தோழர்களே/ தோழியர்களே,
நாம் போராடி வென்றெடுத்த 78.2 சதமான நிலுவைத்தொகையினை ஓய்வூதியர்களுக்கு 31-12-2016 க்குள் அளிக்கப்பட்டுவிட வேண்டுமென்பது காபினெட் முடிவாகும். இந்த காலக்கெடுவினை எவராலும் மாற்ற இயலாது,
ஆனால் அதற்கான வேலைகள் மிக மெதுவாக நடைபெறுவதை
பார்த்தால் இம்மாத இறுதிக்குள் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விடுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்தப்போக்கினை கண்டித்து
தமிழ்மாநில AIBSNLPWA  சங்கம் சார்பாகவும்,
சென்னை தொலைபேசி மாவட்ட சங்கம் சார்பாகவும் 
சென்னை  மந்தவெளிப்பாக்கம் 
RK சாலையில் உள்ள 
CCA அலுவலகம் முன்பாக 
 16-12-2016 வெள்ளிக்கிழமை 
 காலை 1030 மணியளவில்
                    ஒரு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்                              நடைபெறும்.
தோழர்கள்/தோழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றி பெற செய்ய அன்புடன் அழைக்கிறோம்.
இவண்
தமிழ் மாநில மற்றும்
சென்னை தொலைபேசி மாவட்ட
AIBSNLPWA சங்கங்கள்

No comments:
Post a Comment