Monday, 6 February 2017


தோழர்களே/தோழியர்களே 
அனைவருக்கும் வணக்கம்.
பிப்ரவரி முதல் தேதியன்று IOB, INDIAN BANK மற்றும் SBI வங்கிகளில் ஓய்வூதியம் வழங்கவில்லை. ஏன் என்று விசாரித்தபோது "வாழ்க்கை உயிர் சான்றிதழ்" கொடுக்கப்படவில்லை என்று சொன்னார்கள். ஆனால் நம் தோழர்கள் கடந்த நவம்பர் மாதமே கொடுத்துவிட்டார்கள். endorsement வங்கியால் கொடுக்கப்பட வில்லை. இந்த விபரங்களை மாவட்ட செயலர் வங்கி நிர்வாகத்திடம் போய் முறையிட்டபின் 04-02-17  ஓய்வூதியம் வழங்கப்பட்டது  இந்த விஷயத்தில் IOB யின் செயல்பாடுகள் மிகவும் சரியில்லை.
தோழர்கள் தோத்தாத்திரி ,  ஜான் ,  சக்கரை,  பூபதி போன்றோர் IOB  மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள். இவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
தோழர்கள் சேகர்,  பழனிச்சாமி ,  செல்வராஜ் போன்றோர் ஸ்டேட் பாங்க் மூலம் ஓய்வூதியம் பெறுகின்றனர் அவர்களும் பாதிக்கப்பட்டனர். சிலர் நம்மிடம் இன்னும் சொல்லவில்லை.
Bank Endorsement கொடுக்கவில்லை,
ஆனால் தண்டனை அனுபவித்தவர்கள் நம் தோழர்கள் எனும்போது நெஞ்சு துடிக்கிறது. ஓய்வுபெற்று கோவையில் settle ஆனவர்கள்ளின் PPO book transfer ஆகி வரவில்லை. IOB வங்கி செயல்பாடுகள் குறித்து அதாத்தில் case எடுக்க வேண்டும்.
விடுபட்ட தோழர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஓய்வூதியம் பெறும் வங்கி கிளைக்கு சென்று Life Certificate முறைப்படி Entries போடப்பட்டுள்ளதா என விசாரிக்கவும்.

  தபால் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் வாங்கும் ஓய்வூதியர்களுக்காக , மேல் மட்டத்தில் 
பேசி சுமார் 5 லட்சம் வாங்கப்பட்டது.ஆனால் ஓய்வூதியர்கள் 40,50 என்ற எண்ணிக்கையில் உள்ளபடியால் ஒவ்வொரு ஓய்வூதியருக்கும் 3 ஆயிரம் அல்லது 4 ஆயிரம் மட்டுமே கொடுக்கிறார்கள். இது தபால் அலுவலகத்தில் உள்ள பிரத்தியேகப் பிரச்சினை. தலைமை தபால் அலுவலகத்தில் ரூ 10,000/- வரை கொடுக்கிறார்கள். குனியமுத்தூர் மற்றும் இராமநாதபுரம் sub post office களில் போதுமான நிதி வருவதில்லை .கொடுக்கப்படுவதில்லை .
இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு மற்ற வங்கிகளைப்போல மாதக்கடைசியில் தபால் ஆபிஸ் ஓய்வூதியர்கள் கணக்கில் பணம் முழுமையும் பற்று வைக்க வேண்டும்.
நமது உறுப்பினர்கள் Postal ATM Card வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்  இதை மேல்மட்டத்தில் case எடுத்து தீர்த்து வைக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
78.2 சத நிலுவை STR கோவை தோழர்களுக்கு Revised பென்ஷன் ஆர்டர் வங்கிகளுக்கு வந்த பிறகும் நிலுவைத்தொகையினை கணக்கில் இன்னமும் சேர்க்கப்படவில்லை.
இதுபோன்ற அன்றாட பிரச்சினைகளில் கோவை மாவட்ட சங்கம் உழன்று வருகிறது. 
பிரச்சினைகள் தீரும் ,பிரகாசம்  வரும் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகருகின்றன.
நன்றி தோழர்களே விரைவில் மீண்டும் சிந்திப்போம்.
தோழமை வாழ்த்துக்களுடன் 
B அருணாச்சலம் 
மாவட்ட செயலர்,
கோவை மாவட்டம்.
94430 59011.







































No comments:

Post a Comment