்ட் நிர்வாகத்திற்கு நல்ல செய்தியை கொண்டு சென்றுள்ளது , அதன் விளைவாகத்தான்  medical allowance வழங்குவது சாத்தியமாயிற்று.தமிழகம் முழுவதும் நம் ஓய்வூதியர்கள் பேரெழுச்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. சுமார் 250 தோழர்களுக்கு மேல் கலந்து கொண்ட கோவையில் நடைபெற்ற தர்ணாவில் 120 க்கு மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு  தர்ணாவை வெற்றி பெற செய்தமைக்கு கோவை சங்கத்தின் சார்பாக நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.
அனுமதி வழங்க சற்று காலதாமதமானபோது சேவை சங்கம் NFTE  துணை நின்றதுவும் சுமார் 50 க்கு மேற்பட்ட அந்த சங்க உறுப்பினர்கள் நம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு செய்ததுவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
தர்ணா பந்தலில் 12000/- ரூபாய் வசூல்  ஆனதுவும், 12 புதிய உறுப்பினர்கள் ஆயுட்கால உறுப்பினர்களாக நம் சங்கத்தில் இணைத்துக் கொண்டதுவும் நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வு.  ஆகஸ்டு திங்கள் 7 மற்றும் 8 தேதிகளில் மலைக்கோட்டை நகராம் திருச்சியில் நடைபெறவுள்ள தமிழ் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள பெயர் கொடுத்துள்ள தோழர்கள் 7ஆம் தேதி காலை 10-00 மணிக்கு முன்னதாகவே திருச்சிக்கு வந்து விடவும். அவ்வாறு வரக்கூடிய தோழர்கள் முன்னதாகவே செயலாளரை தொடர்பு கொள்ளவும்.
KYP படிவத்தை நம் சங்க அலுவலகத்தில் பூர்த்தி செய்து கொடுத்துக்கொண்டு வருகிறோம். இப்பெரும் பணியில் மாவட்ட செயலர், மாவட்ட பொருளாளர் மற்றும் சில மாவட்ட நிர்வாகிகள் பணியாற்றுவது போற்றுதற்குரியது. 750 உறுப்பினர்களைக்கொண்ட நம் கோவை சங்கத்தில் சுமார் 300 படிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது வரை KYP படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்காத தோழர்கள் உடனடியாக சங்க அலுவலகம் வந்து அந்த படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Medical allowance , Medical bill , புதிய Medical allowance குறித்த தகவல்களைப் பெற மாவட்ட செயலரை தொடர்பு கொள்ளவும்.
மீண்டும் சந்திப்போம்.

தோழமை வாழ்த்துக்களுடன் 
B.அருணாச்சலம் . 
கோவை மாவட்ட செயலர்.






No comments:

Post a Comment