தோழர்களே நமது மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் மெய் நிகர் காணொளி மூலமாக திரு . குருசாமி அவர்கள் தலைமையில் சென்ற வியாழன் (24-06-2021) நடைபெற்றது . ஏற்பாட்டை தோழர் ராமலிங்கம் செய்து கொடுத்தார். தோழர் கோட்டியப்பன், புலவர் கோவிந்தராஜன், ஸ்ரீதரன், தோழியர் கல்யாணி ஹரிஹரன் சிவகாமசுந்தரி, பிச்சமுத்து, மாவட்ட செயலாளர் ஆர் டி மாநில உதவி செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் பங்கு பெற்றனர்.
தனது தலைமை உரையில் சங்க அலுவகத்தில் வாடகை ஏற்றம் நிலுவைத் தொகை சம்பந்தமாக நம்முடைய தலைவர் எடுத்துரைத்தார்.
, தோழர் RT தனக்கு ஈமெயில் வந்ததையும் 5 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு வருட நிலுவை செலுத்த வேண்டும், மற்றும் மாதம்தோறும் வாடகை ரூபாய் 5000 செலுத்த வேண்டும் என்று தனக்கு ஈ-மெயில் வந்ததை சுட்டிக்காட்டினார். இந்த தருணத்தில் இதை எப்படி கையாளுவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
எனவே நம்முடைய மாநில உதவித் தலைவர் தோழர் சிபி மூலமாக நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் கொடுத்தோம். அந்தக் கடிதத்திற்கு எந்த பதிலும் இல்லை.
அருணாசலம் பேசும்போது கடந்த நான்கு மாதங்களாக கோவை மாவட்டத்தின் நிர்வாகம் நம்மை அழைக்கவேர சந்திக்கவோ தவிர்த்து வந்தது. கொரோனாவை காரணம் காட்டி நம்முடைய நேர்காணலை தட்டிக் கழித்தது.
இது சம்பந்தமாக நமது தோழர்கள் வழக்குக்கு செல்லலாம் என்றும் மாநில மட்டத்தில் பேசலாம் என்றும் தெரிவித்தனர்.
இப்படி வாடகை கொடுத்துக் கொண்டிருக்கும் போதே நம்மை காலி செய்யச் சொல்வது சரியான போக்கு இல்லை என்றும் எடுத்துச் சொன்னார்கள்.
அதற்கு நம்முடைய தலைவர் இன்றைய காலத்தில் இவையெல்லாம் சாத்தியமாகாது எனவே மீண்டும் ஒரு கடிதத்தை கோவை மாவட்டத்தின் தலைமை அதிகாரிக்கு கடிதம் வாயிலாக ஒரு சந்திப்பை கேட்டும் அந்த வாடகை கொடுக்க முடியாது என்றும் அதற்கு மாற்று ஏதாவது வேண்டியும் கடிதம் கொடுக்கலாம் என்று கூறி,
இந்த அஜெண்டாவை முடித்து வைத்தார்.
கோவைக்கு CGHS வர இருப்பதை அருணாச்சலம் எடுத்துக் கூறினார்.
கோவை பகுதியில் ஆல் இந்திய ரேடியோ, பட்டுப்
புழு ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலை அலுவகம் , மற்றும் கார்டெக்ட் ஃபேக்டரி போன்றவற்றின் அதிகாரிகள் ஒன்று சேர்ந்து ஒரு வாட்ஸ்அப் குரூப் & ஒரு நிர்வாக குழுவையும் அமைத்துள்ளனர்.
அதில் நம்முடைய திரு ஷாஜகான் PGM (ஒய்வு) மற்றும் தோழர் அருணாசலம் அவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர். மேற்சொன்ன அதிகாரிகள் பேசி டெல்லிக்கு செய்திகளை தரப்பட்டு டெல்லி CGHS Head Quarters பேசி கோவையில் அமைப்பதுபற்றி முடிவெடுப்பதை சென்னை அலுவலகத்துக்கு தெரிவித்துள்ளனர்.
சென்னை CGH AD staff கோவைக்கு வந்து இடத்தையும் மற்றும் மருத்துவமனைகளையும் ஆய்வு செய்வார்கள். கோவை, நீலகிரி,
சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் பாலக்காடு உள்ளடக்கிய யூனிட் ஆக செயல்படும். ஒரு டாக்டர்,
ஒரு அலுவலர்
, மருந்து கையாளுனர், ஒரு நர்ஸ் உடன் இந்த Office செயல்படும் . அது நமது கோவை தொலைபேசி நிலையத்தில் செயல்பட உள்ளது.
நம்முடைய தொலைபேசி துறையைப் பொறுத்தவரையில் இன்னும் சரண்டர் சர்டிபிகேட் வாங்கி ஒட்டு
மொத்த பணத்தை கட்டி உறுப்பினராக நாம் பதிவு செய்யவில்லை.
நம்முடைய தோழர்கள் விவாதத்திற்குப் பிறகு CGHS அமைப்பு இங்கே வந்த பிறகு நாம் முயற்சி எடுக்கலாம். ஏனென்றால் நாம் இப்போதே போய் CGHS சேர்ந்துவிட்டால் அவசரகால மருத்துவ உதவியை நாம் பெற முடியாது என தெரிவித்தனர் அதனை இந்த செயற்குழு ஏற்றுக்கொண்டது.
தோழர். RT நம்முடைய மாவட்டத்தின் நிதி நிலையை தெரிவித்தார் சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதியிலும், சேவிங் பேங்க் நிலுவையில் 2 லட்சமும் உள்ளது என்றார். அனைத்து மட்டங்களுக்கும் உறுப்பினர் பகுதி பணம் செலுத்தப்படுள்ளது என்றுஎடுத்துரைத்தார். மேலும் மாவட்டத்தில் உள்ள புதிய பிரச்சினைகளை மாநில பொறுப்பாளர்களிடம் தெரிவித்தால் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்படும் .அடுத்த கூட்டம் இன்னும் விரிவடைந்து நடக்கவும் மாதம் ஒரு கூட்டம் நடக்கவும் இந்த செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. நமது மாவட்டத்தின் பிரச்சினைகளை தொகுத்தும் அன்றாடம் நம் மாவட்ட வாட்ஸப்பில் பதிவு செய்ய தோழர் ஸ்ரீதர் அவர்கள் உதவி புரிவார். இதனை செயற்குழு ஏற்றுக்கொண்டது.
தோழமை வாழ்த்துகளுடன்
அருணாச்சலம்

மாநில உதவி செயலாளர்.
No comments:
Post a Comment