District President R.ROBERTS Mob 94428 42880 District Secretary: R. JEGADEESWARAN Mob: 94869 77488 District Treasurer : S. KOTTIAPPAN Mob : 94861 05152 Web e-mail: kovaidivn@gmail.com Web Master : N.MOHAN 80560 66995
Saturday, 31 December 2022
Sunday, 25 December 2022
Sunday, 11 December 2022
Friday, 9 December 2022
Saturday, 3 December 2022
Thursday, 1 December 2022
Monday, 28 November 2022
இனிய செய்தி .30-ஆம் தேதி மதியம் 11 மணிக்கு கோவையிலிருந்து 26 சார்பாளர்கள் அகில இந்திய மாநாட்டிற்கு விசாகப்பட்டினம் செல்ல இருக்கிறோம் . அவர்களுக்கான சார்பாளர் கட்டணம் மாவட்ட சங்கத்தின் சார்பாக கட்டப்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் உட்பட நம்முடைய சார்பாளர்கள் வெற்றியுடன் சென்று திரும்ப வேண்டும். மேலும் இந்த அகில இந்திய மாநாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு. நம்முடைய பென்ஷன் ரிவிஷன் , பல மட்டங்களில் பேசி சாதகமான நிலையை DOT அதிகாரிகளும், மெம்பர் சர்வீஸ் அவர்களும் நம்மிடம் விவாதித்த அளவில் மிகவும் அனுசரணையாக இருந்தனர் .
Saturday, 26 November 2022
அருமை
நண்பர்களே ! கடந்த சில ஆண்டுகளாக Coimbatore CGHS
welfare Forum என்ற அமைப்பு
கோவையிலே CGHS Wellness Center அமைவதற்காக தொடர்ந்து
பாடுபட்டு வருகிறது. முக்கியமாக அதன் தலைவர்
திரு. ஹரிகரன், செயலாளர் திரு.மோகன் கிருஷ்ணன் ஆகியோரும்
நமது முன்னாள் PGM திரு.
ஷாஜகான் அவர்களும் GST துறையில்
உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திருமதி. விலாசினி அவர்களும் கடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் நமது
மெயின் தொலைபேசி நிலையத்தில் CGHS WELLNESS செண்டர் துவங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்காக இந்த போரத்தின் கூட்டம் நமது ஓய்வூதியர் சங்க அலுவலகத்தில் கூட்டப்பட்டது. தலைவர் திரு.ஹரிகரன் தலைமை ஏற்று இதுவரை ஆற்றியுள்ள செயல்களை விளக்கினார். மாவட்ட செயலர் திரு.மோகன் கிருஷ்ணன் இதுகாறும் அச்சங்கம் எடுத்த முன் முயற்சிகளை விளக்கினார். இவ்விருவரும் ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் மத்திய அரசின் கார்டைட் பாக்டரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள். நமது முன்னாள் PGM திரு. ஷாஜகான் அவர்கள் சிஜிஎச்எஸ் கோவையில் அமைய எடுத்த முயற்சிகளுக்கு நன்றி கூறினார்கள். திரு ஷாஜகான் அவர்களும் கூட்டத்தில் பங்கேற்று தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். அவ்வமயம், நமது சங்க அலுவலகம் சகாய வாடகையில்
செயல்பட அனுமதி வழங்கிய திரு. ஷாஜகான் அவர்களின் உதவியை
தோழர் சுப்பராயன்
நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தார்.
GST, கஸ்டம்ஸ் மற்றும் எக்ஸைஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அசிஸ்டன்ட் கமிஷனர் திருமதி. விலாசினி தான் எடுத்த பல்வேறு முயற்சிகளை விளக்கினார். இக்கூட்டத்தில் நமது மாநில சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் B.அருணாசலம் பங்கேற்று வழிகாட்டினார். இக்கூட்டத்தில் அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர்கள் சுப்ரமணியம், சிவராஜ், மத்திய அரசு ஓய்வூதியர்கள்
அமைப்பின் தலைவர் தோழர் சுதாகரன் மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட பல துறைகளில் உள்ள
நிர்வாகிகள் பங்கேற்றனர். கோவை நகரிலும் அதனைச் சுற்றியுள்ள திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளை
பெறுவதற்காக முயற்சிகளை எடுக்க
கமிட்டிகள் அமைக்கப்பட்டது. விடுபட்டுள்ள பகுதி நிர்வாகிகளையும் சேர்த்து வருங்காலத்தில் சிறப்புடன் செயலாற்ற முடிவு எடுக்கப்பட்டது. நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் SSG, L.சுப்பராயன்,
Wednesday, 23 November 2022
LIST OF THE PENSIONERS / FAMILY PENSIONERS
WHOSE LC / DLC EXPIRING ON 30-11-2022 (AS ON 18-12-2022).
On receipt of valid Life certificate / Digital Life Certificate on or before 20-12-2022 only, Pension for the month of December 2022 would be drawn.
For submission of DLC through Jeevan Praman, the following parameters may be noted.
1. Sanction Authority : as "Telecom"
2. Disbursing agency : as " SAMPANN" - Department Of Telecommunications.
3. Agency : as " Pr.CCA Tamilnadu"
To see the names in the list Please click the link given below.
Friday, 11 November 2022
Today Dy.CCA Tamilnadu Circle spoke with our Circle
secretary and informed that they have released the names of pensioners who had
been migrated to SAMPANN from their respective banks. Old PPO and New PPO
numbers LC valid dates etc are also displayed.
Some of our
members had complained that they had not received SMS from CCA Office and were
unable to know of their New PPO number. Now it is clearly mentioned in tabular
colums.
அருமைத் தோழர்களே ! தோழியர்களே !!
வணக்கம்.
சென்ற செயற்குழுவில் நமது பென்ஷன் அலுவலகத்தின் வாடகை அதிகரிப்பு குறித்தும் வருகிற பென்ஷனர்ஸ் தினத்தை சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக விவாதித்தோம். அதை ஈடு செய்ய நம்முடைய உறுப்பினர்களிடத்தில் நன்கொடை கேட்க முடிவு எடுக்கப்பட்டது. ஆச்சரியம் என்னவென்றால் நீங்கள் வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேளுங்கள், நாங்கள் கொடுக்கிறோம் என்று பலர் முன்வந்து உள்ளனர். இப்போதுதான் நம்முடைய மாநாட்டை கோவையில் நடத்தினோம்.
அதனுடைய வரவு செலவு கணக்கை நம்முடைய சங்கம் வெளியிட்டுள்ளது.சுமார் நான்கு லட்சத்திற்கு மேல் வரவு வந்து அகில இந்திய மட்டத்திற்கு மாநாட்டு நிதியும் டெலிகேட் பீசும் ஒரு லட்சம் அளவுக்கு செலுத்தி உள்ளோம். நாம் நிதியை பத்திரமாக பாதுகாத்து அறிக்கையாக வெளிப்படையாக கொடுத்து உள்ளோம். அது முடிந்த கையோடு இந்த பென்ஷன் தினத்திற்கு வாரி வாரி நம்முடைய தோழர்கள் தோழியர்கள் வங்கி மூலமாக அனுப்பி உள்ளனர். இதற்கு அடிப்படை காரணம் நம்முடைய அருமை தோழர் சுப்பராயன் அவர்களுடைய வாட்ஸ் அப் குரூப்பில் நமது சங்கத்தின் செய்திகளை, புதிய உறுப்பினர் சேர்க்கையை, நன்கொடை அளித்தவர்களுடைய பெயர்களை, மாநில, அகில இந்திய செய்திகளை நம்முடைய வாட்ஸ் அப்பில் தோழர் சிவக்குமார் அவர்களும் தோழர் சுப்பராயன் அவர்களும் பதிவு செய்வதே ஆகும்.
தோழமை வாழ்த்துக்களுடன்
B.அருணாச்சலம்,
தமிழ்மாநில உதவி செயலர்
AIBSNLPWA