Friday, 5 May 2017


அன்புள்ள தோழர்களே / தோழியர்களே ,
அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
நம் SSA வைச்சார்ந்த தோழியர் ரமீலா அவர்கள் நம் இயக்கத்தில் தம்மை இன்று இணைத்துக்கொண்டுள்ளார் .சங்க வளர்ச்சி நிதியாக ரூ.500/- நன்கொடை அளித்துள்ளார். இணைந்துள்ள தோழியரை நம் சங்கத்தின்  சார்பாக வருக! வருக!! என வரவேற்கிறோம். அளித்திட்ட நன்கொடைக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
எந்த சங்கத்திலும் அங்கத்தினர் அல்லாத சுமார் 40 ஓய்வூதியர்கள் இன்று நம் சங்க அலுவலகம் வந்து மெடிக்கல் அலவன்ஸ் படிவத்தைப் பூர்த்தி செய்து சென்றனர். நாம் அவர்களுக்கு செய்திட்ட உதவிகளையும் , விளக்கங்களையும் கேட்டு மிகவும் நெகிழ்ந்து போனார்கள் குறிப்பாக தோழர் குணசேகரன் ( PROJECT ) மற்றும் திருப்பூர் தோழர் V.K  ஆறுமுகம்  தங்கள் நன்றியறிதலை தெரிவித்து  விரைவில் நம்முடன் இணைவதாக வாக்களித்துள்ளனர் 
மூத்த தோழர் வெங்கடேஸ்வரன் ( CTO CBT ) ரூ 1000/- நன்கொடை அளித்துள்ளார்.தோழருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒரு முக்கிய அறிவிப்பு : 
(1) ஆதார் , PAN அட்டை ,மெடிக்கல் கார்டு இதைப்போன்ற முக்கிய ஆவணங்களை தவற விட்டவர்கள் உடனடியாக மாவட்ட செயலர் தோழர் அருணாசலத்திடம் தெரியப்படுத்தவும். அவர் இது குறித்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க கோவை பொது மேலாளரை சந்திக்க உள்ளார். இந்த செய்தியை காணும் நம் தோழர்கள் மற்ற தோழர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

(2)  இச்செய்தியை காணும் செயற்குழு அங்கத்தினர்கள் உடனடியாக நம் சங்க அலுவலகம் வந்து பணியில் இணைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
(3) மாவட்ட செயற்குழு கூட்டம் இம்மாதம் 11ஆம் தேதி வியாழன் அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை ஒரு சிறப்புக்கூட்டம் கூட்டவும், அதில் உரையாற்ற தமிழ் மாநில செயலர் தோழர் க .முத்தியாலு அவர்களை அழைக்க உள்ளோம். இது குறித்த அறிக்கை/அழைப்பிதழ் விரைவில் வெளியாகும்.
தோழர்களே /தோழியர்களே 78.2 சத நிலுவைத்தொகை பெற்றவர்கள் CHQ சங்கம் நிணயித்துள்ள குறைந்த பட்ச நன்கொடை ரூ 1000/-ஐ நம் சங்க பொருளாளரிடம் அளிக்க வேண்டுகிறோம். CCA அலுவலகத்திலிருந்து நிலுவைத் தொகைக்கான உத்தரவு கிடைக்கப்பெறாதவர்கள் , தங்கள் LPS மற்றும் PPO  எண்களை   மாவட்ட செயலரிடம் அளிக்கவும்.
மெடிக்கல் அலவன்ஸ் பெற பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அளிக்க கடைசி நாள் 15-06-2017. விரைந்து செயல்படவும்.
 விரைவில் அடுத்த செய்தி மடலுடன் சந்திக்க விழைகிறேன் .
தோழமை வாழ்த்துக்களுடன் 
B .அருணாச்சலம் 
AIBSNLPWA , 
கோவை மாவட்டம்.















No comments:

Post a Comment