இன்று (24-06-2021) காலை வால்பாறை யில் பல்லாண்டுகள் பணியாற்றி , தொழிற் சங்க பணிகளில் தொய்வின்றி சேவையாற்றி பணி ஒய்வு பெற்றுநம் கோவை மாவட்ட AIBSNLPWA ஆயுட்கால உறுப்பினருமான தோழர் வெள்ளையன் இயற்கை எய்தி விட்டார் எனும் துயர செய்தியினை மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
வால்பாறை பகுதியில் நமது அனைத்து ஊழியர்களிடமும், அனைத்து பகுதி மக்களிடமும் நன்கு பரிச்சயமானவர். அவர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். அவரது மறைவு நமக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு . ஒரு காலத்தில் 'வால்பாறை' என்றாலே 'வெள்ளையன்' என்று தான் பொருள் கொள்வர்
காலமான நமது சங்க மூத்த உறுப்பினர் திரு வெள்ளையன் அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த அஞ்சலி.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவோம்.
AIBSNLPWA,
COIMBATORE DISTRICT.
No comments:
Post a Comment