District President R.ROBERTS Mob 94428 42880 District Secretary: R. JEGADEESWARAN Mob: 94869 77488 District Treasurer : S. KOTTIAPPAN Mob : 94861 05152 Web e-mail: kovaidivn@gmail.com Web Master : N.MOHAN 80560 66995
Wednesday, 7 September 2016
Tuesday, 6 September 2016
2) இரயிலில் செல்வதாக இருந்தால், பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இறங்கவும். டவுன் பஸ் எண் 278, 278E , 94D , 270 , 270D . 270E இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏறி " மேக்ரி சர்க்கிளில் " இறங்கவும். நமது ஷீஷ் மஹால் தென் புறத்தில் சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ளது.
3) பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து, மெஜெஸ்டிக் பஸ் ஸ்டேஷன் லிருந்து டவுன் பஸ் எண் 279, 279E , 284H , 286F, 286G , 287JA , 288D , 287H , V -285 இவற்றில் ஏதேனும் ஒரு பேருந்தில் ஏறி ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் இறங்கவும்..
4) யஷ்வந்த்புர் ரயில் நிலையத்தில் இருந்து 94B , 250N , 251C , 252A , 257H G -8 இதிலேறி மேக்ரி சர்க்கிளில் இறங்கவும்.
Happy Journey !!!
Thanks to STR whatsApp message
Monday, 5 September 2016
அருமைத் தோழர்களே/தோழியர்களே ,
வணக்கம்.
18-09-2016 அன்று பெங்களுருவில் நடைபெற இருக்கும் ஒருநாள் சிறப்பு மாநாட்டில் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கோவையிலிருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் விபரங்கள் உங்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன .
நம்பர் இரயில் பெயர் CBT புறப்படும் நேரம் BG சேரும் நேரம்
16316 பெங்களூரு எக்ஸ்பிரஸ் 0100 0835
11014 லோகமான்ய திலக் எக்ஸ் 0845 1545
12678 பெங்களூரு எக்ஸ்பிரஸ் 1250 1950 சிட்டிங் மட்டும்
16525 பெங்களூரு எக்ஸ்பிரஸ் 2255 0720
12258 யஷ்வந்தபுர் எக்ஸ்பிரஸ் 0140 0930 சனி மட்டும்
16332 மும்பை எக்ஸ்பிரஸ் 1335 2125 சனி மட்டும்
16528 யஷ்வந்தபுர் எக்ஸ்பிரஸ் 2330 0800
இதில் 12678 பெங்களூரு எக்ஸ்பிரஸ்ஸில் சில இருக்கைகள் காலியாக உள்ளன விரைந்து சென்று முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மற்ற இரயிகளில் முன்பதிவுக்கு முயலவும். தத்கால் டிக்கட் 17ஆம் தேதியன்று முன்பதிவு செய்யலாம்.
வாருங்கள் தோழர்களே !
திரளாக திரண்டு வாருங்கள் !!
நம் சங்கத்தின் புகழ் பரப்பி வாருங்கள் !!!
தோழமை வாழ்த்துக்களுடன்
மாவட்ட சங்க நிர்வாகிகள்
AIBSNLPWA கோவை மாவட்டம்.
Sunday, 4 September 2016
அன்பு தோழர்களே/ தோழியர்களே
வணக்கம்..
நேற்று ( 03-09-2016 ) அன்று நடைபெற்ற சிறப்பு செயற்ககூட்டத்திற்கு நம் மாவட்ட தலைவர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார் .
சென்ற மாதம் 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற்ற மாநில மாநாடு சிறப்பாக நடைபெற பண உதவி, பொருள் உதவி மற்றும் உடல் உழைப்பு நல்கி மிக மிக நல்ல முறையில் அனைவரும் பாராட்டும் வகையில் மேன்மையாக மாநாடு அமைய பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 18 ஆம் தேதி பெங்களுருவில் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டிற்கு நம் கோவை தோழர்கள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். காலை 1000 மணியிலிருந்து மதியம் 0100 மணி வரை நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்தில் 78.2% IDA நாம் பெற பல்வேறு வகைகளில் உதவி செய்த மத்திய அமைச்சர் மாண்புமிகு
அனந்தகுமார் அவர்களுக்கு நம் நன்றியினை அளிக்கும் விதமாக நாம் பெருமளவில் சென்று கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்பிக்க வேண்டும்.
17-09-2016 இரவு தங்குவதற்கும், 18-09-2016 காலை refresh செய்து கொள்வதற்கும் தகுந்த வசதிகள் கல்யாண மஹாலில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன . 17th இரவு உணவு & 18th காலை சிற்றுண்டி செலவுகளை சார்பாளர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். 18th அன்று மதிய உணவு வழங்கும் பொறுப்பினை பெங்களூரு மாவட்ட சங்கம் ஏற்றுள்ளது .
மாநாட்டிற்கு செல்லும் தோழர்களுக்கு போக்கு வரத்து படியாக ஒவ்வொருவருக்கும் ரூபாய் 300/- கோவை மாவட்ட சங்கத்தின் சார்பாக வழங்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே பெங்களூரு சிறப்பு மாநாட்டிற்கு செல்லும் தோழர்கள் மாநில மாநாட்டு வரவேற்பு குழு பொருளாளர் தோழர் K சிவக்குமார் அவர்களிடமிருந்து பெங்களுருவில் பெற்றுக்கொள்ளலாம் .
வாருங்கள் தோழர்களே /தோழியர்களே !
கொங்கு தரணியிலிருந்து புறப்பட்டு செல்லும் நாம்
எங்கும் புகழ் பரப்பி வெற்றிக்கனியை ஈண்டு வருவோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர்.திருவேங்கடசாமி,
கோவை மாவட்ட செயலாளர்
94871 64321
Thursday, 1 September 2016
அறிந்து கொள்ள ஒரு தகவல்
"ஓய்வூதியர் இயற்கை எய்துவிட்டால் , குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் எந்த வித தாமதமும் இருக்கக்கூடாது என்பதற்காகவே கணவன்/மனைவி ஆகியோர் இணைந்த கூட்டுக்கணக்கு (Joint Account With Spouse ) ஏற்படுத்தப்படுகிறது . ஆனால் சில சமயங்களில் இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் குடும்ப ஓய்வூதியம் பெற 4 அல்லது 5 மாதங்கள் ஆகிவிடுகின்றன .அதே சமயம் கூடுதல் ஓய்வூதியம் இந்த காலகட்டங்களில் வழங்கப்பட்டிருந்தால் அவை உடனே பிடிக்கப்பட்டு விடுகின்றன ." என்று ஒரு கோரிக்கை எழுப்பப் பட்டது.
Department of Expenditure வழிகாட்டு முறை :
" DP & PW OM No 1/27/2011-P &PW (E ) /20-09-2013 -ல் கூறப்பட்டுள்ள நெறிமுறைகள் அனைத்து CPPC ல் உள்ள பொது மேலாளர்கள் களுக்கு OM No CPAO /Tech /Simplification /2014-15/595-96 dtd 14-10-2014 ல் உள்ளபடி ஓய்வூதியரின் இறப்பு சான்றிதழ் பெற்ற உடனே ,அதிகப்படியான ஓய்வூதியம் அளிக்கப்பட்டிருந்தால் அவற்றை திரும்ப பிடித்துக்கொள்ளலாம் என்ற பொறுப்பேற்பு (Understanding ) மற்றும் குடும்ப ஓய்வூதியரின் வயது/பிறந்த தேதி சான்று ஆகியவைகளை பெற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குள் குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டுமென்று வங்கிகள் அறிவுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த இடைப்பட்ட காலத்தில் கையாளப்பட்டுள்ள பரிவர்த்தனைகள் குறித்த விபரங்கள் குடும்ப ஓய்வூதியரிடம் அறிவிக்கப்பட்ட வேண்டும்.
கோரிக்கை 2
" கூடுதலாக அளிக்கப்பட ஓய்வூதியத்தை திரும்ப பிடித்துக்கொள்ள பொறுப்பேற்பு (Understanding ) அளித்த போதிலும் அதனை ஓய்வூதியம் வழங்கும் வங்கி CPPC க்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்தாத காரணத்தினால் , முதல் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு கால தாமதம் ஆகிறது"
நெறிமுறைகள் :
உரிய நேரத்தில் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏற்ப வங்கிகளின் உள்கட்ட அமைப்பு முறைகளை சரி செய்ய வேண்டும் என்று அனைத்து வங்கிகளும் அறிவுத்தப்பட்டுள்ளன
தொடரும்
Subscribe to:
Posts (Atom)






