Wednesday, 12 April 2017

OUTDOOR MEDICAL TREATMENT ALLOWANCE 
ரசீது இல்லாமல் அவுட்டோர் மருத்துவ சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வந்த அலவன்ஸ் 05-09-2011 முதல் நிறுத்தப்பட்டு விட்டது. நாம் பல்வேறு தருணங்களில், மீண்டும் இந்த அலவன்ஸ் அளிப்பது துவங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்தோம்.
அதன் பலனாக தற்சமயம் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி அளிப்பதை புதுப்பித்து 11-04-2017 அன்று உத்தரவிடப்பட்டுள்ளது . இது ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மறு பரிசீலனை செய்யப்படும் என்று உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 01-01-2007க்கு முன் ஒய்வு பெற்ற ஓய்வூதியர் களுக்கு 
(1) ஒய்வு பெறுமுன் கடைசி மாதம் பெற்ற அடிப்படை தொகை ( LPD ) + விண்ணப்பிக்கும் ஆண்டிற்கான ஏப்ரல் மாதத்திற்கான பழைய DA (1997 பேசிக் வருடம்) இதில் வருகிற கூட்டுத்தொகையை இரண்டால் வகுக்க வருகின்ற தொகை தான் ஓராண்டிற்கான  மருத்துவ அலவன்ஸ் .இது  மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். 

(2)  01-01-2007 ல் மாற்றியமைக்கப்பட்ட அடிப்படை ஊதியம் + எந்த வருடம் விண்ணப்பிக்கிறோமோ அந்த ஆண்டின் ஏப்ரல் மாத DA . இதில் 12.5 நாட்களுக்கான ஊதியமே ஆண்டு மருத்துவ படிக்கான அதிகப்பட்ச தொகையாகும். இது நான்கு சம தவணைகளாக மூன்று மாத இடைவெளியில் வழங்கப்படும்.

01-01-2007க்குப்பின் ஒய்வு பெற்றவர்களுக்கு 
ஒய்வு பெறுமுன்  பெற்ற கடைசி மாத அடிப்படை ஊதியம் + மருத்துவ படிக்கு விண்ணப்பிக்கும் ஆண்டின் ஏப்ரல் மாத பஞ்சப்படி சதவீதம் . இவ்வாறாக கணக்கிடப்பட்டு வருகிற தொகையில் 12.5 நாட்களுக்கான தொகையே ஒரு ஆண்டிற்கான அதிகப்பட்ச மருத்துவ அலவன்ஸ் ஆகும். இத்தொகையை நான்கு சம தவணைகளில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ அலவன்ஸ் ஆக வழங்கப்படும்.

மருத்துவப்படி மீண்டும் அளிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் 2011 செப்டம்பர் மாதத்திலிருந்து கோரி வந்துள்ளோம். அதற்கான பலன் இப்போதுதான் கண்டுள்ளோம் .
நம் சங்கத்தின் சாதனைகளில் மற்றுமோர் சாதனையாகும் இது.

ஒரு ஆண்டிற்கான மருத்துவ அலவன்ஸ் =
 (  LPD + Respective April DA ) X 25  = 
                             60
(LPD+APRIL DA) x 5/12

இதில் LPD  என்பது பணியில் இருந்தபோது ஒய்வு பெறுவதற்கு முன் நாம் பெற்ற Basic Pay ஆகும்.
Basic Pension அல்ல .
2017 IDA on April is 117.1%

Courtesy Com D.G's Message

No comments:

Post a Comment