Sunday, 14 May 2017

அன்புள்ள தோழர்களே / தோழியர்களே 
அனைவருக்கும் வணக்கம் 
மெடிக்கல்   Reimbursement ரசீது இல்லாமல் பெறுதல் மற்றும் மருத்துவ செலவு செய்து பின் அந்த பணத்தை பெறுதல் ஆகிய  இரண்டுக்குமே படிவம் மூலம் விருப்பம் தெரிவித்தல் அவசியம்.. அவ்வாறு அந்த படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கும் சமயம் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நகல்களை இணைக்க வேண்டுவது அவசியம் .
1) MRS கார்டு நகல் ,  2) PAN கார்டு நகல். 3) மெடிக்கல் கார்டு நகல், 4) ஆதார் கார்டு நகல், 5) PPO  மற்றும் LPS எண்கள் , 6)  வங்கி பாஸ் புத்தக முதல் பக்க நகல், ஆகியன.
மருத்துவ செலவு வழங்கப்படுவது அந்தந்த BSNL SSA மூலம் தான் . அந்த பணம் Bank மூலம் Money Transfer செய்யப்படுகின்றது. Post ஆபிஸ் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் வேறு ஏதாவது வங்கியில் SB கணக்கு ஆரம்பித்து  அந்த வங்கியின் IFSC code எண் மற்றும் SB கணக்கு எண் கொடுத்தால் Bank மூலமாக பணம் Tranfer செய்வது விரைவாக நடைமுறை படுத்தலாம்.
மேலும் மெடிக்கல் கார்டினை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு புதுப்பிக்காதவர்கள் உடனடியாக ஜெனரல் செக்சனில் பணிபுரியும் திரு ரமேஷ் அல்லது திரு பாலகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு புதுப்பிக்கவும்..
Post 2006 ஓய்வூதியர்கள் 78.2% Sanction Memo  CCA  அலுவலகம் அனுப்பி பெறாதவர்கள் கணக்கு அதிகாரி திரு சாத்தப்பன் அவர்களை தொடர்பு கொள்ளவும். 
தபால் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு :- சுமார் 300 Sanction Memos  CCA விடமிருந்து வந்துள்ளன . அவர்களும் ஒவ்வொன்றாக கணக்கிட்டு வருகிறார்கள் , சற்று பொறுமை காக்கவும் 
நம் மாநில செயலர் SBI அதிகாரிகளை பார்த்து தாமதத்தை களைய வற்புறுத்தியுள்ளார். நிலுவைத் தொகை கணக்கீட்டு பகுதியில் கூடுதல் ஆட்களை depute செய்யவேண்டும் என்று கூற AGM SBI Customer Care Cell அவர்களும் இன்னும் ஓரிரு நாட்களில்  அவ்வாறு செய்வதாக வாக்களித்துள்ளார் .
மாநில சங்க விடா முயற்சி காரணமாக தோழர் J.S. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மருத்துவ ஈட்டு படி சுமார் ரூ 65,000/- கிடைத்துள்ளது. மாநில சங்கத்திற்கு நன்றி  மேலும் தோழர் கோபால கிருஷ்ண பிள்ளை அவர்களுக்கு Vendor எண் மாநில சங்கத்தின் அரு முயற்சியால் பெறப்பட்டுள்ளது .மாநில சங்கத்திற்கு நன்றி
மாநில செயலர் தோழர் கே .முத்தியாலு அவர்களிடம் தேதி பெற்று விரைவில் பொதுக்குழு கூட்டமும் மாலையில் அவர்   சொற்பொழிவுடன் கூடிய சிறப்பு கூட்டமும் நடத்த இருக்கிறோம்.விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.
மீண்டும் மற்ற செய்திகளுடன் விரைவில் சந்திக்கிறேன்.
AIBSNLPWA ZINDABAD
தோழமை வாழ்த்துக்களுடன் 
B .அருணாசலம் ,
aibsnlpwa மாவட்ட செயலர் 
கோவை மாவட்டம்.









































No comments:

Post a Comment