அன்பு தோழர்களே/தோழியர்களே
கோவை மாவட்ட AIBSNLPWA சார்பாக வணக்கத்தையும் ,புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
78.2% IDA நிலுவைத் தொடர்பான உத்தரவுகள் நம் மாவட்ட அலுவலகத்திற்கு
வர த்துவங்கியுள்ளன. உங்கள் ஓய்வூதிய அடிப்படை ஊதிய நிர்ணய உத்தரவினை ( Pay Revised Order )கோவை மாவட்டம் Main Exchange அலுவலக Pay Bill பகுதியில் பணிபுரியும் தோழர் சதிஷ் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் . உங்கள் PPO எண் மற்றும் ஒய்வு பெற்ற மாதம் /வருடம் போன்ற விபரங்களை எடுத்துச் செல்லவும் .
31-12-2016 வரை உங்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையினை நீங்களே கணக்கிடலாம்.
Revised Pension Basic /2 X 4.68.
மாற்றப்பட்ட ஓய்வூதியம் தெரியவில்லை என்றால் , உங்கள் PPO -வில் உள்ள
Pension Basic X 1.0553 = இதுதான் உங்களின் புதிய Pension Basic (Revised Pension Basic) ஆகும்.
புதிய Pension Basic X 4.68 = உங்கள் நிலுவைத்தொகை upto December 2016.
உதாரணத்திற்கு
உங்கள் பழைய Pension Basic ரூ 13720 எனில் ,
புதிய Pension Basic = 13720 X 1.0553 = ரூ 14480/-
31-12-2016 வரை உங்கள் நிலுவைத்தொகை = 14480 X 4.68 = ரூ 67766/-
உங்கள் நிலுவைத்தொகை விபரங்கள் உங்கள் கையில்.
78.2% IDA இணைப்பிற்காக நம் சங்கம் முயன்று போராடியதை நினைவுகூர்ந்து, நம் சங்கத்தில் இன்னமும் சேராத தோழர்களுக்கு எடுத்துரைத்து நம் சங்கத்தில் சேர தோழமையுடன் முயற்சி செய்யவும். இன்னும் பல சாதனைகளை புரிய நம் சங்கத்திற்கு இன்னும் அதிகப்படியான உறுப்பினர்கள் தேவை.
தோழமை வாழ்த்துக்களுடன்
B .அருணாசலம்
மாவட்ட செயலர்.
AIBSNLPWA கோவை மாவட்டம்
No comments:
Post a Comment