Monday, 27 February 2017

அன்புள்ள தோழர்களே/ தோழியர்களே 
வணக்கம் .
பிப்ரவரி மாதம் சில பல நல்ல நிகழ்வுகளுடன் நிறைவடைகிறது. 01-01-2007 க்கு முன்பாக ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு 78.2 சத IDA நிலுவை தொகை பல மாவட்டங்களில் வரவு வைக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. மார்ச் 31க்கு முன்பாக அனைத்து Pre 2007 ஓய்வூதியர்களுக்கான நிலுவைத்தொகை  அளிக்கப் பட்ட பின் Post  2007 கேஸ்கள் தீர்க்கப்பட்டு நிலுவைத்தொகைகள் வழங்கப்பட உள்ளது.

நம் தலைவர்கள் 16ம்  தேதி வாக்கில் டில்லி சென்று 8 நாட்கள் வரை தங்கி இருந்து DOT மற்றும் BSNL உயர் அதிகாரிகளை பார்த்துப் பேசி நடைமுறை சிக்கல்களை எடுத்துரைத்து வந்துள்ளனர். இதன் விபரங்கள் 27-02-2017 அன்று Com PSR Speaks எனும் தலைப்பில் வெளியாகி உள்ளது. எனினும் நமக்கு மத்திய அரசு சம்பள கமிஷன் அடிப்படையில் ஓய்வூதிய மாறியமைப்பு என்பது சற்று கால தாமதமாகும் என்று தெரிகிறது.

நாமும் சற்று அழுத்தம் கொடுத்தால்தான் காரியம் நடைபெறும் எனும் நிலைமை நிலவுகிறது. இதற்கு அனைத்து ஓய்வூதியர் அமைப்புகளுடன் பேசி ஒரு ஒருங்கிணைப்பு கான தொடக்கப்பணி நடந்துள்ளது.BSNL மற்றும் MTNL ஓய்வூதியர் அமைப்புகள் அனைத்து ஓய்வூதியர்களுடன் ஒன்று சேர்ந்து போராடவும் தேவைப்பட்டால் சில அரசியல் சக்திகளின் ஆதரவுடன் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் போராடி நம் ஓய்வூதியங்களை 7th மத்திய சம்பளக்கமிஷன் அடிப்படையில் மாற்றிவிட்டால்,   பின் வரும் காலங்களில் மத்திய அரசுசம்பளக்கமிஷன் அமைத்தால் அதன் பலன்கள் நமக்கும் வந்து சேரும்.
மத்திய அரசு ஓய்வூதியர்களை கண்காணிக்கும் CCS RULES  1972 பிரகாரம் தான் நமக்கும் ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன  மற்றும் மத்திய அரசின் லீவ் rules , கிராஜுவிட்டி rules , Basic Pension Fixation என எல்லாம் நமக்கும்  அனுசரிக்கப் படுகின்றன. எனவே  நாம் கோரும் 7th ஓய்வூதிய மாற்றமும் நியாயமானதும்,சரியான தீர்வும் ஆகும். இதனையே நம்தலைவர்கள் Telecom Secretary  யிடம் வலியுறுத்தியுள்ளனர். அவரும் "உங்கள் கருத்துக்களை  நான் புரிந்து கொண்டுள்ளேன் ஆனால் முடிவெடுக்க சற்று  காலம் பிடிக்கும் " என்று கூறியுள்ளார். தேசிய அளவில் பென்சன் அதாலத் நடத்த கூறியுள்ளோம்.அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி கொடுத்துள்ளனர்.

தோழர்களே நாம் அனைத்து கோரிக்கையையும் பெற நம்மிடம் அதிக,மிக அதிகமான உறுப்பினர் எண்ணிக்கை தேவை. ஓய்வுபெறும் அலுவலர்களை முன்னதாகவே பார்த்து நம் சாதனைகளை எடுத்துக்கூறி நம் அமைப்பில் இணைக்க வேண்டும். எந்த அமைப்பையும் சாராமல் இருக்கும் ஓய்வூதியர்கள் குறிப்பாக குடும்ப ஓய்வூதியர்களைக் கண்டறிந்து நம் சங்கத்தில் இணைக்க வேண்டும். மாவட்ட/கிளை நிர்வாகிகள் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

78.2 சத நிலுவைத்தொகை பெறுபவர்களிடம் நம் மத்திய சங்கம் நிர்ணயித்துள்ளபடி குறைந்த பட்சமாக ரூ 1000/- பெற வேண்டும். அதன் பகுதிப்பணத்தை மத்திய,மாநில  சங்கங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.
ஆண்டு சந்தா செலுத்தும் உறுப்பினர்களிடம் ரூ 1000/- கூடுதலாகப் பெற்று ஆயுள்கால உறுப்பினர்களாக ஆக்க வேண்டும்.

நமக்காக நம் சங்க செய்திகளை அழகிய வடிவில் எளிய ஆங்கிலத்தில் வெளி வரும் "பென்ஷனர் பத்திரிக்கா " இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் இதழுக்கு ரூ 500/- செலுத்தி ஆயுள்கால சந்தா தாரராக ஆக்க முற்சிக்க வேண்டும்.
கண் துஞ்சா பணிமுடித்து காரியம் கைக்கூட உறுதியேற்போம் 

1 comment:

  1. the letter by our D.S.is excellent.I have the following few suggestions for the better
    improvement of our Website.
    1.Link Tamil Daily Papers website.(As in TVL site.)
    2.List of Life Members of Kovai division with all details.
    3.List of Approved Hospitals in Kovai SSA.
    4.Phone numbers of Office bearers in Kovai dist.
    With best wishes
    balan

    ReplyDelete