அருமை
நண்பர்களே ! கடந்த சில ஆண்டுகளாக Coimbatore CGHS
welfare Forum என்ற அமைப்பு
கோவையிலே CGHS Wellness Center அமைவதற்காக தொடர்ந்து
பாடுபட்டு வருகிறது. முக்கியமாக அதன் தலைவர்
திரு. ஹரிகரன், செயலாளர் திரு.மோகன் கிருஷ்ணன் ஆகியோரும்
நமது முன்னாள் PGM திரு.
ஷாஜகான் அவர்களும் GST துறையில்
உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திருமதி. விலாசினி அவர்களும் கடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் நமது
மெயின் தொலைபேசி நிலையத்தில் CGHS WELLNESS செண்டர் துவங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்காக இந்த போரத்தின் கூட்டம் நமது ஓய்வூதியர் சங்க அலுவலகத்தில் கூட்டப்பட்டது. தலைவர் திரு.ஹரிகரன் தலைமை ஏற்று இதுவரை ஆற்றியுள்ள செயல்களை விளக்கினார். மாவட்ட செயலர் திரு.மோகன் கிருஷ்ணன் இதுகாறும் அச்சங்கம் எடுத்த முன் முயற்சிகளை விளக்கினார். இவ்விருவரும் ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் மத்திய அரசின் கார்டைட் பாக்டரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள். நமது முன்னாள் PGM திரு. ஷாஜகான் அவர்கள் சிஜிஎச்எஸ் கோவையில் அமைய எடுத்த முயற்சிகளுக்கு நன்றி கூறினார்கள். திரு ஷாஜகான் அவர்களும் கூட்டத்தில் பங்கேற்று தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். அவ்வமயம், நமது சங்க அலுவலகம் சகாய வாடகையில்
செயல்பட அனுமதி வழங்கிய திரு. ஷாஜகான் அவர்களின் உதவியை
தோழர் சுப்பராயன்
நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தார்.
GST, கஸ்டம்ஸ் மற்றும் எக்ஸைஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அசிஸ்டன்ட் கமிஷனர் திருமதி. விலாசினி தான் எடுத்த பல்வேறு முயற்சிகளை விளக்கினார். இக்கூட்டத்தில் நமது மாநில சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் B.அருணாசலம் பங்கேற்று வழிகாட்டினார். இக்கூட்டத்தில் அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர்கள் சுப்ரமணியம், சிவராஜ், மத்திய அரசு ஓய்வூதியர்கள்
அமைப்பின் தலைவர் தோழர் சுதாகரன் மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட பல துறைகளில் உள்ள
நிர்வாகிகள் பங்கேற்றனர். கோவை நகரிலும் அதனைச் சுற்றியுள்ள திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளை
பெறுவதற்காக முயற்சிகளை எடுக்க
கமிட்டிகள் அமைக்கப்பட்டது. விடுபட்டுள்ள பகுதி நிர்வாகிகளையும் சேர்த்து வருங்காலத்தில் சிறப்புடன் செயலாற்ற முடிவு எடுக்கப்பட்டது. நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் SSG, L.சுப்பராயன்,
No comments:
Post a Comment