மார்ச் மாதம் பிறந்துள்ள ஓய்வூதியர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கூட்டம் 08-03-18 அன்று காலை 10-00 மணி அளவில் வெகு விமரிசையாக , நம் சங்க CTO அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது . இம்மாதம் பிறந்த நாள் காணும் அனைத்து ஓய்வூதியர்களையும் வருக !, வருக !! என இரு கரம் கூப்பி தவறாது வருகை புரிய கோவை மாவட்ட சங்கம் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறது.
அகில உலக மகளிர் தினம் நமது சங்க அலுவலக வளாகத்தில் 10-03-2018 சனிக்கிழமை அன்று சிறப்பாக காலை 10-00 மணிக்கு நம் மாநில உதவி செயலர் தோழியர் சிவகாம சுந்தரி அவர்கள் தலைமையில் நடைபெறும். நம் மாவட்ட சங்கத்தை சேர்ந்த மகளிர் குழுவே முன்னின்று மகளிர் தினத்தினை கொண்டாட இருக்கிறது. இந்த பெருமை வாய்ந்த சிறப்பு கூட்ட குறுஞ்செய்தி (SMS ) மூலமாக நம் மாவட்டம் சார்ந்த 247 மகளிருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மகளிர் மேம்பாடு , மருத்துவ வசதிகள், ஓய்வூதிய மகளிருக்கு ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினைகள், சமூகத்தில் அவர்களுக்கான பங்கு, நாட்டின் வளர்ச்சிக்கு, மகளிரின் கல்வி அறிவு வளர்ச்சிக்கு அவர்கள் அளிக்கும் தொண்டு இவை அனைத்தும் தனித்தனியாக அலசி பேசப்படுமானால் இந்த மாநாடு பெரு வெற்றி எய்தியதாக பெருமை கொள்ளலாம்.
நம் மாவட்ட சங்கத்தில் உள்ள பெரும்பாலான மகளிருக்கு அதற்குண்டான திறமையும், அறிவும் நிரம்பவே உள்ளன. அவர்களை நெறிப்படுத்தி ஒரு கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி நடக்குமானால் அது ஓய்வூதியம் பெறும் மகளிருக்கு மட்டுமல்ல பணியில் இருக்கும் அனைத்து மகளிருக்கும் உதவி புரிவதாக இருக்கும். தோழியர்கள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வருவது மேலும் சிறப்பு சேர்க்கும். இதற்கு மாவட்ட சங்கம் பின்னின்று உதவிகரமாக இருக்கும். இக்கூட்டத்தை நடத்தும் மகளிர் தலைமைக்கு நிதியளிப்பு தேவையானதும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.
உலக மகளிர் தினத்தை போற்றுவோம். சமூக மேம்பாடு , மனிதாபிமானம், ஊழல் ஒழிப்பு மது விலக்கு , சமூக கல்வி, சமுதாய ஒழுக்கம் போன்றவை உறுதிப்பட செய்ய மகளிரின் பங்கு தற்காலத்து மாற்றங்களுக்கு மிக மிக அவசியம்.
மகளிர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இவண்
B . அருணாச்சலம்,
மாவட்ட செயலர்,
AIBSNLPWA , கோவை மாவட்டம்.

No comments:
Post a Comment