நமது சங்கத்
தலைவர்கள் மத்திய அமைச்சருடன் பேச்சு வார்த்தை
MTNL & BSNL பென்சனர் சங்க கூட்டமைப்பு (CBMPA) தலைவர்கள் M - K. பக்சி, S. S. நந்தா & கிசன் சிங் ஆகியோர் 11.06.2019 அன்று மத்திய கனரக தொழிற் மற்றும் பொதுத்துறை நிறுவன
அமைச்சர் மாண்புமிகு
அரவிந் கன்பத் சவந்த் அவர்களை சந்தித்தனர். அமைச்சர் பொறுப்பேற்றதற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். BSNL, MTNL -ல் பென்சன் மாற்றம்
குறித்து அவரிடம் விவாதித்து இக்கோரிக்கை மீது தீர்வு காண தனது உதவியை நல்கிட கோரினர்.பென்சன் மாற்றம் குறித்து பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை, அனுப்பிய கேள்வி மற்றும் ஆலோசனைகளுக்கு DOT - பதில் தர தயங்குவதை எடுத்துக்
காட்டினர். அவற்றை பரிவுடன் கேட்ட அமைச்சர் இது விசயமாக தான் தலையிட்டு
உதவி செய்வதாக உறுதியளித்தார்.மேலும் இது சம்பந்தமாக, தேவைப்பட்டால் தொலை தொடர்பு அமைச்சரிடம் பேசுவதாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் BSNL & MTNL
-ல் நிலவும்
சூழ்நிலைகளைக்கு ஒரு தீர்வு காணவும் அரசு மிகுந்த கவனத்தை செலுத்த உள்ளது என்றார்.
BSNL / MTNL - பென்சனர்களுக்காக தன் கதவு எப்போதும் திறந்திருக்கும் என்ற மனம் நிறைந்த பேச்சோடு கூட்டம் முடிந்தது.
( மத்திய சங்க
செய்தி தமிழாக்கம்: த. அன்பழகன், மாவட்டச்
செயலர், புதுச்சேரி )
A Good Start in right direction will have a good END
No comments:
Post a Comment