Monday, 21 May 2018

அருமை தோழர்களே , தோழியர்களே ,
வணக்கம்.
வருகிற 29-05-2018 அன்று நம் கோவை மாவட்ட  சங்கத்தின் சிறப்புக் கூட்டம் வித்யோதயா ஹால் ( கோவை இரயில் நிலையம் எதிரில்) காலை 10-00 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த சிறப்புக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக 
 அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் தேங்கியுள்ள பிரச்சினைகள் , ஆகஸ்ட் மாதம் திருச்சியில் நடைபெற உள்ள தமிழ் மாநில மாநாடு மற்றும் செப்டம்பர் மாதம் ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரி நகரில்  நடைபெற உள்ள அகில இந்திய மாநாடு குறித்த விளக்க உரை வழங்க உள்ளார்கள்.
மருத்துவ அலவன்ஸ் நம் மாவட்டத்தில் மிகவும் கால தாமத மாகிறது. 2013க்கு பிறகு மருத்துவ அலவன்ஸ் போடப்படவில்லை.  மாநில   நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட கேஸ்கள் இன்னமும் பட்டுவாடா செய்யப்படவில்லை.SPOUSE  பணியில் இருந்தால் ஓய்வூதியருக்கு மருத்துவ அலவன்ஸ் கோவை பகுதியில் வழங்கப்படவில்லை. இதனால் இதுவரை 50+ ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாற மாநில சங்கத்தின் தலையீடு மிகவும் அவசியமாகிறது.
2000-க்கு முன் ஓய்வுபெற்ற DOT ஓய்வூதியர்களுக்கு CDA நிலுவைத்தொகை இன்னமும் சிலருக்கு கிட்ட வில்லை. Extra Increment Case கோர்ட் கேஸ் காரணமாக தாமதமாகிறது. ஏப்ரல் 2018 லிருந்து மெடிக்கல் அலவன்ஸ் நிலைபாடு என்னவென்று தெரியவில்லை. நமது மத்திய சங்கமும் தொடர்ந்து போராடிக்கொண் டிருக்கிறது. இக்கட்டான சோதனை மிகுந்த கால கட்டத்தில் நாம் தள்ளாடிக்கொண்டிருக்கிறோம்.
கடந்த பென்ஷன் அதாலத்தில் DOT , நம் சங்கங்கள் உருக்குலைய செய்வதுபோல நடந்து கொண்டது. சங்கங்கள் மூலம் வரும் பிரச்சினைகளை விவாதிக்க மறுக்கிறது. தனிப்பட்டவர்களின் பிரச்சினைகளை முதன்மை படுத்தினாலும் அதன் விளக்கங்களை கொடுக்க மறுக்கிறது. பல பல குளறுபடிகள். உயிரோடு இருப்பவர்கள் இறந்ததாக எண்ணி, குறைக்கப்பட்ட ஓய்வூதியம் , நாம் சுட்டிக்காட்டியும் நிர்வாகம் உணர மறுக்கிறது. இறந்து போன ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றுவதில் சுணக்கம் காட்டுகிறது. 2,3 மாதங்களாக நிலவி வரும் இப்பிரச்சினைகள் தீருமென்று காத்திருக்கும் ஓய்வூதியர்கள் கண்களில் ஏமாற்றத்தின் வெளிப்பாடு . 78.2% நிலுவை Revised உத்தரவு பெயர் கொடுத்தவர்களுக்கு Speed Post ல் மீண்டும் இரண்டாவது தவணை அனுப்புவதாக CCA  சொன்னது  சற்று ஆறுதல் தரும் விஷயம். அந்த உத்தரவு வந்தாலும் வங்கிகள் உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும்.
நம் சங்கத்தின் கடுமையான முயற்சிகளின் காரணமாக டில்லியிலிருந்து சிறப்பு கண்காளிப்பாளர் அதாலத்திற்கு வந்திருந்தது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. நாளைய நமது ஓய்வூதியங்களை DOT யே ஓய்வூதியர் வங்கி கணக்குகளில் பட்டுவாடா செய்யும் என்பது சற்று அச்சமளிப்பதாக உள்ளது. எந்தவித தாமதமும் இல்லாமல் ஓய்வூதியம் கிட்ட வேண்டுமென்பதுவே நம் தாழ்மையான வேண்டுகோள்.
நடக்க இருக்கும் மாநில மாநாட்டிற்கு கோவை பகுதியிலிருந்து 17+17 பேர்கள் தேர்வு செய்யப்பட்ட வேண்டும். அகில இந்திய மாநாட்டிற்கு 13+13 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த சிறப்புக்கூட்டத்தில் சார்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இரயில் டிக்கெட் ஏற்பாடு செய்வது நமது உடனடி கடமையாகும். எனவே சிறப்பு கூட்டத்திற்குப் பிறகு சார்பாளர் கட்டணம், பார்வையாளர் கட்டணம் வசூலிக்கப்பட்டு மாநாடு செல்வதற்கு திட்டமிட வேண்டும். சில தோழர்கள் கொல்கத்தா சென்று திரும்புகையில் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டு கோவை திரும்ப , பொறுப்பாளர்களை நியமித்து கோவை மாவட்டம் செயல்படும்.
தோழர்களே 3 & 4 தவணைகளுக்கான மருத்துவ அலவன்ஸ் உத்தரவு STR பகுதிக்கு வந்துள்ளது. இந்த மாதம் பணம் பட்டுவாடா செய்யப்படும். 13 பேர்களின் மருத்துவ அலவன்ஸ் விபரங்கள் தாமதமாக சென்றதால் , மாநில சங்கம் GM /STR  இடம் பேசி 4 தவணைகளையும் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.( தோழர் R .தன்ராஜ் உட்பட ) மாநில சங்கத்திற்கு நம் நெஞ்சு நிறை நன்றி.
மாநில சங்கம் கேட்டுக்கொண்டதன் பிரகாரம் சுமார் 500 ஓய்வூதியர்களிடம் ஆதார் , PAN விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனுப்ப தயார் நிலையில் உள்ளது. இன்னமும் 200+ ஓய்வூதியர்கள் தங்கள் மேற்கூறிய விபரங்களை விரைவாக பெற ஏற்பாடு செய்யவேண்டும்.
அருமை தோழர்களே நம் வளை தளத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, நிவாகத்திடம் நாம் பேசிவரும் விபரங்கள், DFO , CAO போன்ற உயர் அதிகாரிகளிடம் நாம் பேசிய விபரங்கள் பற்றிய செய்திகள் உடனுக்குடன் நம் வளை தளத்தில் ஏற்றப்பட்டு வருகிறது. உலகமெங்கும் உள்ள நம் தோழர்கள் இவற்றை பார்த்து வருகிறார்கள். எனவே அனைத்து உறுப்பினர்களும் தினமும் வளை தளத்தினைப்பார்த்தால் நம் மாவட்ட செயல்பாடுகள் மாநில , மத்திய சங்கங்களின் செயல்பாடுகள் நன்கு புலப்படும். 
சில சங்கங்கள் மருத்துவ அலவன்ஸ் , 78.2% பயன்பாடு தாங்கள் தான் பெற்றுக்கொடுத்ததாகவும் பேசித்திரிகின்றன . ஓய்விதிய மாற்றம் PRC யின் சிபாரிசு படி கிடைக்கும் என்று தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகிறார்கள். PRC க்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. நமது மத்திய, மாநில மற்றும் மாவட்ட சங்கங்களின் செயல்பாடுகள், தலைவர்களின் கடுமையான உழைப்பு இவைகளை நன்கு உணர்ந்து கொண்டால்தான் மற்ற பென்ஷன் தாரர்களுக்கும் விளக்க முடியும். சிறப்பு கூட்டத்திற்கு தாங்கள் மட்டும் அல்ல சங்கம் சாராத ஓய்வூதியர்களையும் அழைத்து வருவது 
காலத்தின் கட்டாயமாகும். 740+ உறுப்பினர்களுடன் வீறு நடை போட்டு வரும் நம் கோவை மாவட்ட சங்க உறுப்பினர் எண்ணிக்கையினை 1000 ஆக இந்த ஆண்டுக்குள்  உயர்த்த அரும்பாடு பட்டு வருகிறது. உங்கள் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறின், விரைவில் அந்த இலக்கினை நம்மால் எட்ட முடியும்.ஒவ்வொருவரும் முயன்று ஓரிருவரை நம் சங்கத்தில் இணைக்க முயல வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டுகிறேன்.
வணக்கம் 
நன்றியுடன் 
உங்கள் தோழமையுள்ள 
B .அருணாசலம் 
மாவட்ட செயலர் ,
AIBSNLPWA  கோவை மாவட்டம்.



























No comments:

Post a Comment