Com.P.S.ராமன்குட்டி அவர்களின் மகள் அனிகுட்டி தந்த தகவல் படி தற்போது PSR நலமாக உள்ளார். மருத்துவர்கள் குழு தற்போது வந்து பார்த்தார்கள். X-Ray முடிவுகள் மற்றும் Lab அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தார்கள். இன்றும் ஆக்சிஜன் உதவி தரப்பட்டது. நாளை அது அகற்றப்படும். இன்சுலின் தருவதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவிட் மருத்துவம் என்பதால், மருத்துவர் தரும் சிறப்பு குறிப்புப்படி உணவு தரப்படுகிறது. அவர் விரும்புகிற வழக்கமான உணவு இல்லை. எந்த கைப்பேசி அழைப்புக்கும் பதில் தராமல் தொண்டைக்கு முழு ஓய்வு தருவதால், அவர் மகளிடம் பேசக்கூடிய அளவு தேறிவிட்டார். மேலும் நல்லபடியாக நடக்கும் என நம்புவோம்.= P.K.கோபால பிள்ளை திருவனந்தபுரம். Com.கோபால பிள்ளை கேரள மாநிலத்தின் தீவிர உறுப்பினர். PSR-க்கும், அவரது குடும்பத்தார்க்கும் மிகவும் நெருக்கமானவர். நமது அகில இந்திய தலைவர் சீக்கிரமாக தேறி வருவது நல்ல நிகழ்வு.
= P.கெங்காதர ராவ், பொதுச்செயலர்.
தமிழாக்கம்:
த.அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி
No comments:
Post a Comment