Friday, 11 November 2022

 

அருமைத் தோழர்களே ! தோழியர்களே !!

வணக்கம்.

சென்ற செயற்குழுவில் நமது பென்ஷன் அலுவலகத்தின் வாடகை அதிகரிப்பு குறித்தும் வருகிற பென்ஷனர்ஸ் தினத்தை சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக விவாதித்தோம். அதை ஈடு செய்ய நம்முடைய உறுப்பினர்களிடத்தில் நன்கொடை கேட்க முடிவு எடுக்கப்பட்டது. ஆச்சரியம் என்னவென்றால் நீங்கள் வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேளுங்கள், நாங்கள் கொடுக்கிறோம் என்று பலர் முன்வந்து உள்ளனர். இப்போதுதான் நம்முடைய மாநாட்டை கோவையில் நடத்தினோம்.

 அதனுடைய வரவு செலவு கணக்கை நம்முடைய சங்கம் வெளியிட்டுள்ளது.சுமார் நான்கு லட்சத்திற்கு மேல் வரவு வந்து அகில இந்திய மட்டத்திற்கு மாநாட்டு நிதியும் டெலிகேட் பீசும் ஒரு லட்சம் அளவுக்கு செலுத்தி உள்ளோம். நாம் நிதியை பத்திரமாக பாதுகாத்து அறிக்கையாக வெளிப்படையாக கொடுத்து உள்ளோம். அது முடிந்த கையோடு இந்த பென்ஷன் தினத்திற்கு வாரி வாரி நம்முடைய தோழர்கள் தோழியர்கள் வங்கி மூலமாக அனுப்பி உள்ளனர். இதற்கு அடிப்படை காரணம் நம்முடைய அருமை தோழர் சுப்பராயன் அவர்களுடைய வாட்ஸ் அப் குரூப்பில் நமது சங்கத்தின் செய்திகளை, புதிய உறுப்பினர் சேர்க்கையை, நன்கொடை அளித்தவர்களுடைய பெயர்களை, மாநில, அகில இந்திய செய்திகளை நம்முடைய வாட்ஸ் அப்பில் தோழர் சிவக்குமார் அவர்களும் தோழர் சுப்பராயன் அவர்களும் பதிவு செய்வதே ஆகும்.

  மாதம் மூவாயிரத்துக்கு மேல் வாடகை கொடுக்க வேண்டும். அதைத்தவிர, டிஜிட்டல் முறையை கையாள ஒரு கம்ப்யூட்டர், ஒரு ஸ்கேனிங் மிஷின் போன்றவ இருந்தால் வசதியாக இருக்கும். நம்முடைய தோழர்கள் CGHS போவதற்கு, பல கடிதங்களை நாம் தயாரிக்க வேண்டும். மெம்பர்ஷிப் லிஸ்ட்டை உருவாக்க வேண்டும். கோவையினுடைய பிரச்சனையை மேல்மட்டங்களுக்கும் நிர்வாகத்திற்கும் அனுப்புவதற்கு இந்த டிஜிட்டல் முறையில் இருந்தால்தான் நமது மதிப்பு கூடும். பழைய காலம் போல் இல்லாமல் நாமும் புதிய முறைகளை கையாள வேண்டும். செய்திகள் அனைவருக்கும் சென்றடைவதும் அதனுடைய நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதும் மிக மிக முக்கியம். இந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. பென்ஷன் ரிவிஷனை எதிர்பார்த்து இருக்கிறோம். 65, 70,75 வயது மூப்பு அடையும்போது பென்ஷன் அதிகரிப்பு ஆலோசனையில் உள்ளது. அதேபோன்று மெடிக்கல் அலவன்ஸ் அதிகரிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளதுஇது எல்லாம் வெகு விரைவில் நாம் அடைய நம்முடைய அகில இந்தியச் சங்கம் கடுமையாக முயன்று கொண்டிருக்கிறது. அதனோடு சேர்ந்து பயணிப்பதுதான் ஊழியருக்கு நன்மை பயக்கும். இதை செயலாக்க மேற்கண்ட வசதிகள் தேவை. எனவே தோழர்களே, இதை கவனத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். கேட்டபோதெல்லாம் நிதியை கொடுப்பதும் நம்முடைய அகில இந்திய சங்கத்தின் செயல்பாட்டுக்கு உறுதுணையாக நாம் இருப்பதும் நம்மை நாமே பாராட்டிக் கொள்வது ஆகும். எனவே ஒன்றாய் இருப்போம். முன்னோக்கி  பயணிப்போம். பென்ஷன் சங்கத்தில் மாநிலத்தில் முதன்மையாக இருப்போம். இன்னும் முயன்றால் நம்முடைய எண்ணிக்கையை நாம் 2 ஆயிரத்து கொண்டு வர முடியும்.  நினைக்க முடியாத பல நண்பர்கள் நம்முடன் இணைந்து வருகிறார்கள். இதை எல்லாம் கருத்தில் கொண்டு ஒன்றாய் இருப்போம். உறுதியாக இருப்போம்மென்மேலும் ஓய்வூதியர்  நலம் காப்போம். இதுதான் காலத்தின் தேவை.
தோழமை வாழ்த்துக்களுடன்
B.அருணாச்சலம்,
தமிழ்மாநில உதவி செயலர்
AIBSNLPWA
கோவை.


No comments:

Post a Comment