Monday, 28 November 2022

அருமை  கோவை மாவட்ட ஓய்வு ஊதிய  நண்பர்களே,
இனிய செய்தி .30-ஆம் தேதி மதியம் 11 மணிக்கு கோவையிலிருந்து 26   சார்பாளர்கள் அகில இந்திய மாநாட்டிற்கு விசாகப்பட்டினம் செல்ல  இருக்கிறோம் . அவர்களுக்கான சார்பாளர்  கட்டணம்  மாவட்ட சங்கத்தின் சார்பாக  கட்டப்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் உட்பட நம்முடைய   சார்பாளர்கள்  வெற்றியுடன் சென்று  திரும்ப  வேண்டும்.  மேலும் இந்த அகில இந்திய மாநாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு. நம்முடைய பென்ஷன் ரிவிஷன் , பல மட்டங்களில் பேசி சாதகமான நிலையை DOT  அதிகாரிகளும், மெம்பர் சர்வீஸ் அவர்களும் நம்மிடம் விவாதித்த அளவில் மிகவும் அனுசரணையாக  இருந்தனர்
ஆனால் DOT  இன்று திடீரென்று அதிகாரத்தினுடைய சூழ்ச்சியினால் அது கை கூடாமல்  போகக்கூடிய நிலை இருந்தது .   இதனை  கருத்தில் கொண்டு  நம்முடைய சங்கம் இந்த பென்ஷன் ரிவிஷனை  கோர்ட் மூலமாக தீர்ப்பதற்கு முடிவெடுத்து வழக்கை தொடுத்துள்ளது. ஏழாவது சம்பள கமிஷன் சார்பாக நமக்கு பென்ஷன் மாற்றம் வர எல்லாவிதமான அடிப்படையும் இருந்தும்  நிர்வாகம் இழுத்து அடிப்பது சரியில்லை. இந்த மாநாடு இவைகளை சரியாக விவாதித்து ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். நம்முடைய சார்பாளர்கள் பழைய பத்திரிக்கைகளை  படித்து மாற்று சங்கங்களுடைய நிலைப்பாடுகளை தெரிந்து கொண்டு விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் வாழ்த்துகிறேன். கடினமாக முயற்சி செய்து இந்த பென்ஷன் ரிவிஷனை  நாம் பெற்றுவிட்டால், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு ஊழியர்கள் பென்ஷன் மாற்றம் பெறும்போது நமக்கு அது பொருந்தும். இது இன்னும் சரியான முறையில் மற்ற சங்கத் தோழர்களுக்கும் விளக்கப்பட வேண்டும். இது முடிந்த கையோடு முதல் முதலில் தமிழகத்தில் தான் நம்முடைய கூட்டம் கோவையில்  டிசம்பர் 20ஆம் நாள் பென்சனர்  தினமாக டிசம்பர் 20 அன்று நடைபெறும். எனவே தோழர்களே ஒன்று இணைந்து ஒரே குரலில் நம்முடைய பென்ஷன் மாற்றத்தை நாம் அணுக வேண்டும். அதற்கு அகில இந்திய சங்கத்திற்கும் தற்போது துவங்கி உள்ள 9 சங்கம் உடைய கூட்டணிக்கும் நாம் உறுதியாக ஆதரவளிக்க வேண்டும். இதுவே காலத்தின் கட்டாயம் .
இப்படிக்கு
அருணாச்சலம் 
மாநில உதவி தலைவர்


 

No comments:

Post a Comment