அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.
தமிழகத்தில் சிறப்பாய் இயங்கும் பி எஸ் என் எல் ஓயவூதியர் நல சங்கங்களுள் ஒன்றான கோவை சங்கம்(ஆயுள் கால உறுப்பினர் 694+) கொண்டாடும் இந்த பிப்ரவரி திங்கள் உறுப்பினர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் .
48 அன்பருக்கு பிறந்த நாள் வாழ்த்தும் நினைவுப் பரிசும் அளித்து போற்றும் நல் விழா .
விழாவுக்கு தல மை திரு குருசாமி (மாவடட சங்கத்தின் தலைவர்) முன்னிலை திரு பழனிசுவாமி (மாநில உப தலைவர்), திரு கோவிந்தராஜன் (விழா ஒருங்கிணைப்பாளர்).
அனைவரும்இனி வரும் காலம் முழுவதும் எல்லா வளமும் பெற்று ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ்ந்து சிறக்க வாழ்த்தி, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
இன்று ஒரு வரலாற்று சிறப்பு நாள்.கோவை மாவடட பி எஸ் என் எல் ஓய்வூதியர் நலச் சங்க செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் மாநில சங்கத்தின் மணி மகுடத்தில் ஒரு மாணிக்க கல் பதித்து போல் கோவை தொடர் வண்டி நிலையம் அருகில் உள்ள மத்திய தொலைபேசி வளாக வாயிலில் அமைந்துள்ள தகவல் பலகினைNotice Board) கோவை மாவட்ட என் எப் டி யின்(NFTE) முன்னணி தலைவர்கள் தோழர் சுப்பராயன் மற்றும் தோழர் ராபர்ட் மற்ற்றும் இதற்கு பேருதவி புரிந்திடட அனைத்து தோழர்கள் மகிழும் வகையில் கோவை மாவட்ட தலைவர் திரு குருசமி தன் பொற்கரங்களால் திறந்து சிறப்பு செய்தார்.என் எப் டி இ தலைவர்களின் வாழ்த்துரை க்குபின்னர்
மூத்த தோழர் கல்தூண் ராமச்சந்திரன் சிறப்பு வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்த கோவைமாவட் ட செயலர் தோழர் அருணாச்சலம் செய்திருந்தார்.
பிறந்த நாள் விருந்துக்குபின்னர் அனைவரும் மகிழ்வுடன் விடை பெற்று சென்றது கூடுதல் சிறப்பு
நன்றி தோழர் utk எழுத்துரை
No comments:
Post a Comment